10/24/12

அன்புள்ள அம்மாவுக்கு, நகைச்சுவை கதை!

ஒரு வீட்ல அம்மா அப்பா மகள் மூன்று பேரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள்.. அப்போது பத்தாம் வகுப்பு தேர்வு நடந்து முடிந்திருந்தது.. ஒரு நாள் அம்மா மகளின்  படுக்கை அறை சுத்தம் பண்ணப்போறப்போ அங்கே எல்லாமே நீட்டா இருக்கு, கட்டில் நடுவில ஒரு கடிதம், அதில "அம்மாவுக்கு"னு இருக்கு.பயத்தோட பிரிச்சு படிக்கிறா,"

அன்புள்ள அம்மாவுக்கு, 

இத எழுத மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் ஒரு பையனை லவ் பண்றேன்! அப்பாவும் நீயும் கண்டிப்பா எதிர்ப்பீங்கன்னு தெரியும் அதனால வேற வழியில்ல நானும் என் லவ்வரும் ஓடிப்போலாம்னு முடிவு எடுத்துட்டோம்.

கோவி கண்ணன் ரொம்ப ஸ்மார்ட்டான பையன் அழகா பச்சை குத்திக்குவான், சேறடிச்ச கலர் பேண்ட், ஃப்ரென்ச் தாடி இப்டி அவன் டேஸ்ட் வித்யாசமானது. அதில்லாம நான் இப்போ கர்ப்பமாயிருக்கேன்!.அவனுக்கு முதுமலை பக்கத்துல ஒரு கிரவுண்ட் நிலம் இருக்கு அதில என்ன நல்லா பாத்துப்பேன்னு சொல்லியிருக்கான்.அவனுக்கு நிறைய குழந்தை பெத்துக்க ஆசையாம்! எனக்கும் அதான் ஆசை!!.அவன் லாரி நல்லா ஓட்டுவானாம், அதனால ஒரு க்ளீனராவாச்சும் சேருவேன்னு இருக்கான்.இப்போதைக்கு எங்கள காப்பாத்திக்க அது போதும், அதே நேரத்தில எயிட்சுக்கு சீக்கிரமாவே மருந்து கண்டு பிடிக்கணும்னு கடவுள வேண்டிக்கிங்க கோவி கண்ணனுக்கு எயிட்சுன்னு அவன் சந்தேகப்படுறான். 

கவலைப் படாதீங்கம்மா எனக்கு 15 வயசாகுது வாழ்க்கையை பத்தி எனக்கு இப்ப நல்லாவே தெரியும் ஒரு நாள் உங்க பேரக் குழந்தைங்களோட கண்டிப்பா வர்றேன். 

உங்கள் மகள், 
பிரியா 

பின் குறிப்பு: மேல சொன்ன எல்லாமே பொய். நான் கதவுக்கு பின்னாடி இருக்கேன்.டேபிள்ல இருக்கிற என்னோட ரேங்க் ஷீட்ட விட வாழ்க்கைல மோசமான விஷயங்கள் இருக்குன்னு உங்களுக்கு ஞாபகப்படுத்தத்தான் இத எழுதினேன் உங்க கோபம் தீர்ந்ததும் என்னை கூப்பிடவும்."

10/22/12

நஸ்ருதீன் முல்லா நகைச்சுவை கதைகள்!

முல்லா ஒரு கழுதையை மிகச் செல்லமாக வளர்த்து வந்தார். அது ஒரு நாள் வெளியே மேயும் போது காணாமல் போய்விட்டது. கழுதை காணாமல் போன தகவலை பதறியடித்துக்கொண்டு முல்லாவிடம் சொல்லிய ஊர்க்காரர்களிடம் முல்லா, ''அப்பாடா... ரொம்ப நல்லதாய்ப் போனது'' என்றார். ''உங்கள் கழுதை காணாமல் போய் விட்டதென்கிறோம்.. எப்படி அதை நல்லதென்கிறீர்கள்?'' என்று கேட்டனர். முல்லா, ''நான் அதன்மேல் சவாரி போயிருந்தால் நானும் அதனுடன் காணாமல் போயிருப்பேன்... நல்லவேளை'' என்றாராம்.

