12/31/11

நீங்க சாமியார் கிடையாது

ஒரு கார் சாமியார்களின் மடத்திற்கு அருகே வேலை செய்யாமல் நின்று விட்டது.அன்றிரவு அங்கே தங்க அவன் அனுமதி கேட்டான்.அந்த மங்க் தலைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு அவனுக்கு உணவளித்து காரையும் சரி செய்து அவனை தங்க வைத்தார்.அன்றிரவு அங்கே ஒரு வினோதமான சத்தம் கேட்டது அவன் அந்த மங்க்கிடம் “அது என்ன சத்தம்?” என்றான், அதற்கு அவர்,”அதை மங்க்களிடம் மட்டுமே பகிர்வோம் உனக்கு சொல்ல முடியாது” என்றார்.அவனுக்கு இது ஏமாற்றம் தந்தாலும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை..அங்கிருந்து விடை பெற்றான்.சில வருடங்களுக்கு பிறகு மறுபடியும் அவன் கார் அங்கே பிரச்னை செய்தது.

அன்றிரவும் அங்கே தங்க அவன் அனுமதி கேட்டான், அந்த சாமியார்களின் தலைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு அவனுக்கு உணவளித்து காரையும் சரி செய்து அவனை தங்க வைத்தார்.அன்றும் அதே வினோதமான சத்தம் கேட்டது.அதே போல அவன் கேட்க அந்த சாமியார் ,”அதை சாமியார்களிடம் மட்டுமே பகிர்வோம் உனக்கு சொல்ல முடியாது” என்று சொல்லி விட்டார்.“அது என்ன என்று தெரியாவிட்டால் என் தலை வெடித்து விடும், இதற்காகவே நான் சாமியார் ஆகிறேன் அதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்றான்.

அவர் அதற்கு ,”நீ உலகம் முழுக்க சுற்றி எத்தனை பூவிதழ்கள் இருக்கின்றன மற்றும் எத்தனை மணல் துகள்கள் இருக்கின்றன என்று சொல்ல வேண்டும்” என்றார்.
அவன் விடை பெற்றான்.சுமார் 40 வருடங்களுக்கு பிறகு திரும்ப வந்தான்,“நான் உலகமெங்கும் சுற்றி விட்டேன் இதோ உங்கள் கேள்விக்கு பதில்: 1278954483 பூவிதழ்களும், 5769384572949050 மணல் துகள்களும் உள்ளன” என்றான்.அவர்,”வாழ்த்துக்கள் இப்போது நீ சாமியாராகி விட்டாய் உனக்கு அந்த சத்தத்தின் ரகசியத்தை காட்டுகிறேன்” என்று சொல்லி விட்டு அவனிடம் ஒரு சாவியை தந்தார் “அதோ அந்த மரக்கதவின் பின்னால் இருந்து வருகிறது அந்த சத்தம்” என்றார்.

இவன் சென்று அக்கதவை திறந்தான் அங்கே இன்னொரு பிளாட்டின கதவும் சாவியும் இருந்தது அதையும் திறந்தான் அங்கே ஒரு வைரக்கதவும் சாவியும் இருந்தது அதையும் திறந்தான், இதே போல வைடூரியம், மரகதம், கோமேதகம், பிளாஸ்டிக் எல்லா கதவுகளையும் திறந்தான் கடைசியாக தங்க கதவு இருந்தது அதையும் திறந்தான் அங்கே அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்று அவனுக்கு தெரிந்தது….
அது என்னவென்று உங்களுக்கு சொல்ல முடியாது
ஏனென்றால் நீங்கள் சாமியார் கிடையாது!
புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும்..

12/28/11

காதல் எங்கே பிறந்தது தெரியுமா? ஜோக்ஸ்!

மனைவி : ஏங்க நம்ம பையன் பீடி குடிக்கிறானாமே! கேட்டீங்களா?
கணவன் : நான் கேட்டால் தரமாட்டான். நீ கேட்டு ஒண்ணு வாங்கிக் கொடேன்!!

