1/25/12

கடவுளை காணோமாம்..!

ஒரு ஊரில் ரெண்டு பசங்க இருந்தாங்களாம், அவங்க பயங்கர குறும்பு.
எப்ப பாத்தாலும் ஏதாவது ப்ரச்னை பண்ணி பக்கத்து வீட்டுக்காரங்க
அவங்கம்மா கிட்ட கம்ப்ளைன் பண்ணிட்டே இருப்பாங்களாம்.அவங்கம்மா எவ்வளவோ முயற்சி பண்ணியும் இவங்களை திருத்த முடியல.

அப்ப தான் அந்த ஊருக்கு புதுசா ஒரு சாமியார் வந்திருந்தார்.அவங்கம்மாவும் சின்னவனை திருத்தலாம்னு கூட்டிட்டு போனாங்களாம்.

அந்த சாமியார பையன் விநோதமா பார்க்க அவர் சிரிச்சிக்கிட்டே கேட்டார்
கடவுளை பாத்திருக்கியா?
பையன் புரியாம முழிச்சான்.
திரும்பவும் அவர் ,கடவுள் எங்கிருக்கார்னு தெரியுமான்னார் லைட்டா முறைச்சிக்கிட்டே.பையன் லேசா கலவரமாயிட்டான்.
அவர் விடாம சொல்லு கடவுள் எங்கிருக்கார்?

பையன் பயத்தில அழ ஆரம்பிக்க அவங்கம்மாவுக்கு ஆச்சர்யம்.
அவர் அப்புறமும் கடவுள் எங்கே சொல்லு கடவுள் எங்கேன்னு கேட்க
பையன் சத்தம் போட்டு அழுதுகிட்டே வேகமா ஓட்றான் வீட்டை பாத்து.
வீட்டுக்குள்ளே அண்ணன் ரூமுக்கு போய் வேகமா கதவ சாத்திட்டு பயத்தோட நிக்க அண்ணன் கேட்டான் என்னடா பிரச்னை ஏன் இப்டி ஓடி வர்ர?

இல்ல நிலைமை மோசமாய்டிச்சி
ஏன் என்னாச்சு?
கடவுளை காணோமாம்
அதுக்கு?

எல்லோரும் நம்மளை சந்தேகப்படறாங்க

1/21/12

உங்களுக்கு மப்பு ஏறவே இல்லயா?"

கடவுள் ஒரு நாள் ஏதோ ஆசையில் ஒரு பாருக்குள் நுழைந்தாராம்.ஏகப்பட்ட வகைகள் இருக்கவும் விற்பனையாளர் இவர் கெட் அப் பார்த்து விட்டு "என்ன வேண்டும்?" என்றார்.
"நல்லதா ஏதாவது குடுப்பா" என்று சொல்ல ஒரு ஃபுல் எடுத்து தந்தார்.
ஐந்து நிமிடத்தில் முடித்து விட்டு அடுத்து என்றார்
இன்னொரு புல் தர அதையும் குடித்து விட்டு அடுத்து என்றார்

இதே போல பத்து முறை குடிக்க பார்டெண்டருக்கே கை வலித்து விட்டது.கடவுள் கொஞ்சமும் சலிக்காமல் அடுத்து என்றார்.பார்டெண்டருக்கு ஆச்சர்யம்,"இவ்ளோ அடிச்சும் கொஞ்சமும் உளரல,குரல் பிசிறாம அடுத்துங்கிறீங்களே,உங்களுக்கு மப்பு ஏறவே இல்லயா?"

கடவுள் பெருமிதமா,"நாந்தாம்ப்பா கடவுள் எனக்கு எப்படி மப்பு ஏறும்"னாரு

உடனே பார்டெண்டர்,"சரி சரி மப்பு ஓவராவே ஏறிடுச்சு போல..

1/4/12

மனைவியை மயக்க 10 வழிகள்..!

என் பொண்டாடியை புரிஞ்சுக்கவே முடியல…’ என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல.
இன்றைய `நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 வழிகள் இதோ…

1. மதியுங்கள்
வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள்முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குயவியுங்கள்.

