நடு இரவு ஆகிவிட்டது
நான் தான் கடைசி ஆள்
ஹோட்டலில் வேறு யாருமில்லை
டேபிள் துடைத்து கொண்டிருந்த பையன்
வேண்டா வெறுப்பாக வந்தான்
என்ன இருக்கு ------என்றேன்
தோசைய தவிர ஒன்னுமில்லை------
சரி கொண்டா----------
மாஸ்டர் ஒரு தோசை-----------
மீண்டும் துடைக்க சென்று விட்டான்
உடல் அசதி, சோம்பல் முறித்தேன்
சின்ன பையன் இந்த இரவில் துடைக்கிறான்
நமக்கு சோம்பல் என எண்ணி கொண்டேன்
அவனை பார்க்க பாவமாக இருந்தது
சாப்பிட்டியா------ஒரு வகையாக என்னை பார்த்துவிட்டு
இல்லை ------- என தலையாட்டினான்.
இங்கே வா----------
வெறுப்புடன் வந்தான் ---என்ன
முந்திரி தோசை இருக்கா----------
இத முதல்லே சொல்ல வேண்டியதுதானே ---------
மாஸ்டர் .....என்று இழுத்தவனிடம்
ரெண்டு சொல்லு ----------என்றேன்
முறைத்து கொண்டே ரெண்டு சொன்னான்
ஐந்து நிமிடம் அவனையே பார்த்திருந்தேன்
தோசை வந்தது.
ஒன்றை நான் எடுத்து கொண்டு
சாப்பிடு என்றேன் ----அவன் கல்லாவில் உள்ள
ஆளை பார்த்தன்.
இது என் கண்ணக்கு------என்றேன்
அவர் தலையசைத்தார்
கையைகழுவி வேகவேகமாக சாப்பிட்டான்
முகத்தில் ஒரு அபரிமிதமான சந்தோசம் அவனுள்.
வேற என்ன சார் (!) வேணும்.---------
ஒரு முத்தம் கொடுக்கனும்டா உனக்கு -----------
சிரித்தான். அழுக்கு கன்னத்தில் முத்தமிட்டேன்
வரடா .....தலையசைத்தான்.
காசை கொடுத்து வெளியே வந்தபோது
மனசு சிலாகித்தது.
தின கூலி எனக்கு இதாவது செய்ய முடிந்ததே
நான் தான் கடைசி ஆள்
ஹோட்டலில் வேறு யாருமில்லை
டேபிள் துடைத்து கொண்டிருந்த பையன்
வேண்டா வெறுப்பாக வந்தான்
என்ன இருக்கு ------என்றேன்
தோசைய தவிர ஒன்னுமில்லை------
சரி கொண்டா----------
மாஸ்டர் ஒரு தோசை-----------
மீண்டும் துடைக்க சென்று விட்டான்
உடல் அசதி, சோம்பல் முறித்தேன்
சின்ன பையன் இந்த இரவில் துடைக்கிறான்
நமக்கு சோம்பல் என எண்ணி கொண்டேன்
அவனை பார்க்க பாவமாக இருந்தது
சாப்பிட்டியா------ஒரு வகையாக என்னை பார்த்துவிட்டு
இல்லை ------- என தலையாட்டினான்.
இங்கே வா----------
வெறுப்புடன் வந்தான் ---என்ன
முந்திரி தோசை இருக்கா----------
இத முதல்லே சொல்ல வேண்டியதுதானே ---------
மாஸ்டர் .....என்று இழுத்தவனிடம்
ரெண்டு சொல்லு ----------என்றேன்
முறைத்து கொண்டே ரெண்டு சொன்னான்
ஐந்து நிமிடம் அவனையே பார்த்திருந்தேன்
தோசை வந்தது.
ஒன்றை நான் எடுத்து கொண்டு
சாப்பிடு என்றேன் ----அவன் கல்லாவில் உள்ள
ஆளை பார்த்தன்.
இது என் கண்ணக்கு------என்றேன்
அவர் தலையசைத்தார்
கையைகழுவி வேகவேகமாக சாப்பிட்டான்
முகத்தில் ஒரு அபரிமிதமான சந்தோசம் அவனுள்.
வேற என்ன சார் (!) வேணும்.---------
ஒரு முத்தம் கொடுக்கனும்டா உனக்கு -----------
சிரித்தான். அழுக்கு கன்னத்தில் முத்தமிட்டேன்
வரடா .....தலையசைத்தான்.
காசை கொடுத்து வெளியே வந்தபோது
மனசு சிலாகித்தது.
தின கூலி எனக்கு இதாவது செய்ய முடிந்ததே
நன்றி- புல்லட் பாண்டி (மாயவரம்)
5 Comments
கண்கலங்க வைத்த பதிவு..... மனிதர்கள் மனங்கள் இன்னும் சாகவில்லை என்பதை அல்லது சாக கூடாது என்பதை சொல்லும் நல்ல பதிவு. இது நிஜமா அல்லது கதையா எதுவாக இருந்தாலும் இதில் படிப்பினை இருக்கிறது. பசியோடு இருக்கும் ஒருவனுக்கு உணவு வாங்கி கொடுத்தது அதே நேரம் சிறுவன் என்றதும் அவனுக்கு முத்தம் ஜாதி, மத பேதம் இன்றி கொடுக்க தோன்றியது. நல்லபதிவு தோழரே. நன்றி.
ReplyDeleteமனசை ஒரு மாதிரி பண்ணிட்டீங்க சார்....
ReplyDeleteநாகு
www.tngovernmentjobs.in
மனதை நெகிழ வைத்த பதிவு !
ReplyDeleteமிகவும் நல்ல காரியம்..
ReplyDeleteஉங்கள் மனதில் ஒரு இறகு தொட்டது போல் இருக்கலாம்.
அந்த சிறுவன் மனதோ என்றென்றும் உங்களிடம் அன்பு காட்டிக் கொண்டே இருக்கும்!
அருமையா எழுதி இருக்கீங்க கண்ணில் நீர் கோர்த்துவிட்டது, ஒரே ஒரு கேள்விதான் எழுந்தது "உழைப்பவனுக்கு இந்த நிகழ்வு ஒரு எதிர் பார்ப்பை ஏற்படுத்திருமோ என்பதுதான். கதையா பார்க்கும் போது மிகவும் அருமை.
ReplyDeleteDrop Anything