ரு நாள் முல்லாவின் பக்கத்து வீட்டுக்காரர், முல்லாவை அழைத்து, ''உங்கள் கழுதையை இரவல் தர முடியுமா?'' என்று கேட்டார்.முல்லா, ''முடியாததற்கு வருந்துகிறேன். ஏற்கெனவே கழுதையை வாடகைக்கு விட்டு விட்டேன்'' என்றார்.முல்லா பக்கத்து வீட்டுக்காரரிடம் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது முல்லாவின் பின் தொழுவத்திலிருந்து கழுதையின் கனைப்பு கேட்கத் தொடங்கியது. பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம், ''கழுதை அங்கிருந்து சத்தமிடுகிறதே முல்லா'' என்றார். உடனே கோபத்துடன், ''என் வார்த்தையை விட கழுதையின் வார்த்தைதான் உனக்கு முக்கியம்... உனக்கு வெட்கமாய் இல்லை'' என்றார் முல்லா.

ரு ராஜா முல்லாவை தன் அரண்மனைக்கு ஒரு நாள் விருந்துண்ண அழைத்தார். அரசனின் சமையல்காரர் சமைத்த முட்டைக்கோஸ் கறி எல்லாவற்றையும் விட பிரத்யேக சிறப்புடன் சமைக்கப்பட்டிருந்தது. விருந்துக்குப் பிறகு ராஜா முல்லாவிடம் ''முட்டைக்கோஸ் கறி எப்படி இருந்தது?'' என்றார். முல்லா, ராஜாவிடம் ''மிக ருசியாக இருந்தது'' என்றார். ராஜா, ''மறக்க இயலாத சுவையென்று நான் நினைத்தேன்'' என்றார்.

முல்லா கூடுதலாகவே, ''நீங்கள் சொல்வது சரிதான்... தின்னத் திகட்டாத ருசி'' என்றார். ராஜா முல்லாவிடம், ''ஆனால் நீங்கள் ருசியானது என்று மட்டுமே சொன்னீர்கள்? என்று குறிப்பிட்டுச் சொன்னார்.''உண்மைதான். நான் ராஜாவுக்கு அடிமையே தவிர... முட்டைக்கோஸ§க்கு அடிமை இல்லை'' என்று முல்லா பதிலளித்தார்.

முல்லாவின் தெருவில் குடியிருக்கும் ஒருவர் முல்லா வீட்டுக்கு வந்தார். ''முல்லா, உங்கள் வீட்டுக் கொடியை எனக்கு இரவல் தரமுடியுமா?'' என்று கேட்டார்.

முல்லா, ''முடியாது'' என்றார்.தெருக்காரர், ''ஏன் முடியாதென்கிறீர்கள் முல்லா?'' என்றார்.

முல்லா, ''கொடியில் மாவு உலரப் போட்டிருக்கிறேன். தரமுடியாது'' என்றார் முல்லா.

தெருக்காரர், ''கொடியில் மாவை உலரப் போட முடியுமா?'' என்றார்.

முல்லா, ''இரவல் தருவதை விட அதுவொன்றும் சிரமமான காரியம் இல்லை'' என்றார்.

முல்லாவின் ஊரில் ஒரு புதிய கட்டடம் கட்டப்பட்டது. அடித்தளத்திற்காகத் தோண்டும்போதும், கட்டுமான வேலையிலும் மண்ணும் கல்லும் பெரிய குப்பையாக தெருவில் குவிந்துவிட்டது. அந்தக் குப்பை ஊரிலுள்ள எல்லாரையும் தொந்தரவு செய்தது. ஒரு நாள் முல்லா அந்தத் தெருவுக்குள் கடப்பாறையுடன் வந்து ஒரு குழி வெட்டத் தொடங்கினார்.