2. கனவுகளை பின்பற்றட்டும், உங்களை அல்ல
இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.

3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள்
மனைவியை சமாதானபடுத்துவதற்கான பழைய விதிகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவிக்குத் திடீர் ஆச்சரியம் கொடுக் கும் வழக்கத்தைக் கைவிடாதீர்கள்.

4. உணர்வுகளை வெளிபடுத்துங்கள்
`ஆண்கள் அழ மாட்டார்கள்’ என்பது சரிதான். உணர்வுகளை வெளிபடுத்தும் உணர்வுபூர்வமான ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதே உண்மை. ஆனால் எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்காதீர்கள். அழுமூஞ்சி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.

5. ஆலோசனை கேளுங்கள்
நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது உங்கள் மனைவியின் ஆலோசனையையும் கேளுங்கள். அது பணத்தை பற்றியதாக இருக்கலாம், வேலை, தொழிலை பற்றியதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்புக் கொடுங்கள்.

6. சமைக்கத் தெரிந்து கொள்ளுங்கள்
நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரை மனைவிக்கு பிடிக்கும். அப்படிபட்ட கணவர் தான் அவர்களை பொறுத்தவரை `முழுமையானவர்’.

7. பேசுங்கள்
பேசுவது பெண்களுக்கு பிடிக்கும் என்று தெரியும். மனைவியுடன் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷயங்களை பற்றியும் பேசுங்கள். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றை பற்றியுமே பகிர்ந்துகொள்ளுங்கள்.

8. மனைவியின் குடும்பத்தில் `பங்கு கொள்ளுங்கள்’
வீட்டுக்கு வருகிற மனைவி உங்கள் குடும்பத்தோடு ஒன்றிபோய்விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நீங்களும் ஒரு அன்பான மருமகனாக மனைவியின் வீட்டில் அக்கறை காட்டுவது அவசியம்.

9. அழகில் கவனம் செலுத்துங்கள்
அழகு, பெண்கள் மட்டும் சம்பநதபட்ட விஷயம் என்று யார் சொன்னது? வெளியிடங்களுக்கு போகும்போது உங்கள் மனைவியை வியப்பாக நான்கு பேர் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படி அவரும் எதிர்பார்பது நியாயம்தானே?

10. அவ்வப்போது `வழக்கம்போல்’ இருங்கள்
எல்லாவற்றிலும் புதுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வபோது, `நீ தான் எனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்’ என்று `பழைய டயலாக்’ பேசுவதில் தவறில்லை.

நன்றி இணையம்..

1/1/12

என்னா க்ரியேட்டிவிட்டி?

ஒரு பூனை சொர்க்கம் போனது கடவுள்,”நீ வாழ்நாள் முழுக்க ஒரு நல்ல பூனையாக இருந்தாய் சொர்க்கத்தில் உனக்கு என்ன வசதிகள் வேண்டும்?”
“எனக்கு பூமியில் தூக்கமே இல்லை அதனால் ஒரு தலையணை தந்தால் போதும்”

உடனே தரப்பட்டது அதுவும் சந்தோஷமாக போனது
அடுத்த சில நாட்களில் 5 எலிகள் வந்தன, அவற்றிடமும் கடவுள் கேட்டார், ”நாங்கள் பூமியில் பூனைகளிடமும் மனிதர்களிடமும் ஓடியே சலித்து விட்டோம் எங்களுக்கு ரோலர் ஸ்கேட் வேண்டும்”என்றன, அவரும் தர சந்தோஷமாக விடைபெற்றன

சில நாட்களில் கடவுள் பூனையிடம்,”சொர்க்கம் எப்படியிருக்கிறது?” என்றார்.

“மிகவும் அருமை இந்த தலையணை உறங்க அருமையாக இருக்கிறது அதுவும் உணவை ரோலர் ஸ்கேட்டில் அனுப்புகிறீர்களே என்னா க்ரியேட்டிவிட்டி?”
Related Posts Plugin for WordPress, Blogger...