மனைவி : லீவு எடுத்துட்டு நல்லா தூங்கறீங்களே இந்தப் பழக்கம் தானே நீங்க வேலைப் பார்க்கிற இடத்திலும் வரும்
கணவன் : போடீ கழுதை, இந்தப் பழக்கம் வந்ததே அங்கிருந்து தானே

நீதிபதி : ஏற்கனவே கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சு இரண்டாவது கல்யாணம் பண்ணினே.?
குற்றவாளி : கல்யாணம் பண்ண ஆயிரம் பொய் சொல்லலாமுன்னு சொல்வாங்க நான் ஒரு பொய் தானே சொன்னேன்.

டீச்சர்: என்ன ஒற்றுமை இவர்களுக்குள் ஜீசஸ், காந்தி, புத்தர்??
மாணவர்கள்: இவர்கள் எல்லோரும் பிறந்தது விடுமுறை தினத்தில்

அப்பா: ரேங்க கார்ட் எங்கடா?
மகன் : இந்தாங்கப்பா ..
அப்பா: முட்டாள் நீ ஐந்து பாடத்துல பெய்லாயிட்டியே! இனிமேல் என்ன அப்பான்னு கூப்பிடாதே
மகன்: ஓக்கேடா மாப்ள சீனப்போடாம சைனப்போடு.!

தாஜ்மஹால் பார்வை.
காவலாளி:தயவு செய்து அங்க உக்காராதீங்க, அது ஷாஜகானின் கதிரை.
சுற்றிப்பார்க்க வந்தவர்: கவலைப்படாதீங்க, அவரு வந்ததும் நான் எழுந்துடுவேன்.

பிரேம்ஜி : I am Going to Sleep' ,னா என்னடா மீனிங்க்..???
ராம்ஜீ : நான் தூங்க போறேன்.
பிரேம்ஜி :டேய் மீனிங்க சொல்லிட்டு தூங்கப்போடா,pls pls pls...

காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

12/25/11

சொர்க்கத்தில் இப்போது இடமில்லை..!

சொர்க்கத்திற்கு மூன்று பேர் போனார்கள், கடவுள் அவர்களிடம், "சொர்க்கத்தில் இப்போது இடமில்லை உங்கள் மூவரில் பரிதாபமான சாவு யாருக்கு நேர்ந்ததோ அவரை சொர்க்கத்தில் சேர்த்துக் கொள்கிறேன்" என்றாராம்.

முதல் ஆள் தன் கதையை சொல்ல ஆரம்பித்தார், "எனக்கு நீண்ட நாட்களாகவே என் மனைவி நடத்தை மீது சந்தேகம் இன்று சீக்கிரமாக போய் கண்டுபிடித்து விட வேண்டும் என்று சாயங்காலமே அப்பார்ட்மெண்ட்டிற்கு போனேன் என் அப்பார்ட்மெண்ட் 25 ஆவது மாடியில் இருக்கிறது நான் பார்த்தபோது வீட்டில் மனைவி மட்டுமே இருந்தாள் ஆனால் எனக்கு சந்தேகம் விடவில்லை வீடு முழுக்க தேடினேன் யாருமில்லை பால்கனி போய் தேடினேன் யாருமில்லை ஒரு சந்தேகத்தில் பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்தேன் ஒரு ஆள் என் வீட்டு ஜன்னலில் தொங்கிக்கொண்டிருந்தான் எத்தனையோ அடித்தும் அவன் அங்கிருந்து விழவில்லை சுத்தியல் எடுத்து கைகளில் அடித்தேன் அங்கிருந்து விழுந்து விட்டான் ஆனால் ஒரு புதரில் விழுந்து உயிர் பிழைத்து விட்டான் என் கோபம் தலைக்கேறி குளிர்சாதனப் பெட்டியை அவன் மேல் தள்ளி விட்டேன் அதே நேரம் குற்ற உணர்ச்சி அந்த ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டேன்"

கடவுள்,"பரிதாபம்"

இரண்டாம் ஆள், "என் அறை 26 ஆம் மாடி மாலையில் நான் உடற்பயிற்சி செய்ய பால்கனி போயிருந்தேன் தவறி விழுந்து விட்தேன் ஆனாலும் அங்கிருந்த ஒரு ஜன்னலில் பிடித்தேன் அப்போது இந்தாள் வந்தார் காப்பாற்றுவார் என்று பார்த்தால் அடிக்க ஆரம்பிக்க நான் விழ அப்போதும் உயிர் தப்பி விட்டேன் அதற்காக சந்தோஷப்பட்ட போதே ஒரு ப்ரிட்ஜ் வந்தது அவ்வளவே"

கடவுள்,"அய்யோ பரிதாபம்"

மூன்றாவது ஆள்,"அவசரப்படாதீர்கள், நான்தான் அந்த ப்ரிட்ஜ்க்குள் இருந்தேன்" பரிதாபமான முறையில் இறந்தது நாந்தான் என்றாராம்.