''முல்லா..! ஏன் திடீரென்று இங்கே வந்து குழிவெட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?'' என்றார் பாதசாரி ஒருவர்.

''மலைபோல் குவிந்திருக்கும் கட்டடக் கழிவை நான் தோண்டும் குழியில் போட்டு மூடிவிடுகிறதுதான் என் திட்டம்'' என்றார் முல்லா.

பாதசாரி முல்லாவிடம், ''அப்படியென்றால், இக்குழியை வெட்டும்போது வெளியே குவியும் மண்ணை என்ன செய்யப்போகிறீர்கள் முல்லா?'' என்றார்.

முல்லா கோபப்பட்டு, ''எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பாக முடியுமா?'' என்

படித்ததில் பிடித்தது!

கலாய்த்தலும் காமடியும்..!

மனைவி: என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவருதான் என்னை பொண்ணு பார்க்க வந்தாரு. நான் பிடிக்கலைன்னு சொன்னதுனால அதை நினைச்சே தண்ணியடிக்க ஆரம்பிச்சுட்டாரு.

கணவன்: அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடுறான்

கமலா : என்னடி, எப்ப பார்த்தாலும் ஒரு கழுதை உன் பின்னாடியே வந்துட்டு இருக்கு?

விமலா :  என் எ‌தி‌ர்‌த்த வீட்டு பைய‌ன் குடுத்த லவ் லெட்டரை இதுகிட்ட தா‌ன் தின்ன கொடுத்தேன். அதா‌ன்... அவன மாதிரியே இதுவும் பின்னாடியே வருது

கணவனும் மனைவியும் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தார்கள். அங்கிருந்த குரங்குகளைப் பார்த்து,

கணவன் : உன்னுடைய சொந்தக்காரங்க இங்கே இருக்காங்க!

மனைவி : ஆமாம். என்னுடைய மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்


இக்பால் செல்வன் : என்னுடைய மனைவியை ரொம்ப நேரமாத் தேடிக்கிட்டுயிருக்கேன். என்கூட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்க முடியுமா?

பெண் : அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

இக்பால் செல்வன்: நான் வேறு பெண்கள்கிட்ட பேசினாலே என் மனைவி எங்கயிருந்தாலும் வந்துடுவா.

போலீஸ் அதிகாரி: இப்படி மொட்டையா வந்து புகார் கொடுத்தா ஏத்துக்க மாட்டோம்...

தருமி : என்ன ஸார் அநியாயமா இருக்கு... அப்ப என் தலையில முடி வளர்ற வரைக்கும் நான் புகாரே கொடுக்க முடியாதா?!


அறிஞர் இக்பால் செல்வன் ஒருநாள் லிப்டில் வைத்து.

என்ன சார், இரயில் பிரயாணம் எல்லாம் சௌகர்யமா இருந்ததா?"

"இல்லைங்க, upper Berth குடுத்துட்டாங்க. ரொம்பக் கஷ்டமாப் போச்சு"

"Lower Birth" காரங்க கிட்டே சொல்லி மாத்திக்க வேண்டியதுதானே?""

இந்த ஐடியா எனக்கு வராமப் போயிருக்குமா,

கீழ் பெர்த்திலே யாருமே இல்லை. யாரைக் கேக்கிறது?"

மலேசியா சதுப்புநிலத்தீவில் அறிஞர் கோவி கண்ணன்.

"இந்தாப்பா, கொஞ்சம் சாம்பார் கொண்டா"

"அறிவு இருக்கா… யாரைப் பாத்து சாம்பார் கேக்கறே?"

"சாரி சார். இங்கேதான் இடம் காலியா இருக்கே… உட்காருங்களேன்; ஏன் அங்கே நிக்கறீங்க?"

