12/20/12

ஹய்யா.. உலகம் அழியல்லயே!!!தேடிச் சோறு நிதந்தின்று - பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்

வாடித் துன்பமிக உழன்று - பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து - நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல

வேடிக்கை மனிதரைப் போலே - நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ !

- பாரதியார்

ஹனிமூன் போகலாம் வாங்க!

"என்னங்க சாப்பாடு நல்லாருக்கா... என் சமையலைப் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லமாட்டேன்கிறீங்களே?"
"எல்லாப் பிரமாதமா இருக்கு... இதோ ஒரு அயிட்டம் இருக்கு பாரு.. இது ஒண்ணுதான் கொஞ்சம் 'உப்பா' இருக்கு!"
"நாசமாப் போச்சு. அது 'உப்பு'தாங்க!"

கோயில் உண்டியலை திருடியது உண்மையா?
உண்மைதான் ஜட்ஜ் ஐயா, ஆனா அதுல இருந்த பணத்தை எடுத்துகிட்டு உண்டியலை திருப்பி வெச்சிட்டேன்

ஒரு ஊரில் ஒரு முட்டாள் பணக்காரர் இருந்தார். அவர் பெரிய பங்களா ஒன்று கட்டினார். அவை பார்வையிட தன் நண்பர்களுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். வந்திருந்தவர்கள் அனைவரும் பங்களாவின் அழகை வெகுவாக பாராட்டினர். பின்பு பங்களாவின் பின்புறம் சென்று பார்த்தனர். அங்கு மூன்று நீச்சல் குளங்கள் இருந்தது. அனைவரும் ஆச்சர்யத்துடன் எதற்காக 3 நீச்சல் குளங்கள் என்று கேட்டனர். அதற்கு அந்த பணக்காரர் ஒன்று வெந்நீர் குளியல் வேண்டும் என்பவர்களுக்காக, மற்றொன்று குளிர்ந்த நீர் வேண்டும் என்பவர்களுக்காக என்றார். அனைவரும் வெந்நீர் சரி, தண்ணீர் சரி. காலியாக இருக்கின்றதே அது எதற்கு என்று கேட்டனர். அது நீச்சல் தெரியாதவர்களுக்காக என்றார் 

ஹலோ நான் குமார் பேசுறேன். என் கடனை எப்ப திருப்பி தருவீங்க?
சேலத்துல் 3  குமார்கிட்டே கடன் வாங்கி இருக்கேன். ஈரோடுல   6 குமார்கிட்டே கடன் வாங்கியிருக்கேன். யாரா இருந்தாலும், தெளிவா விபரமா பேசுங்க குழப்பாதீங்க.

ஏன் ஸ்கூட்டரை திருடினே...?" 
"டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு வண்டிய எடுன்னு 
அவசரப்படுத்தினாரு எசமான்..!"

ராமு - 10 ரூபாய் இருந்தா கொடு
சோமு - என்னிடம் சுத்தமா ரூபாய் இல்லை
ராமு - பரவாயில்லை, கொடு நான் சுத்தம் செய்து கொள்கிறேன்.

மனைவி: டாக்டர்! என் கணவர் ஒரு பேனாவை விழுங்கி விட்டார்.
டாக்டர்: இன்னும் சில நிமிஷத்தில் வந்து விடுகிறேன்
மனைவி: அதுவரை நான் என்ன செய்வது?
டாக்டர்: பென்சிலை உபயோகியுங்கள்.
என்னால் என் நண்பர்கள் துன்பபப்படுவதைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.
உடனே அவர்களுக்கு உதவி செய்வாயா?
நான் கண்ணை மூடிக் கொள்வேன். இல்லாவிட்டால் அந்த இடத்தை விட்டு ஓடிவிடுவேன்.

வீட்டுலே சுகர் இருந்தாக் கூடவா போலீஸ் அரெஸ்ட் பண்ணும்?
நீ வேற... அவரோட வீட்டுலே ப்ரௌன் சுகர் இருந்துச்சாம்!

வெங்கடேஷும் அவன் மனைவியும் தம் ஹனிமூன் போட்டோக்களை பார்த்துக்கொண்டிருக்க அவர்களது 3 வயது மகன் கேட்டான். " இந்த போட்டோஸ்ல நான் ஏன் இல்லே. அப்போ எங்கே இருந்தேன்?" வெங்கடேஷ் சொன்னான் " ஆங்! ஹனிமூன் போறப்ப எங்கிட்ட இருந்தே வரப்ப அம்மாக்கிட்ட இருந்தே..


