ஆர் யூ ரிலாக்ஸிங்?

ஒரு சர்தார்ஜி உடம்பு முடியாம மரணப்படுக்கையில இருந்தார்.இன்னொரு சர்தார்ஜி அவர பாக்க போனார்.அவரு இவரு கிட்ட நலம் விசாரிச்சிட்டு இருக்கவே அவரு நிலைமை சீரியஸ் ஆகிடுச்சு.அவரால பேசவே முடியல...ஆனா ஏதோ சொல்லணும்னு பிரியப்படறார்.இவரு உடனே பேப்பரும் பேனாவும் கொடுத்தார்.அவரு வேகமா எழுதும்போதே உயிர் பிரிஞ்சிடிச்சி.இவரும் ஏதோ பர்சனல் படிக்கக்கூடாதுன்னு பத்திரமா பாக்கெட்ல போட்டுக்கிட்டார்.அதை அப்படியே மறந்துட்டார் ரெண்டு நாள் கழிச்சு சடங்குல ஞாபகம் வந்து அவரோட குடும்பத்தார் கிட்ட குடுத்தார்.அவங்க பிரிச்சி படிக்க அதுல எழுதியிருந்தது :

" ஆக்சிஜன் ட்யூப்ல இருந்து காலை எடுடா"

                                                        இது சும்மா மாக்கட்டிங்கு

நம்ம பஞ்சாப் பாண்டாசிங் அமெரிக்காவுல ஒரு பீச்சுல சன் பாத் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
வித்தியாசமான தோற்றத்திலிருந்த அவரைப்பார்த்து ஒரு பெண் வந்து கேட்கிறார்.
ஆர் யூ ரிலாக்ஸிங்?
இல்லை.. நான் பாண்டாசிங்.
அந்தப் பெண் சென்றுவிட, மற்றொரு ஆள் வருகிறார். ஆர் யூ ரிலாக்ஸிங்?
இல்லை..நான் பாண்டாசிங்.
அந்த ஆளும் சென்றுவிட, மூன்றாமவர் வருகிறார். ஆர் யூ ரிலாக்ஸிங்?
கடுப்பாகி அந்த இடத்தை விட்டு நகர்ந்த பாண்டாசிங், சர்தார் போலத் தோற்றமளித்த மற்றொரு நபரைப் பார்த்துக் கேட்கிறார். ஆர் யூ ரிலாக்ஸிங்?
ஓ..யெஸ்... .ஐ ஆம் ரிலாக்ஸிங்.
காதுகள் ஜிவ்வென ஆன பாண்டாசிங் கத்துகிறார் அரே பச்சா... அங்கே எல்லாரும் உன்னத் தேடிட்டு இருக்காங்க... நீ என்னடான்னா இங்க உட்காந்துருக்கியே

Post a Comment

2 Comments

  1. அன்புள்ள தோழமைக்கு, உங்களுக்கு வெர்சாட்டைல் விருதை வழங்குகிறேன் பெற்று கொள்ளுங்கள்! http://www.nilapennukku.com/2012/02/blog-post_26.html

    ReplyDelete

Drop Anything