"நான் உட்கார்ந்துட்டேன்னா "டேபிளை" எல்லாம் எவன்ய்யா துடைப்பான்?"

10/17/12

ஜன்னலோர விமான சீட்டுக்கு அடம்பிடித்த பிரபல பதிவர்!

கண்ணன் சிங்கப்பூரில் வசிக்கும் பிரபல தமிழ் பதிவர்! ஒரு முறை இந்தியா வந்து மீள திரும்பும்போது சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் ஏறுகிறார்.. மூன்று சீட் உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் இருந்த சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜன்னலோரம் இருந்த சீட்டில் உட்கார்ந்து கொண்டார். அது ஒரு வயதான பெண்மணிக்கு ஒதுக்கப்பட்டிருக்க, அந்தப் பெண்மணி தன்னுடைய சீட்டை தனக்கு விட்டுத்தருமாறு கேட்கிறார்.


கண்ணன் : அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். நான் ஒரு பிரபல பதிவர்! வேடிக்கை பார்த்தவற்றையெல்லாம் நாளை பதிவாக எழுதி பரபரப்பான தலைப்பிட்டு தமிழ்மணத்தில் சூடான இடுகையில் இடம்பிடிக்கவேண்டும் ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது எல்லாம் முடியும்.!

பெண்மணி : (விமான பணிப்பெண்ணிடம்) எனக்கு என் சீட்டை ஒதுக்கிக் கொடுங்க. இந்த ஆள் டார்ச்சர் பண்றான்.என்னென்னமோ உளர்றான்..
பணிப்பெண் : சார் தயவுசெய்து இவுங்களுக்கு அந்த சீட்டைக் கொடுத்து உங்க சீட்டுல உட்காருங்க.
கண்ணன் : அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். நான் ஒரு பிரபல பதிவர்! வேடிக்கை பார்த்தவற்றையெல்லாம் நாளை பதிவாக எழுதி பரபரப்பான தலைப்பிட்டு தமிழ்மணத்தில் சூடான இடுகையில் இடம்பிடிக்கவேண்டும் ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது எல்லாம் முடியும்!.

அங்கே நடந்த கலவரத்தைப்பார்த்து விமான துனைக்கேப்டனும் அங்கே வருகிறார்..
விமான துணை கேப்டன் : சார் தயவுசெஞ்சி சீட்ட விட்டுக்கொடுங்க சார். கெஞ்சிக் கேக்கிறேன் சார். அடம்பிடிக்காம அந்த அம்மாவுக்கு சீட்ட கொடுத்துட்டு உங்க சீட்ல உட்காருங்க!
கண்ணன் : அதெல்லாம் முடியாதுய்யா. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். நான் ஒரு பிரபல பதிவர்! வேடிக்கை பார்த்தவற்றையெல்லாம் நாளை பதிவாக எழுதி பரபரப்பான தலைப்பிட்டு தமிழ்மணத்தில் சூடான இடுகையில் இடம்பிடிக்கவேண்டும் நிறைய ஹிட்ஸ் வாங்க வேண்டும் நிறைய கமெண்ட் வாங்க வேண்டும்..! ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது எல்லாம் முடியும்!.

கேப்டன்( விஜயகாந்த் அல்ல விமானக்கேப்டன்) வருகிறார். நடந்த விபரங்களைக் கேட்கிறார். கண்ணன் காதில் மெதுவாக எதையோ கூறுகிறார். அதிர்ந்துபோன கண்ணன், தன்னுடைய சீட்டுக்கு மாறிக்கொள்கிறார்.

ஆச்சரியமடைந்த மற்றவர்கள் கேப்டனிடம் தனியே சென்று என்ன சொன்னீர்கள் எனக் கேட்க, அவர் பதிலளிக்கிறார். ஒன்னுமில்லை ஜெண்டில்மென்… நடுவுல இருக்கற சீட் மட்டும்தான் சிங்கப்பூர் போகும். மற்ற சீட்கள் எல்லாம் சவுதி அரேபியா போகும்னு சொன்னேன். அவ்வளவுதான்.!!

