12/14/13

அனுஷ்கா ஆறடி அழகுச்சிலை!

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் யாரோ வருவார் யாரோ போவார் போவதும் வருவதும் தெரியாதே. இந்த பாடல் வரிகள் போல, நாம் ரசிக்கும் சினிமாவிலும் நடிகைகள் என்ற பெயரில் எத்தனையோ எத்தனையோ அழகு பதுமைகள் நாள்தோறும் அணிவகுப்பாளர்கள். ஆனாலும்,அவர்களில் ஒரு சிலரே மனிதில் இடம்பிடித்து தங்கிச்செல்வார்கள். அந்த வகையில் இந்த மங்களூரில் பிறந்த மல்கோவா அனுஷ்காவும் ஒருவர். இவரின் இயற்பெயர் ஸ்வீட்டியாம். எப்படி பொருத்தம் பார்த்திங்களா?

அசாதாரன ஆறடி உயரம், அழகு முகம், மஞ்சல் தேகம், சின்ன சிவந்த உதடு, சில்லென்ற புன்னகை. சிறிய இடை, அழகான நடை இதுதான் இந்த தேவதையின் பயோகிராபி. இவர் ஒரு யோகா டீச்சராம். அழகை ஆராதிக்கும் ஆந்திர தெலுங்கு சினிமா இவரையும் ஆட்டத்துக்கு சேர்த்துக்கொண்டது 2005 யில் பூரி ஜெகன்னாத்தின் Super என்ற படத்தில் நாகர்ஜீனாவுக்கு ஜோடியாக. அதே வருடத்தில் வெற்றிப்பட இயக்குனர் ராஜமௌலியின் விக்ரமாகுடுவில் தெலுங்கின் இன்னுமொரு மாஸ் நடிகர் ரவிதேஜாவுடன் நடிக்கும் வாய்ப்பு. அப்படம் ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றி பெற இவரின் புகழும் வாய்ப்புகளும் பல்கிப்பெருகியது.

சாதாரன நடிகைகளையே தெலுங்குவாலாக்கள் புரட்டி எடுத்து விடுவார்கள். அழகுப்பதுமை அனுஷ்காவை விடுவார்களா அவருக்கும் அதே நிலைதான். தெலுங்கு படங்களில் ஒரு பாடலிலாவது நாயகியை கடலிலோ ஏரியிலோ குளிக்கவைத்து, நனையவைத்து, குத்தாட்டம் போட வைத்து என்ன என்ன சில்மிஷங்கள் பண்ணமுடியுமோ அத்தனையும் செய்து துவைத்து எடுப்பார்கள் அந்த விளையாட்டுக்களிலிருந்து அனுஷ்காவும் தப்பவில்லை! இப்படியான விளையாட்டுக்களை தெலுங்கு இயக்குனர்களும் நடிகர்களும் தொடர்ச்சியாகவே செய்பவர்கள். இதில் ஓரிருவரை தவிர வேறு யாரும் விதிவிலக்கல்ல அதுவும் புதிய நாயகிகள் ரவிதேஜா போன்ற பொம்பளை பொறுக்கிகள் கைகளில் கிடைத்தால் அவ்வளவுதான். இவற்றை மறுப்பதால் வாய்ப்புகள் பறிபோய்விடும் என்ற பயத்தாலும் பணத்தாசையாலும் இவற்றுக்கெல்லாம் ஒத்துக்கொள்கிறார்கள்.

தமிழில் இவரை முதலில் பயன்படுத்தியது சுந்தர் சி தான். ரெண்டு படம் மூலம். அப்போது பெரிதாக தமிழ் இயக்குனர்கள் ரசிகர்கள் கண்களில் இவர் படவில்லை. தமிழனுக்கு குண்டான கொழுக்மொழுக் நடிகைகளையும் மலயாள கப்பக்கிழங்குகளையும் பிடிக்கும் அளவிற்கு இவ்வாரனவர்களை பிடிப்பதில்லை என்பது உண்மைதான்.என்ன கேவலமான ரசனை! ஆனாலும் அண்மைய ஆண்டுகளிலிருந்து தமிழ் இயக்குனர்கள் அனுஷ்கா பக்கம் நாடியிருப்பது அவருக்கான தமிழ்ப்பட வாய்ப்புகளிலிரிந்து தெரிய வருகிறது. வேடைக்காரன், சிங்கம், தெய்வத்திருமகள், வானம், தாண்டவம், இரண்டாம் உல்கம் என அந்த தேவதை தமிழனுக்கும் கருனை காட்ட தொடங்கிவிட்டார். வாழ்த்துக்கள் அனுஷ்கா.12/10/13

தொழில்னு வந்துட்டா ராத்திரி, பகல்னு பார்க்க முடியுமா.


நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?
யாரோ இங்கே தமிழாசிரியர் யாருன்னு இவரைக் கேட்டதுக்கு அடியேன் அடியேன்னு சொல்லியிருக்காரு.

என்னுடைய அலாரக்கடிகாரம் முதல்முறையாக இன்று என்னை எழுப்பியது.
எப்படி?
என் மனைவி அதைக்கொண்டு என் மண்டையில் ஓங்கி ஓர் அடி கொடுத்தாள்.

வெறும் கையால் மின்சார கம்பிகளை நம்மால் தொட முடியுமா?
ஓ, ஒரே ஒரு முறை தொடமுடியுமே!

நிருபர்: நீங்க சமீபத்திலே நடிச்சு வெளிவந்த பயங்கரப் படத்தைப் பார்த்தேனுங்க.
நடிகை: அது பயங்கரப் படம் இல்லேங்க. நான் மேக்கப் இல்லாம நடிச்ச முதல் படம்ஒரு ஹெச்.ஆர். எக்ஸிக்யூடிவ் பொண்ணு இறந்து எமலோகம் போனாங்களாம். 
அங்க எமதர்மன் "வாழ்த்துக்கள் நீங்க சொர்க்கம் போக தகுதியானவங்க ஆனா அதுக்கு முன்னாடி ஒரு நாள் சொர்க்கத்திலயும் ஒரு நாள் நரகத்திலயும் தங்கணும் அப்புறம் சொர்க்கமா நரகமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கலாம்"னார்.
அவங்க "இல்ல நான் இப்பவே சொர்க்கமே போறேன் எதுக்கு நேரத்த வேஸ்ட் பண்ணனும்?"னாங்க.
அவர் "இது இங்க ரூல்ஸ் நீங்க ஃபாலோ பண்ணித்தான் தீரனும்"ங்க... அவங்களும் முதல்ல நரகம் போயி ஒரு நாள் தங்க முடிவு பண்ணி போனாங்க.
அது நரகம் மாறியே இல்ல அழகான பூங்கா அங்க இவளோட ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்க நாள் முழுக்க பூமிக்கதை எல்லாம் பேசினாங்க.அப்புறம் சாத்தான் வந்தாரு அவளோட ஃப்ரென்ட்ஸ் அறிமுகப்படுத்தி வைக்க அவரும் நல்லாவே பேசினாரு ஆளு பாக்கவும் ரொம்ப க்யூட். அவளுக்கு நரகத்த விட்டு வரவே மனசில்ல.ஒரு நாள் முடிஞ்சு போக நரகமே இப்படி நல்லா இருக்கே சொர்க்கம் எப்படி இருக்கும்னு போயி பாத்தா யாரும் யாரோடும் பேசவே இல்ல பூ பறிக்கறதும் சாமி கும்பிடறதுமாவே இருந்திருக்காங்க இவளுக்கு பயங்கர போர்.
கடைசியா எமன் " நீங்க எங்க போக முடிவு பண்ணிருக்கிறீங்க "ன்னு கேக்க அவ " நான் நரகத்துக்கே போறேன் சொர்க்கத்த விட அது தான் நல்லா இருக்கு"ன்னா.எமன் " நல்லா யோசிச்சுக்கங்க போனா திரும்பி வரமுடியாது"ங்க அவ பிடிவாதமா இருக்க நரகத்துல விட்டு கதவ சாத்திட்டாங்களாம்.
இப்போ பாத்தா முன்ன இருந்த அழகான பூங்கா மாறி பாலைவனமாகி அவளோட ஃப்ரென்ட்ஸ் எல்லாம் கஷ்டப்பட்டு வேலை செஞ்சிட்டு இருந்தாங்களாம்.சாத்தான் கூட மேக்-அப் இல்லாத நடிகை கணக்கா கர்ண கொடூரமா இளிச்சானாம்.அவ ஒண்ணும் புரியாம "என்ன இது நேத்த விட எல்லாமே மாறி இருக்கு"ன்னு கேக்க அதுக்கு சாத்தான் சொன்னானாம் ,
"நேத்து உங்களுக்கு நடந்தது இன்டர்வியூ இன்னைக்கு நீங்க ஒரு எம்ப்ளாயீ"தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.
மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.

உங்க பையன் கோவிலுக்குப் போனா அதிகமா பொய் பேசறானே, ஏன்?
கோவிலுக்குள்ளே போனதும் அவன் மெய் மறந்துடுவான்.

நண்பர் 1: என்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க...? 
நண்பர் 2: நான் தான் சொன்னேன்ல... பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு!

நண்பர் 1: எங்க தலைவர் தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்துவாரு...
நண்பர் 2: எங்க தலைவரு 'சிக்கனோட' பயன்படுத்துவாரு.