12/16/12

ஹே நான் இன்னும் பேச்சிலர்தான்..!

உலகில் யாரும் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ கிடையாது.. நிறங்கள் மாறுபட்டாலும் யாவரும் சமமே.


 பேஸ் வாஷ் பண்ணாம போனா கேர்ள் பிரண்ட் துரத்தி விட்ருவா அதான்..

எப்புடி தெண்னை மரம்.. 

பேமிலி டூர்.. வாங்களே சேர்ந்து போகலாம்.

ஹே நான் இன்னும் பேச்சிலர்தான்..

இது எப்பூடி

முடிவையும் ஆரம்பத்திலேயே தீர்மானியுங்கள்.

இதுதான் பொறாமங்குறது..

ஹே ஹே

புறத்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிட்டு விட முடியாது

சூப்பர்

12/14/12

ஜஸ்ட் சும்மா ஜாலி.!

ரோட்ல போகும் போது நேரா பார்த்து போகனும் புரிஞ்சுதா..

இப்படி கொஞ்சம் நில்லு நான் விளையாடிட்டி வரேன்..

தூக்கமா தூக்கமா வருதுஐய்யயோ..

ஹிஹிஹி

செம ஜாலி...

ஹே ஹே ,,,


இது gangnam style தான்..12/11/12

இப்பொழுது சந்தையில் ஆண்ட்ரியா போன்!

அப்பா, எனக்கு கப் ஐஸ் வாங்கி தாப்பா!
அதெல்லாம் விலை அதிகம்! சம்பளம் வரட்டும் வாங்கித்தரேன்!
அப்ப இடைக்கால நிவாரணமா ஒரு குச்சி ஐஸாவது வாங்கித்தாப்பா!


நடுக்கடல்ல ஒரு சின்ன தீவு.. அங்கே ஒரு ஆம்பளை, ரெண்டு லேடீஸ் மட்டும் இருக்காங்க.. இருந்தாலும் அவன் மனசுல ஒரு மகிழ்ச்சியே இல்லே! ஏன்?
அந்த ரெண்டு லேடீஸ்ல ஒருத்தி மனைவி, இன்னொருத்தி அம்மாவாயிருக்கும்!

நான் பிறந்த ஊர் "ரை" என் மனைவி ஊர் "ராந்தகம்"
கேள்விப்படாத ஊருங்களா இருக்கே?
டாக்டர் என்னை "மது" உபயோகப்படுத்த கூடாதுன்னு சொல்லியிருக்காரே!

போன வருஷ தீபாவளிக்கு உங்க கடையில வாங்கின ஸ்வீட் எல்லாம் நல்லா இருந்துச்சுங்க!
அது அப்படியேத்தான் இருக்குதுங்க! ஒரு ரெண்டு கிலோ கொடுக்கட்டுமா

வேளாவேளைக்கு சாப்பிடுங்க! வாரம் ஒரு தடவை எண்ணெய் தேய்ச்சு குளிங்க! வீட்டை பத்திரமா பாத்துக்குங்கன்னு சொல்லிட்டு உங்க மனைவி எங்க போறாங்க! ஊருக்கா?
  இல்லே! ஜவுளி கடைக்கு

கண் முன்னால சின்ன சின்னதா பூச்சி பறந்தது.. கண் டாக்டரை பார்த்து கண்ணாடி போட்டுகிட்டேன்!
 இப்ப எப்படி இருக்குது!
பூச்சி பெருசு பெருசா இருக்குது!


ஆஸ்பத்திரி வாசல்ல குடை ராட்டினம் நிறுத்தி வைச்சிருக்கீங்களே! எதுக்கு டாக்டர்?
திடீர்னு மயக்க மருந்து தீர்ந்துட்டா பேஷண்டை அதுல உட்கார வைச்சு சுத்திவிடத்தான்!

என்ன மாடல் ஜாக்கெட் தைக்கனும்? ஜன்னல் வெச்சா? கதவு வெச்சா?
 என்னம்மோ "புல்லட் புருப்" ஜாக்கெட்னு சொல்றாங்களே அந்த மாடல்ல தைச்சுக்கொடுங்க!

இந்த ஊழலில் உங்கள் பங்கு என்ன?
இன்னும் பிரிக்கவில்லை யுவர் ஆனர்!