10/16/12

சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி அப்படின்னா என்னங்க..!


கள்ள நோட்டு அடிச்சு, நீ எப்படி போலீஸ்ல மாட்டினே? 
ரிசர்வ் பேங்க், கவர்கனர் கையெழுத்து போடுற இடத்துல, குப்பு சாமின்னு என் கையெழுத்தை போட்டுட்டேன்...!


மனைவி : " என்னங்க! இதுவரைக்கும் ரெண்டு பேரா இருந்து வந்த நாம, இனிமே மூணு பேரா ஆகப் போறோம்"
கணவன் : " அடி கள்ளி… எங்கிட்ட சொல்லவே இல்லையே….
எத்தனை மாசம் ?"
மனைவி : " அதில்லைங்க எங்கம்மாவும் நம்ம கூடவே வந்து செட்டில் ஆகப் போறாங்க"

மகேஷ் : " பிரபல கடத்தல் மன்னன் வளர்த்த நாய் செத்துப்போச்சாமே? எப்படி?"
தினேஷ் : "பின்னே… நாய்க்கு, தங்க பிஸ்கெட்டை போட்டு சாப்பிட வச்சிருக்கான்"


பொண்ணு - என்னோட மொபைல் எப்பவுமே என்னோட அம்மா கையில்தான் இருக்கும்.
பையன் - அய்யோ, நான் போன் பண்றப்ப என்னோட பெயர் வருமே...கண்டுபிடிச்சுட்டா...?
பொண்ணு -உன்னோட பெயரை நான் 'பேட்டரி லோ' அப்படின்னு ஸ்டோர் பண்ணி வச்சிருக்கேன். உன்னோட போன் வந்தா அம்மா போனை என்கிட்ட கொடுத்து சார்ஜ் போட சொல்வாங்க. நான் ரூமுக்குள்ள போய் உன்கிட்ட பேசுவேன்..எப்பூடி...!


மனைவி: என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவருதான் என்னை பொண்ணு பார்க்க வந்தாரு. நான் பிடிக்கலைன்னு சொன்னதுனால அதை நினைச்சே தண்ணியடிக்க ஆரம்பிச்சுட்டாரு.
கணவன்: அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடுறான்..


மனைவி : ஏங்க சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி அப்படின்னா என்னங்க..
நம்மாள் : நீ ஊருக்குப்போனா அது சனிப்பெயர்ச்சி..
போயிட்டு அப்படியே உன்தங்கையையும் கூட்டிக்கிட்டு வந்தா அதான்
குருப்பெயர்ச்சி..

ஐய‌ர் : மாப்பிள்ளை சீக்கிர‌ம், ந‌ல்ல‌ நேர‌ம் முடிய‌ற‌துக்குள்ள‌ தாலிய‌ க‌ட்டுங்க‌.
மாப்பிள்ளை : தாலி க‌ட்டிட்டாலே ந‌ல்ல‌ நேர‌ம் முடிஞ்ச‌ மாதிரிதானே.

தந்தை: எப்பவும் உன்னை முட்டாள்னு சொல்ற உங்க மிஸ், நான் கணக்கு போட்டு கொடுத்தப்புறம் என்ன சொல்றாங்க?
மகன்: இப்ப முட்டா பய மகனேன்னு திட்ட்ரங்க டாடி.
தந்தை: ?!?!?!


10/15/12

நாட்டு வைத்தியர் சர்தார் ஜோக்ஸ்.

ரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு.. எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப் பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!

ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி " டாக்டர் அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர் ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம் உதவியாள்கிட்டே " யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அதில இருந்த லேகியத்தை நிறைய வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..
சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னு கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!

சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே.. மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி " டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்
மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்.. என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. 


