12/20/12

ஹனிமூன் போகலாம் வாங்க!

"என்னங்க சாப்பாடு நல்லாருக்கா... என் சமையலைப் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லமாட்டேன்கிறீங்களே?"
"எல்லாப் பிரமாதமா இருக்கு... இதோ ஒரு அயிட்டம் இருக்கு பாரு.. இது ஒண்ணுதான் கொஞ்சம் 'உப்பா' இருக்கு!"
"நாசமாப் போச்சு. அது 'உப்பு'தாங்க!"

கோயில் உண்டியலை திருடியது உண்மையா?
உண்மைதான் ஜட்ஜ் ஐயா, ஆனா அதுல இருந்த பணத்தை எடுத்துகிட்டு உண்டியலை திருப்பி வெச்சிட்டேன்

ஒரு ஊரில் ஒரு முட்டாள் பணக்காரர் இருந்தார். அவர் பெரிய பங்களா ஒன்று கட்டினார். அவை பார்வையிட தன் நண்பர்களுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். வந்திருந்தவர்கள் அனைவரும் பங்களாவின் அழகை வெகுவாக பாராட்டினர். பின்பு பங்களாவின் பின்புறம் சென்று பார்த்தனர். அங்கு மூன்று நீச்சல் குளங்கள் இருந்தது. அனைவரும் ஆச்சர்யத்துடன் எதற்காக 3 நீச்சல் குளங்கள் என்று கேட்டனர். அதற்கு அந்த பணக்காரர் ஒன்று வெந்நீர் குளியல் வேண்டும் என்பவர்களுக்காக, மற்றொன்று குளிர்ந்த நீர் வேண்டும் என்பவர்களுக்காக என்றார். அனைவரும் வெந்நீர் சரி, தண்ணீர் சரி. காலியாக இருக்கின்றதே அது எதற்கு என்று கேட்டனர். அது நீச்சல் தெரியாதவர்களுக்காக என்றார் 

ஹலோ நான் குமார் பேசுறேன். என் கடனை எப்ப திருப்பி தருவீங்க?
சேலத்துல் 3  குமார்கிட்டே கடன் வாங்கி இருக்கேன். ஈரோடுல   6 குமார்கிட்டே கடன் வாங்கியிருக்கேன். யாரா இருந்தாலும், தெளிவா விபரமா பேசுங்க குழப்பாதீங்க.

ஏன் ஸ்கூட்டரை திருடினே...?" 
"டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு வண்டிய எடுன்னு 
அவசரப்படுத்தினாரு எசமான்..!"

ராமு - 10 ரூபாய் இருந்தா கொடு
சோமு - என்னிடம் சுத்தமா ரூபாய் இல்லை
ராமு - பரவாயில்லை, கொடு நான் சுத்தம் செய்து கொள்கிறேன்.

மனைவி: டாக்டர்! என் கணவர் ஒரு பேனாவை விழுங்கி விட்டார்.
டாக்டர்: இன்னும் சில நிமிஷத்தில் வந்து விடுகிறேன்
மனைவி: அதுவரை நான் என்ன செய்வது?
டாக்டர்: பென்சிலை உபயோகியுங்கள்.
என்னால் என் நண்பர்கள் துன்பபப்படுவதைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.
உடனே அவர்களுக்கு உதவி செய்வாயா?
நான் கண்ணை மூடிக் கொள்வேன். இல்லாவிட்டால் அந்த இடத்தை விட்டு ஓடிவிடுவேன்.

வீட்டுலே சுகர் இருந்தாக் கூடவா போலீஸ் அரெஸ்ட் பண்ணும்?
நீ வேற... அவரோட வீட்டுலே ப்ரௌன் சுகர் இருந்துச்சாம்!

வெங்கடேஷும் அவன் மனைவியும் தம் ஹனிமூன் போட்டோக்களை பார்த்துக்கொண்டிருக்க அவர்களது 3 வயது மகன் கேட்டான். " இந்த போட்டோஸ்ல நான் ஏன் இல்லே. அப்போ எங்கே இருந்தேன்?" வெங்கடேஷ் சொன்னான் " ஆங்! ஹனிமூன் போறப்ப எங்கிட்ட இருந்தே வரப்ப அம்மாக்கிட்ட இருந்தே..


1 comment:

அனானிகளானாலும் வரவேற்கப்படுகிறார்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...