12/24/11

முதல் முதலாய் ஒரு கொலை..!


இறைச்சிக்கடையொன்றில்
உதவியாளனா‌‌‌க பணியாற்றும் சிறுவனுக்கு
உண்மையில் அதுதான் முத‌ல் நாள்
அதுநாள் வரை
அவனுக்கு தரப்பட்ட வேலைகள் மென்மையானவை.
வெட்டப்படும் ஆடுகளின் கால்களை கெட்டியாக பிடித்துக்கொள்வது
மரித்துப்போன கோழிகளின் இறகுகளை உரிப்பது
வெட்டுண்ட ஆட்டுக்கால்களை இளஞ்சூட்டு நெருப்பில் வாட்டுவது
மரத்துண்டுகளை கொலைவாட்களை கழுவுவது..
முதல் கொலைக்கான
உத்தரவு வந்தக் கணம்
அவன் திகைக்கிறான்.
கோழிகளையும், ஆடுகளையும்
மலங்க மலங்க பார்க்கிறான்
பழுப்பும் சிவப்பும் தீற்றலுமாயிருக்கும்
மரத்துண்டை பயங்கலந்து பார்க்கிறான்
நடுங்கும் கையோடு கத்தியை தொடுகிறான்.
ஒரு உயிர் கோழியை தூக்குகிறான்
கண்களை மூடிக்கொள்கிறான்
எதையோ தீவிரமாக யோசிக்கிறான்..
அந்தக்கோழியை விட்டுவிட்டு
இன்னொரு கோழியை தேர்வு செய்கிறான்
அதன் கழுத்தை திருக
அவனுக்கு தயக்கமாக இருக்கிறது
கத்தியால் வெட்டுவதை தேர்வு செய்கிறான்..
கூடுமானவரை வெட்டவிருக்கும் கோழியின்
கண்களை பார்ப்பதை தவிர்க்கவே விரும்புகிறான்
இறைச்சிக் கடை உரிமையாளர்
அவனை பார்த்து நட்பாக புன்னகை செய்கிறார்
தாயைப் போல அறிவுரைகள் சொல்கிறார்
ஆற்றுப்படுத்துகிறார்
பருவத்துக்கு வந்துவிட்ட
போர்வீரனாய் கர்வம் கொள்ளும்
அந்த சிறுவன்
செய்யும் முத‌ல் கொலை
மிகுந்த கொடூரமானது
ஒரு கொலைக்கு முன்னர்
அவன் எடுத்துக்கொண்ட கால அளவு
மிகுந்த நீளமானது
ஒரு கொலைக்கு முன்னர்
அவன் மனதில் விவாதித்தது
மிகுந்த தத்துவார்த்தமானது
ஒரு கொலைக்கு முன்னர்
அவன் வாழ்ந்த வாழ்க்கை
மிகுந்த சிக்கலானது
அவனுக்கு போதிக்கப்பட்ட போதனைகள்
‌மிகுந்த எண்ணிக்கையிலானது
அந்த சிறுவனது
மரத்திலிருந்து உதிர்ந்த
இலைகள் மீண்டும் துளிர்க்கின்றன..
இப்போதெல்லாம்
அவன் விரல்கள்
ஒரு புல்லாங்குழல் வாசிப்பவனாய்
ஒரு வீணைக்கருவியின் தந்தியை மீட்டுபவனாய்
ஒரு மிருதங்க கலைஞனாய்
இறைச்சியை வெட்டுவதற்கு
பழக்கமாகியிருந்தது
•••
Thanks.. http://nvmonline.blogspot.com/

12/22/11

வேட்டை பாடல்கள்- மொத்தமா ருசிக்கலாம்..!