சர்தாருக்கு மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..
திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு"
ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும் தெரியலே...!!10/10/12

நாத்திகர்கள் ஜோக்ஸ்

பொதுமகன் :- இணையத்தில் மட்டும் வீரமா சமூகப்புரட்சி பற்றி எழுதும் நீங்கள் வெளியுலகில் ஏங்க கோழைமாதிரி ஒழிந்து வாழ்றிங்க..
நாத்திகவாதி :- யோவ்.. நான் நாத்திகவாதிய்யா.. இணையத்தில் மட்டும்தான் நான் புலி!
பொதுமகன் :- இணையத்தில் எழுதுவது பயமில்லையா?
நாத்திகவாதி:- அதுக்குத்தான் பொய் பெயர் இருக்குல்ல! எப்பூடி..!
"சே.. அரை மணி நேரமா பேசிக்கிட்டே இருக்காரு.."
 "பேசட்டுமே சார்... நம்ம கட்சி பிரமுகர்தானே.."
"நீங்க வேற... அந்த ஆள் வேளை வெட்டி இல்லாத நாத்திகவாதி சார்.."

"நம்ம நாத்திக அண்ணனுக்கு ரொம்பத்தான் குசும்பு" "ஏன்.. என்னாச்சு?"
 "கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைய முடியலையாம்...
கோர்ட்லயே ஒரு ரூம் வாடகைக்குக் கேக்கிறார்"

கனடாவில் வாழும் பிரபல நாத்திக தமிழ் பதிவர் சிறுமியொருத்திற்கு உபதேசம் செய்து வாங்கிகட்டிக்கொண்ட போது

மனைவி :-"எங்க அம்மாவ ஸ்டேஷன்லேருந்து அழைச்சிக்கிட்டு வரச்சொன்னா ஏன் தயங்கறீங்க...?"
நாத்திகவாதி:- "உங்க அம்மா மட்டும்தான் வர்றாங்களா..?"
மனைவி :- "ஏன்? மச்சினியும் கூட வந்தாத்தான் அழைக்கப்போவீங்களா?

நாத்திகன்: அன்பே நாம் மோதிரம் மாற்றிக் கொள்வோமா? 
 காதலி: நான் போட்டிருப்பது தங்கம். நீங்க போட்டிருப்பது டூப்ளிகேட்.
  நீங்களும் தங்க மோதிரம் போட்டுட்டு வாங்க, மாத்திக்குவோம். 
 நாத்திகன்: ? ? ? ? ?

நாத்திகவாதி :-"பில்லை நானே கொடுக்கிறேன்னு சொன்ன என் காதலியை நம்பி ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாப் போச்சு."
 நண்பன் :- "ஏன்?"என்னாச்சு..
 நாத்திகவாதி :- "பில்லை நான் கொடுக்கிறேன். பணத்தை நீ கொடுத்துடுனு கடைசியில சொல்லிட்டாள்."

சிங்கப்பூரில் வாழும் பிரபல நாத்திக தமிழ் பதிவர் செத்து செத்து விளையாடும் விளையாட்டின் போது!


"நான் ஊருக்குப் போயிருந்தப்ப யார இங்க அழைச்சிக்கிட்டு வந்தீங்க?....
 வாஷ்பேஸின் கண்ணாடில ஸ்டிக்கர் பொட்டு ஒட்டியிருக்கு?" 
 "அது நீ ஒட்டுனதாத்தான் இருக்கும்டி....." நான் நாத்திகவாதி அப்பிடியெல்லாம் பண்ணமாட்டேன்
  "இவ்வளவு சின்னதாவா நான் வக்கிறேன்?.... நாத்திகவாதிங்கிற முகமூடி போட்டுகிட்டு எல்லா கள்ளத்தனமும் நீங்க செய்வீங்கன்னு எனக்கு தெரியாதா என்ன!!


தொடரும்!!
Related Posts Plugin for WordPress, Blogger...