டேய் மச்சான், அங்க பாருடா!!

தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள். இந்த வாக்கியத்தை ஆச்சரியக் குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்..
மாணவன்: டேய் மச்சான், அங்க பாருடா!!

மனைவி: ஏங்க உங்க பிரண்டுக்கு பார்த்திருக்குற பொண்ணு நல்லாவேயில்லையே... நீங்களாவது சொல்லக் கூடாதா?
கணவன்: நான் ஏன் சொல்லணும்?
மனைவி: : நீங்க அவரு பிரண்டுதானே..
கணவன்: அவன் மட்டும் எனக்கு சொன்னானா என்ன?


ஹலோ, அண்ணாமலை இருக்காரா?" 
"ஐய்யா குளிக்கறாரு" 
"சாரிங்க, ராங் நம்பர்"

பரிட்சையிலே தெரிஞ்ச கேள்வியை எல்லாம் முதல்லே எழுதணும். 
தெரியாத கேள்வியை கடைசீலே எழுதணும்" 
"பதிலை எல்லாம் எப்போ எழுதணும் டீச்சர்?"

காதலன்: இன்னிக்கு என்ன ரொம்ப அழகாய் இருகிறாய் புது டிரஸ் சூப்பர்... 
காதலி:  நன்றி :எங்கள் கல்யாண நாள்  எனது கணவர் வாங்கி தந்தது... 

காதலன்: இருபது வருடம் ஆகியும் இன்னும் நீ மாறவேயில்லை... 
காதலி ஆமா அதே வீடு தான்,அவருக்கு சம்பளம் குறைவு

டாக்டர் : உங்களுக்கு பத்து மணிக்கு ஆபரேஷன்...கடைசி 
ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.... 
நோயாளி: இதுவே உங்களுக்கு கடைசி ஆப்ரேஷனாய் இருக்கட்டும்..  

தலைவருக்கு இருந்தாலும் இந்த நக்கல் கூடாது.... 
எதுக்கு சொல்லுறே? எதிர் கட்சி தலைவருக்கு 
படை,சொறி வந்தததை சுட்டிக்காட்டி இந்த படை 
போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்று சொல்லுகிறார்

நானும் என் மனைவியும் காதலித்து கல்யாணம் செய்தவர்கள் 
எனக்கு தெரியும் ? எப்படி... யாரு சொன்னா ?
அடிக்கடி உங்கள் மனைவி 
காற்றுவாங்க போனேன் வரும் வழியில் ஒரு கழுதையை வாங்கிவந்தேன் என்று பாடுவதை கேட்டது உண்டு.... 

டாகடர் : உங்களுக்கு என்ன வியாதி ? 
வந்தவர் : நான் நோயாளி இல்லே நன்கொடை வாங்க வந்தவன்... 
டாகடர் : அப்படியா அப்ப சின்ன அபரேஷன் பண்ணிவிட்டால் 
எல்லாம் சரியாகிவிடும்...  

"விமானம், ராக்கெட்டைப் பார்த்து: நண்பா எப்படி இவ்வளவு வேகமாக பறக்கிறாய் என்றது." 
"ராக்கெட் தமிழில்: போடாங்ங்ங்கொய்யா.... உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா... தீ.........."


மனைவி: நான் இன்று ஒரு டாக்டரை பார்த்தேன். எனக்கு சீதோஷ்ண இடமாற்றம் தேவை என்றும், அதனால் கடற்கரை ஓரமாக சென்று ஒரு மாதம் ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொன்னார்.
நான்: எங்கே போகலாம் என்று நினைக்கிறீர்கள்!
மனைவி: இன்னுமொரு டாக்டரை பார்க்க..

கணவன்: நமக்கு கல்யாணமாகி 5 வருஷத்தில் ஒரு விஷயத்திற்காவது நான் சொன்னதுக்கு நீ சரின்னு சொல்லி இருக்கியா? எல்லாத்துக்குமே ஒரு எதிர் கருத்து சொல்லிடுவ.. 
மனைவி: நீங்க சொல்றது தப்புங்க.. நமக்கு கல்யாணமாகி ஆறு வருஷமாகிடுச்சு.. 


கணவன்: சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்! 
மனைவி: சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு வந்துடறேன்! கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது.. 
கணவன்: ஒண்ணும் பிரச்சினை இல்ல டிக்கெட் நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்

After a breakup between two lovers a friend asks the girl "you left him or he left you?" She smiled and said 
"Love left us"

Post a Comment

5 Comments

  1. சூப்பர் ஜோக்ஸ் - கலக்கறீங்க

    ReplyDelete
  2. நல்லதொரு நகைச்சுவை பதிவு...

    ReplyDelete
  3. //பரிட்சையிலே தெரிஞ்ச கேள்வியை எல்லாம் முதல்லே எழுதணும்.
    தெரியாத கேள்வியை கடைசீலே எழுதணும்"
    "பதிலை எல்லாம் எப்போ எழுதணும் டீச்சர்?"//
    செம!!

    ReplyDelete
  4. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.நேரம் இருந்தால் பாருங்கள்

    ReplyDelete
  5. சிறப்பான நகைச்சுவைகள்! ரசித்தேன்! நன்றி!

    ReplyDelete

Drop Anything