7/23/13

மசாலா படமாச்சே... அதான்!

 "குடிக்காம தெளிவா இருக்கும் போதுதான் இவர் தப்பே செய்யறார்..."
"எப்படி..?"
"குடிக்கணும்னு அப்பதானே முடிவெடுக்கறார்!"

"போலீஸ் செலக்சன் முடிஞ்சப்புறம் எதுக்கு வந்தே...?"
"எல்லாம் முடிஞ்சப்புறம் வந்தாதானே சார் போலீஸ்...!"

 "நமது மன்னர் போரிலிருந்து வருவதற்கும், பாரிலிருந்து வருவதற்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்!"
"என்ன அது?"
"போரிலிருந்து வரும் போது அலறிக்கொண்டு வருவார்; பாரிலிருந்து வரும் போது உளறிக்கொண்டு வருவார்!"

"அந்த ஆள் எப்பவும் மத்தவங்க கையைத் தான் எதிர்பார்ப்பாரு..."
"ஏன்...?"
"அவருதான் கைரேகை ஜோசியம் பார்க்கறவராச்சே...!"

நோயாளி: ஆபரேஷன் பண்ணினா பிழைக்க முடியுமா டாக்டர்?!
டாக்டர்: ஆபரேஷன் பண்ணித்தானே நான் பிழைக்கிறேன்

"சாமியார் கதையை சினிமாவா எடுக்கிறீங்களே.... என்ன டைட்டில்?"
"பெண்ணைத் தாண்டி வருவாயா!"

"படம் போட்டதும் எல்லாரும் தும்முறாங்களே... ஏன்?" "மசாலா படமாச்சே... அதான்!"

ஆசிரியர்: கிணத்துல கல்லைப் போட்டா கல்லு மூழ்கிடும் ஏன்? 
மாணவன்: ஏன்னா, அதுக்கு நீச்சல் தெரியாது சார்!

ஒருவர்: கல்யாணம் செய்துக்க சம்மதமான்னு உங்க பொண்ணை வைத்து சீட்டு எடுக்கச் சொல்றீங்களே...? மற்றொருவர்: பின்ன...! என் பெண்ணைக் கிளி மாதிரில்ல வளர்த்திருக்கேன்.

ஒருவர்: நம்ம குப்புசாமி திருமணம் செய்துக்கற பொண்ணு பேரு அதிர்ஷ்டமாம்... 
மற்றொருவர்: அப்ப குப்புசாமியை அதிர்ஷ்டம் அடிக்கப் போகுதுன்னு சொல்லு...!

"பெண்ணோட அப்பா ரொம்பப் பசையுள்ளவருன்னு எப்படிச் சொல்றே?" 
"கோந்து கம்பெனி வச்சிருக்காரே!"

2 comments:

  1. சுவையான ஜோக்குகள்! வீடியோவும் ரசித்தேன்! நன்றி!

    ReplyDelete

அனானிகளானாலும் வரவேற்கப்படுகிறார்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...