லிங்குசாமியின் இயக்கத்தில், யுவன்சங்கர் ராஜா இசையில், மாதவன், ஆர்யா,சமீரா ரெட்டி,அமலா பால் ஆகியோர் நடித்து வெளிவரயிருக்கும் திரைப்படமே வேட்டையாகும். பொதுவாக லிங்குசாமியின் இயக்கத்தில் வரும் படங்களின் பாடல்கள் சிறப்பாகவே இருக்கும். அது போலவே வேட்டை பாடலும் எதிர்பார்த்தது போலவே, யுவனின் இசையில் எல்லா பாடல்களும் சிறப்பாகவே வந்திருக்கிறது.

# ஏய் பப்ப பப்ப பப்பா பத்திக்கிச்சு பம்பரம்
மென்மையான தனிப்பாடல்களை பாடுவதில் மட்டும் பெயர் போன யுவன்சங்கர் ராஜா. கொஞ்சம் குத்து கலந்த டூயட் பாடலை ரேனுவுடன் பாடியிருக்கிறார். நல்லாத்தான் இருக்கு.

# தம்ம தம்ம தம்மா டும்மா டும்மா டும்மா

ஹரிச்சரன், ஸ்வேதா பாடியுள்ள கொஞ்சம் வேகமான இனிமையான மெலடி பாடல் பாடலில் ஆரம்பத்தில் வரும் ஹம்மிங்கும் இடையில் வரும் இசையும் அருமை. ஹரிச்சரன் குரலில் அதே இனிமை, சுஜாதா விட்டுச்சென்ற தமிழ்திரையிசை இடத்தை ஸ்வேதா அழகாகவே நிரப்புகிறார். மலயாளியை எவ்வளவு திட்டினாலும் மலயாளி இல்லாத தமிழ்சினிமா வருவது இயலாத காரியமாகவே படுகிறதது.

# தம் தம் தம் ஆனந்தம்  தம்..

கார்டத்திக், க்ரிஷ் பாடியுள்ள இப்பாடல் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றாலும் கேட்கலாம். பாடல் ஆரம்ப இசை வேறொரு பாடலை நியாபகபடுத்துகிறது. என்ன பாடலென்று நினைவில் வர மாட்டேங்குது.
தீராத விளையாட்டுப்பிள்ள
தெருவில் வந்தாலே
தேவதங்க தொல்ல..  இதில் வரும் பாடல் வரியொன்று

# தய்ய தக்க தக்கா நீ எங்கிருக்கே மக்கா..

ஹ்ரினி,சைந்தவி பாடியுள்ள ஓர் இனிமையான பாடல்.. அக்கா தங்கை பாடுவது போல் அமைந்துள்ளது. சைந்தவியின் குரலில் ஓர் மயக்கம் இருப்பதை மறுக்க முடியவில்லை. ஹரினியின் குரல் வழமை போல் இனிமைதான்.. மாப்பிள்ள எப்படி இருக்க வேனும்னு பாடுராங்க..
அக்கா கேட்ட மாப்பிள்ள
எங்கிருக்கான் பயபுள்ள.. அடடா பாடல் வரிகள் இது..

# கட்டிப்புடி கட்டிப்புடி நீ எப்போதும் குத்தாத ரோசா செடி..

விஜய் பிரகாஷ், ஸ்வேதா பண்டித் பாடிய இந்தப்பாடல்தான் யுவனின் மாஸ்டர் பீஸ்.. மிக அருமையாக வந்திருக்கிறது. விஜய் பிரகாஷ் எந்த பாடலையும் லாவகமாக பாடக்கூடியவர். நல்ல பாடகர் தெரிவு, அவரின் கம்பீர குரலில் கேட்டுக்கொண்டேயிருக்கலாம் இந்தப்பாடலை. 
கண்னோரமா கண்னோரமா கும்மாளமா
நெஞ்சோரமா நெஞ்சோரம வந்தாளமமா..
அடி ஆவாரம் பூவுக்கு
ஆளில்லா தீவுக்கு
ஆரஞ்சு மழை மேகம் நாந்தானடி...
அடி போகாத ஊருக்கு
பொல்லாத காட்டுக்கு
ரெண்டாளா கைகோர்த்து போவோமடி..
என எல்லா வரிகளுமே அசத்தல்..

