3/9/12

I Spit On Your Grave (2010) உலகசினிமா-பலிவாங்கலின் உச்சம் 18+

இன்றைய காலத்தில் பெண்களை பலவந்தமாக கற்பழிக்கும் கொடூர செயல் உலகெங்கிலும் ஏதாவதொரு மூலையில் தினமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.. இவ்வாறான இழிசெயல்களை செய்பவர்களின் மனநிலை என்பது மிருகங்களை விடவும் கேவலமானதாகவே இருக்கும்.. ஒரு பெண்ணை பலவந்தமாக கத்த கதற அவள் விருப்பமின்றி புனர்வதில் அப்படியென்ன செக்ஸ் சுகம் இருந்துவிடப்போகிறது.. இவ்வாறான செயல்களை செய்பவர்கள் சைக்கோத்தனமானவர்கள், இவர்கள் வாழத்தகுதியற்றவர்கள்.. கொல்லப்படவேண்டியவர்களே..

அண்மையில் பார்த்த இந்த திரைப்படமும் இதே கருத்தையே சொல்கிறது.. ஒரு வீட்டிலே தனியாக இருக்கும் பெண்ணை ஐந்து பேர் சேர்ந்து (ஒரு போலிஸ்காரன் உட்பட) பலவந்தமாக கெடுத்து விடுகிறார்கள்.. பின் கொல்ல முயற்சிக்கும் போது அவள் தப்பித்துச்சென்று விடுகிறாள்.. அந்த செயலால பாதிக்கப்பட்டவள் சிறிது காலம் கழித்து சம்பந்தப்பட்டவர்களை எவ்வாறு மிகக்கொடூரமான முறையில் பலிவாங்குகிறாள் என்பதுதான் கதை..

எப்படியெல்லாம் திட்டமிட்டு கொடூரமான முறையில் கொல்கிறாள் என நான் இங்கே சொன்னால் படம் பார்க்கும் சுவாரசியம் குறைந்துவிடும்.. அதிலும் மூவரைக்கொல்வதுதான் மிக பயங்கரம் அப்பப்பா.. அவ்வாறான குற்றங்களுக்கு இவ்வாறான தண்டனைகள்தான் சரி என அப்போது என மனசு விரும்பியது..

இதே பெயரில் 1978 யில் வெளியான படத்தின் ரீமேக்தான் இது.. அப்படமும் இதுபோல்தான் இருக்கும் என கேள்விப்பட்டேன் பார்த்துவிட்டு சொல்கிறேன்..

படத்தின் ட்ரெய்லர்..


3/8/12

வாகை சூடவாவுக்கான தேசிய விருதும் அதிமேதாவி பதிவர்களும்..

குழந்தை தொழிலாளர்களின் கல்விக்கான அவசியத்தை முன்னிலைப்படுத்தி, சற்குனம் இயக்கிய வாகை சூடவா திரைப்படம் கடந்த ஆண்டிற்கான சிறந்த தமிழ்படத்துக்கான தேசிய விருதைப்பெற்றிருக்கிறது.இப்பொழுது தேசிய விருது தேர்வில் தமிழ்திரைப்படங்களும் ஏனைய மொழிப்படங்களோடு போட்டி போட்டு விருதுகள் வாங்குகின்றமையானது.. நல்ல தமிழ் சினிமாக்களை நேசிக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிதான்..
கடந்த முறை கூட ஆடுகளம்,தென்மேற்குபருவக்காற்று திரைப்படங்கள் தேசிய விருதுகளை வாங்கி குவித்தது.. இம்முறை வாகைசூடவா தவிர்த்து, சுசிந்திரனின் அழகர்சாமியின் குதிரை திரைப்படத்திற்கு சிறந்த பொழுது போக்கு படத்திற்கான விருதும், அப்படத்தில் நடித்த அப்புக்குட்டிக்கு சிறந்த துனைநடிகருக்கான விருதும் மற்றும் ஆரண்யகாண்டம் திரைப்படத்து சிறந்த புதுமுக இயக்குனர்,சிறந்த படத்தொகுப்பாளர் விருதுகள் கிடைத்திருக்கிறது..

வாகைசூடவா திரைப்படம் வெளியான புதிதில், நம் அதிமேதாவி பதிவர்கள் சிலர் அப்படத்தில் சொல்லவந்த விடயங்களை கருத்திற்கொள்ளாமல் சிறு சிறு குறைகளை பெரிதாக சுட்டிக்காட்டி
அது இப்பிடியில்ல.. இது அப்பிடியில்ல அது சரியில்ல இது சரியல்ல இப்பிடி வந்திருக்கலாம் அப்பிடி வந்திருக்கலாம்.. திரைக்கதை சரியில்ல.. என்றெல்லாம் சொல்லி தியேட்டருக்கு போக நினைத்த கூட்டத்தையும் தடுத்து நிறுத்தினார்கள்..

இதிலே முக்கியமாக ஒலகமகா சினிமா விமர்சகர் என நினைத்துக்கொண்டிருக்கும் ஒருவர்.. வழமையான அவரது பானியில் திரைக்கதை சரியில்ல சற்குனம் சறுக்கிவிட்டார்..குழந்தைகள் சொல்லிவிடும் அளவிற்கு  இருக்கு.. உட்கார முடியல்ல நெளிய வைக்கிறது என பீத்திக்கொண்டார்.. என்னமோ சினிமாவையும் திரைக்கதையையும் அவருதான் கண்டுபுடிச்சாரா என்ற சந்தேகம் வரும் அவரின் விமர்சனங்களைப்பார்த்தால்.. ஏனென்றால் எந்த இயக்குனரின் திரைக்கதையும் அவரை திருப்தி படுத்துவதேயில்லையாம்.. மாறாக சில மொக்கைபடங்களையும் உலகபடங்களையும் சூப்பர் என சொல்வதுண்டு..

