இஸ்ரேலிய தாக்குதலால் கொல்லப்பட்ட ஹமாஸ் ரானுவத்தளபதி அஹ்மத் அல் ஜபரி
இக்பால் செல்வன் என்ற பதிவருக்கு இஸ்லாமிய சமூகத்தின் மீது ஏன் இத்தனை வெறுப்போ கோபமோ தெரியவில்லை! தன்னை ஒரு நாத்திகராக காட்டிக்கொள்ளும் இவர் எங்கெல்லாம் முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்களோ அப்போதெல்லாம் ஆனந்தத்தில் திக்குமுக்காடி போய்விடுவார்.. அதேபோல்தான் இப்போது இஸ்ரேலின் காட்டுமிராண்டி தாக்குதலுக்கும் நியாயம் பேசுகிறார்!அதுவும் தன் சொந்தப்புத்தியினால் அல்ல மேற்குலக மீடியாக்களுக்கு ஜால்ராஅடித்து ஆங்கிலத்தில் வருவதை அப்படியே தமிழ்படுத்துவதன் மூலம்!! அவை இஸ்ரேலின் தற்காப்புக்கான தாக்குதலாம்! பெண்களையும் குழதைகளையும் கொன்றுதான் இஸ்ரேல் தன்னை தன்னை தற்காத்துக்கொள்கிறதாம்!
"மொத்த மக்கள் தொகை 500, 000 பேர். உலகில் வாழத் தகுதியே அற்ற ஒரு வட்டாரம் என்பதில் காசாவும் அடங்கும். அங்குத் தான் செயல்பட்டு வருகின்றது ஹமாஸ் என்ற தீவிரவாத இயக்கம்."-இக்பால் செல்வன்.
எப்படி தன் காழ்ப்புணர்ச்சியையும் வெறுப்பையும் ஒரு இனத்துக்கெதிரான வெறியையும் வெளிப்படுத்தியிருக்கிறார் பாருங்கள்.. இஸ்ரேலின் அடக்கு முறைகளுக்கெதிராக போராடுபவர்கள் தீவிரவாதிகளாம் பெண்களையும் குழந்தைகளையும் கொல்பவர்கள் வீரர்களாம் போராளிகளாம்..! இக்பால் செல்வனுக்கும் வெறிபிடித்து அலையும் இஸ்ரேலிய யூதனுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது! ஒரு பக்க நியாயங்களை மட்டுமே அறிவாளித்தனமாக விஷக்கருத்துக்களோடு பேசி மக்களை நம்ப வைப்பதே இவரின் பிரதான தொழில்! அது மட்டுமல்லாம் தன் சொந்த பூமியை மீட்டெடுக்க போராடுபவர்கள் நச்சுப்பூச்சிகளாம் அவர்கள் அழிக்கப்படவேண்டியவர்களாம்!http://www.kodangi.com/2012/11/israel-hammers-gaza-with-airstrikes-warns-of-ground-operation.html#.UKaNpIeQo_M
இஸ்ரேலிய தாக்குதலால் கொல்லப்பட்ட குழந்தை!
ஒரு போராட்டத்தை கொச்சைப்படுத்தியது மட்டுமல்லாமல் அவர்கள் மதத்துக்காக மட்டும்தான் போராடுகிறார்கள் என மதசாயம் வேறு பூசுகிறார்
திரு டோண்டு இராகவன் போல் இக்பால் செல்வனும் வெளிப்படையாகவே சொல்லியிருக்கலாம் தான் ஒரு இஸ்ரேல் ஆதரவாளன் என! அது அவரின் தனிப்பட்ட விருப்பம் அதில் யாருக்கும் பிரச்சினையில்லை.. அதைவிட்டுவிட்டு ஒரு சமூகத்தையே வாழத்தகுதியற்ற சமூகமாக விபரித்து அநியாயத்துக்கு நியாயம் கற்பிக்காமல் இருந்திருக்கலாம்!
இதற்குள் பலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என நீலிக்கண்ணீர் வேறு! வினவு தளம் கூடத்தான் எல்லாவற்றையும் போல் இஸ்லாத்தின் மீதும் விமர்சனம் வைக்கிறது அதில் கொஞ்சமாவது நியாயமும் நேர்மையும் இருக்கிறது..ஆனால் இவரின் பதிவுகள் முழுக்க முழுக்க ஒரு மதத்தையும் அதனைச்சார்ந்த மக்களையும் கொச்சைப்படுத்துவதற்கென்றே திட்டமிட்டு நாத்திகன் என்ற முகமூடி போட்டு எழுதப்படுபவை! அவர் எவ்வளவுதான் எழுதினாலும் அவரின் உள்மனது உரத்துச்சொல்லும் உண்மைகளை! அதை இந்த இந்த உலகமும் அறியும்!
இஸ்ரேலின் தாக்குதல் சம்பந்தமாக வினவுவின் பதிவு படிக்க
http://www.vinavu.com/2012/11/16/gaza-attack/
நண்பர் கலையரசன் பதிவிலிருந்து....
காஸா: முற்றுகைக்குள் வாழ்தல்
இஸ்ரேலிய இராணுவ முற்றுகைக்குள் 1.5 மில்லியன் பாலஸ்தீனிய மக்கள். அவர்கள் வாழ்வது காஸா என்ற மாகாணம். இல்லை, அது ஒரு திறந்தவெளி சிறைச்சாலை. அம்மக்களின் அத்தியாவசிய தேவைகள்,சமையல் வாயு, மின்சாரம், தண்ணீர்,உணவு, மருந்து, எதுவுமே இஸ்ரேலிய படைகளை கடந்து போவதில்லை. இதனால் மருத்துவமனைகளில், குழந்தைகளின் இறப்புவீதம் அதிகரித்துள்ளது. இரண்டு வருடங்களாக நீடிக்கும் பொருளாதாரத் தடைகளுக்குள், மக்கள் தப்பி பிழைத்து உயிர்வாழ்வதே ஒரு போராட்டம் தான்.
உத்தியோகபூர்வமாக இஸ்ரேலின் ஒரு பகுதியான காஸாவை சேர்ந்த மக்கள், பாலஸ்தீனியர்கள் என்ற காரணத்தால் மட்டுமல்ல, தமக்கு பிடித்த ஹமாஸ் கட்சியை, பொதுத்தேர்தலில் ஜனநாயகரீதியாக தெரிவு செய்ததே, அவர்கள் செய்த "மாபெரும் குற்றம்." ஜனநாயகக் காவலர்களாக வேடம் போடும் மேற்குலக நாட்டு அரசுகள், காஸா மக்களின் ஜனநாயக உரிமையை காப்பாற்ற களமிறங்கவில்லை. அதற்கு மாறாக, பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யயப்பட்ட ஹமாசுடன் ஒத்துழைக்க மறுத்தனர். ஒரு பக்கம் ஜனநாயகத்திற்காக போராடும் மேற்குலக கனவான்கள், மறு பக்கம் தமக்கு பிடிக்காத கட்சிகளை மக்கள் தெரிவு செய்தால், ஜனநாயக மறுப்பாளர்களாக மாறிவிடுகின்றனர். சிலி, கொங்கோ, அல்ஜீரியா, வெனிசுவேலா... இந்த வரிசையில் காஸா. இப்படி இவர்களது ஜனநாயக முகத்திரை அடிக்கடி கிழிந்து, சுயரூபம் தெரிகின்றது.
தொடர்ந்து படிக்க..
http://kalaiy.blogspot.nl/2008/08/blog-post_24.html