திறந்து வைக்க கூட்டிட்டு போனவங்களை தலைவர் கண்டபடியா திட்டிட்டு வர்றாரே ஏன்?
 பீர் பாட்டிலை கொடுத்து திறக்கச் சொல்லிட்டாங்களாம்!

நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்தால் ஓவ்வொருவருக்கும்
ஆண்ட்ரியா போன் இலவசமாக வழங்கப்படும்!
 தலைவரே அது ஆண்ட்ராய்டு போன்!

12/3/12

இன்னிக்கு ராத்திரி 'பைனல்' மெட்ச் இருக்கு

இண்டர்வியுவில்:
உனக்கு முன் அனுபவம் ஏதாவது இருக்கா?
இருக்கே! இதுவரை 27 இண்டர்வியுவிலே 346 கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கேன்!

நோயாளி : எனக்கு எப்ப உடம்புக்கு சரியில்லாமல் போனாலும் நான் உங்ககிட்டே தான் டாக்டர் வருவேன்!
டாக்டர் : காரணம்!
நோயாளி : உங்களுக்கு வர்ற ஒரே ஒரு பேஷண்டையும் அவளவு சீக்கிரம் சாகடிக்க மாடீங்கக்கிற நம்பிக்கையால் தான் !

டாக்டர்! தெனமும் எனக்கு விநோதமான கனவெல்லாம் வருது.  நீங்கதான் எனக்கு உதவணும்"
"என்ன மாதிரியான கனவு ?"
"தெனமும் கழுதைகளோட நான் கால்பந்து விளையாடுறதா கனவு வருது"
"தினமுமா?"
"ஆமாம். ஆனா ஒவ்வொரு நாளும் வேற வேற கழுதை குழுவோட வெளையாடுறேன்.  சில சமயம் நான் ஜெயிக்கிறேன்.  சில சமயங்கள்ல அதுங்க ஜெயிக்குதுங்க."
டாக்டர் ஒரு பாட்டில் நிறைய மாத்திரைகளை அவரிடம் கொடுத்து,
"நாலு மணி நேரத்துக்கொருமுறை மூணு மாத்திரை வீதம் சாப்பிடுங்க.  இம்மாதிரியான கனவுலேர்ந்து முற்றிலுமா உங்களுக்கு விடுதலை கிடைக்கும்" என்றார்.
"சரி டாக்டர்! நாளையிலேர்ந்து இந்த மாத்திரைகளை எடுத்துக்கறேன்"
"ஏன் நாளையிலேர்ந்து? இன்னிக்கு என்னாச்சு?"
"அது வந்து டாக்டர், இன்னிக்கு ராத்திரி 'பைனல்' மெட்ச் இருக்கு"  

எங்க வீட்டுக்காரர் ஒருநாள் பீச்சுல காத்து வாங்க வந்தார். அங்கே என்னை பார்த்து காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டார்!
   கவனிச்சேன்! அடிக்கடி "காத்து வாங்கப்போனேன்! ஒரு கழுதை வாங்கி வந்தேன்"ன்னு பாடறாரே!

"என்னை, பெண் பார்க்க வந்தன்னிக்கு, நீங்க டிபனை தொடவே இல்லையே ஏன்?"

 "ரெண்டாவது 'ஷாக்' எதுக்குன்னு, தான்..!"


மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?
கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...
ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது...
நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்.


படிச்ச ஒருத்தன் கிராமத்துக்கு போறான்.., அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக்கிட்டு இருக்கு..
அவனுக்கு ஆச்சரியமா இருக்கு பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள ஒரு விவசாயி சாப்பிட்டுட்டு இருந்தாரு.. அவர்கிட்ட கேட்டான்…
படிச்சவன்: மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?
விவசாயி : அது பழகின மாடு தம்பி.., அதுவே சுத்திக்கும்..,
படிச்சவன் : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா…! எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி : அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம் வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்..
படிச்சவன் : அது சுத்தறதை நிறுத்திட்டு., ஒரே இடத்துல நின்னு.., தலைய மட்டும் ஆட்டினா..! அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி : இதுக்குத் தான் தம்பி., நான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம் படிக்க அனுப்பலை..!
படிச்சவன்: ? ? ? ? ?


12/1/12

What The Hell

 நல்ல்தொரு அறிவுரையை சொல்லும் குறும்படம்..


Related Posts Plugin for WordPress, Blogger...