அவரும் சினிமாவுல வேலை செய்வதாக சொல்லிக்கொள்கிறார்.. ஆனா இதுவரைக்கும் என்னத்த சாதிச்சாருன்னுதான் தெரியல்ல.. இதெல்லாம் பார்க்கும் போது வடிவேலுவின்.. "ஏய்...... நானும்,,, ரவுடிதான்" என்ற காமெடிதான் நினைவுக்கு வருகிறது.. ஹய்யோ ஹய்யோ.. இவ்வாறானவர்களுக்கெல்லாம் தக்க பதிலடியாக.. வாகைசூடவா பதில் சொல்லிவிட்டது, வடநாட்டு சினிமா ஆர்வலர்களுக்கு சிறந்தது என தோன்றியது, நம்மவூர் அதிமேதாவிகளுக்கு புரியவில்லை என்பதுதான் கோபம்,வருத்தம் எல்லாமே..

இவ்வாறான பதிவுகளைப்படிக்கும் வாசகர் கூட்டம், அவர்களின் மொக்கை விமர்சனங்களை நம்பி.. "படம் பார்க்கனும்னு இருந்தேன் இப்ப முடிவை மாத்திக்கிட்டேன்" என பின்னூட்டமிடுவதுண்டு..  இன்னொருவரின் ரசனையோடு,கருத்துக்களோடு.. தன் ரசனையை மட்டுப்படுத்திக்கொள்ளும் தமிழனின் ரசனை என்னவென்று சொல்வது..!!! முதலில் தமிழன் ரசனை மாற வேண்டும்.. மாஸ் ஹீரோக்களையும் மசாலா குப்பைப்படங்களை தவிர்த்து நல்ல படங்கள், திறமையான இயக்குனர்களை வெற்றிபெற செய்யவேண்டும்..
மாஸ் ஹீரோப்படம்,மசாலாப்படம் பார்த்துத்தான் ஆகவேண்டும் என்றால் திருட்டி விசிடியில் அல்லது இண்டர்நெட்டில் பார்த்தால் போதும்.. என்னைப்போல.. தமிழ்சினிமா உருவப்படவேண்டும் என்றால் எதுவுமே தப்பில்ல!

59th National Awards Winners List:

Best Feature Film: ’Devur’ (Marathi) & ‘Byari’ (Kannada)
Best Director: Gurvinder Singh, ‘Anhe Ghorey Da Daan’
Best Actor: Girish Kulkarni, ‘Deool’
Best Actress: Vidya Balan, ‘The Dirty Picture’
Best Supporting Actor: Appu Kutty, ‘Azhagar Samiyin Kuthirai’ (Tamil)
Best Supporting Actress: Leishangthem Tonthoingambi Devi, ‘Phijigee Mani’ (Manipuri)
Best Editing: Praveen KL, ‘Aranyaa Kandam’
Best Child Artist: Partho Gupte, ‘Stanley Ka Dabba’ and ‘Chillar Party’ cast
Best Film on Social Issues: ’Inshallah’ (Ashvin Kumar) and ‘Mindscape’ (Arun Chadha)
Best Non Feature Film: ’And We Play On’
Best Debut Film of a Director: ’The Silent Poet’ (Manipuri)
Best Children’s Film: ’Chillar Party’
Best Music Direction: Neel Dutt, ‘Ranjana Ami Ar Ashbona’
Best Background Score: ’Laptop’, Mayookh Bhaumik
Best Singer (Female): Rupa Ganguly
Best Singer (Male): Anand Bhate
Best Lyrics: ’I Am’, Amitabh Bhattacharya
Best Screenplay (Adapted): ’Shala’, Avinash Deshpande
Best Screenplay (Original): ’Chillar Party’, Vikas Behl & Nitish Tiwari
Best Dialogue: Girish Kulkarni, ‘Deool’
Best Make Up Artist: Vijram Gaekwad, ‘The Dirty Picture’ and ‘Bal Gandharva’
Best Special Effects: ’Ra.One’
Best Costume Design: Niharika Khan, ‘The Dirty Picture’ and Neeta Lulla, ‘Bal Gandharva’
Best Choreography: Bosco-Caeser for “Senorita…” from ‘Zindagi Na Milegi Dobara’
Best Hindi Film: ’I Am’
Best Marathi Film: ’Shaala’
Best Kannada Film: ’Kurmavatara’
Best Bengali Film: ’Ranjana Ami Aar Ashbona’
Best Malayalam Film: ’Indian Rupee’
Best Tamil Film: ’Vaagai Sooda Vaa’
Best Dogri Film: ’Dille Ch Vasya Koi’
Best Manipuri film: ’Phijigee Mani’
Best Punjabi Film: ’Anne Gode Da Daan’
Special Mention: Director Shari for ‘Adi Madhyantam’ (Malayalam Film) and Mallika for ‘Byari’ (Kannada Film)
Best film critic: Manoj P Pujari
Best Book Award: Anirudha Bhattacharjee and Balaji Vittal for ‘R.D. Burman The Man, The Music’
Indira Gandhi award for debut film director: Thiagarajan Kumararaja for ‘Aaranya Kaandam’
Special Jury Award: Anjan Dutta for ‘Ranjana Ami Aar Ashbo Na’
Related Posts Plugin for WordPress, Blogger...