இங்கே கேட்கலாம் பாடல்களை..

பதிவு பிடித்திருந்தால் ஒரு போட்டு போடலாமே.. நேரமிருந்தால் ஏதாவது சொல்லலாமே.. உங்க இஷ்டம்.

12/21/11

வாங்க பழகலாம்- ஜோக்ஸ்..!

‘‘உன் கல்யாணத்துக்கு நான் கட்டாயம் வரணும்னு நீ சொல்லணுமாடா..? உனக்கு ஒரு துக்கம்னா, அந்தக் கொண்டாட்டத்துல கலந்துக்காம எனக்கு வேறென்ன வேலை?’’

‘‘அஞ்சாப்பு வரைக்கும் இனி எல்லோரும் பாஸாம்டா..! ம்ம்ம்.. அந்தக் காலத்துலேயே இப்படி இருந்திருந்தா நீ எலிமெண்ட்ரி ஸ்கூலையாவது தாண்டியிருப்பே..!’’

காலையில் உன் வீட்டுக்கு வந்தேன்.. மனதுக்கு ஆறுதலாய் இருந்தது. என் அப்பாவை போலவே உன் அப்பாவும் இவ்வளவு கேவலமாக உன்னை திட்டினாரே!’’

பொண்ணு பார்க்கப் போகணும்னு சொல்லிட்டு வேட்பு மனு தாக்கல் பண்ணிட்டு வரீங்களே?"
"வீடு வீடாய் போய் ஓட்டு கேட்ட மாதிரியும் இருக்கும், பொண்ணு பார்த்த மாதிரியும் இருக்கும்."

புது கணவன்: என் மனைவி சமையலறை பக்கமே போயிருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன்!
நண்பன்: எப்படி சொல்கிறாய்?
புது கணவன்: இன்று காலை அவள் முட்டையை சோடா ஓபனரை வைத்து திறக்க முயன்று கொண்டிருந்தாளே!

"ஏய் நீதானடி என் புருஷனின் சின்ன வீடு?"
"ஐயோ, இல்லக்கா! நான் இல்லே!"
"யாருகிட்டடி காது குத்துறே? நீ போட்டிருக்கிற கொண்டையை என் புருஷனைத் தவிர வேற யாராலும் போட முடியாதுடி!"

திருடன புடிக்க திருடன் மாதிரி வேஷம் போட்டீங்களே என்னாச்சு கண்டுபிடுச்சீங்களா இன்ஸ்பெக்டர்?"
"அவன் போலீஸ் வேஷம் போட்டு தப்பிச்சிட்டு போயிட்டான்..."

ஆசிரியர்: இந்தத் திரவத்திலே ஒரு ரூபாய் நாணயத்தைப் போடப் போகிறேன். இது கரையுமா?
மாணவன்: கரையாது சார்.
ஆசிரியர்: எதனால் அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறாய்?
மாணவன்: கரையுமென்றால் நீங்கள் போடமாட்டீங்களே!

"அந்த நடிகையின் அம்மா பயங்கரமான சிக்கனக்காரி"
"எப்படி?"
"நடிகையோட திருமணத்தையும் வளைகாப்பையும் ஒரே நாளில் நடத்திட்டாளே!"

வாங்க பழகலாம்
என்கிட்ட இரண்டு FULL இருக்கு
ஒண்ண ஆங்க வை...
இன்னொண்ண இங்க வை....
நடுவுல இரண்டு கிளாஸ வை....
நல்லா பழகுங்க..
பிடிச்சா வயித்தோட வைச்சிக்கோங்க..
இல்லேன்னா
வாந்தி எடுத்திடுங்க...

ஒக்கேவா..!

12/18/11

DAM 999 -முல்லைப்பெரியாறு என்னதான் பிரச்சினை..!

முல்லைப்பெரியாறு பிரச்சினை பற்றி.. மிமிக்ரி மூலமாக நகைச்சுவையாக அதன் தகவல்களை சொல்கிறார் சீனிபிரபு. நீங்களும் கேட்டுப்பாருங்களே..

Related Posts Plugin for WordPress, Blogger...