நண்பர் 1: உங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்? 
நண்பர் 2: அது 'ஈஸி' சேராச்சே!"என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."
"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"
"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"

நீதிபதி: பட்டப் பகல்ல ஏன் திருடினே?
திருடன்: தொழில்னு வந்துட்டா ராத்திரி, பகல்னு பார்க்க முடியுமா.. எஜமான்!

ஆசிரியர்: உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம் !
அம்மா: அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார் !


என்னமோ மாதிரியிருக்கு. குடிக்க ஏதாவது கொடேன்”
சூடாவா? இல்ல ஜில்லுன்னு வேணுமா?
”தலையை வலிக்கிற மாதிரியிருக்கு. சூடாவே கொடு”.
காபியா? இல்லே டீயா?
ம்.. காபியே கொடு.
பில்டர் காபி வேணுமா? அல்லது புரூ காப்பியா?
பில்டர் காபி தான் எனக்குப் பிடிக்கும். அதையே கொடு.
நரசுஸ் காபித் தூள்ல போடவா? இல்ல காபி டேயா?
நரசுஸ் தூள்லேயே போடு.
ஸ்டிராங்கா வேணுமா? இல்லேன்னா லைட்டா வேணுமா?
ஸ்டிராங்காவே இருக்கட்டும்.
சர்க்கரை போட்டு வேணுமா? இல்லேன்னா போடாமலா?
சர்க்கரை போட்டே கொடு.
கிளாசுலே வேணுமா? இல்ல டம்ளரில தரவா?
”சே! ஒங்கிட்ட போய் காபி கேட்டேன் பாரு, என் புத்தியைச் செருப்பால
அடிக்கணும்”
”ஒன் செருப்பாலயா? இல்ல, என் செருப்பாலயா?”

12/7/13

சர்தார்ஜி அபத்த நகைச்சுவைகள்


சர்தார் புனேயிலிருந்து சண்டிகர் செல்லும்விமானத்தில் ஏறுகிறார்.மூன்று சீட் உள்ள  வரிசையில்அவருக்கு நடுவில் இருந்த சீட் ஒதுக்கப்பட்டிருந்தது.ஆனால் ஜன்னலோரம்  இருந்த சீட்டில் உட்கார்ந்துகொண்டார்அது ஒருவயதான பெண்மணிக்கு ஒதுக்கப்பட்டிருக்கஅந்தப்பெண்மணி தன்னுடையசீட்டை தனக்குவிட்டுத்தருமாறு கேட்கிறார்.

சர்தார் : அதெல்லாம்முடியாதுநான் வெளியேவேடிக்கை பாத்துக்கிட்டுதான்வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அதுமுடியும்.
பெண்மணி:பணிப்பெண்ணிடம், எனக்கு என் சீட்டை ஒதுக்கிக்கொடுங்க.இந்த ஆள் டார்ச்சர் பண்றான்.
பணிப்பெண்:சார் தயவுசெய்து இவுங்களுக்குஅந்த சீட்டைக் கொடுத்து உங்க சீட்டுல 
உட்காருங்க.
சர்தார் : அதெல்லாம்முடியாதுநான் வெளியேவேடிக்கை பாத்துக்கிட்டுதான்வருவேன்ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அதுமுடியும்.
விமான துணை கேப்டன் :சார் தயவுசெஞ்சி சீட்டவிட்டுக்கொடுங்க சார்.கெஞ்சிக் 
கேக்கிறேன் சார்.
சர்தார் : அதெல்லாம்முடியாதுநான் வெளியேவேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன்ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அதுமுடியும்.

கேப்டன் வருகிறார்நடந்தவிபரங்களைக் கேட்கிறார்.சர்தார்ஜியின் காதில்மெதுவாக எதையோகூறுகிறார்அதிர்ந்துபோன சர்தார் தன்னுடைய சீட்டுக்குமாறிக்கொள்கிறார்.
ஆச்சரியமடைந்த மற்றவர்கள் கேப்டனிடம் தனியே சென்று என்னசொன்னீர்கள் எனக் கேட்க,அவர் பதிலளிக்கிறார்.ஒன்னுமில்லை ஜெண்டில்மென்… நடுவுல இருக்கற சீட் மட்டும்தான்சண்டிகர் போகும்மற்றசீட்கள் எல்லாம் குஜராத்போகும்னு சொன்னேன்.அவ்வளவுதான்.ஒரு சர்தார்ஜி பால்கனில வேடிக்கை பார்த்துட்டு இருந்தப்போ ஒருத்தன் ஓடிவந்து 
பூட்டாசிங் உன் தம்பிஆக்ஸிடன்ட்ல பூட்டான்ன்னான்.
தம்பியே செத்துட்டான் இனி எனக்கென்னன்னுபொசுக்குன்னு மாடில இருந்து குதிச்சிட்டார்.பாதி வழில ஒருபைப்பை புடிச்சுக்கிட்டு''ன்னு அழ ஆரம்பிச்சார்.மாடில தகவல்சொன்னவன் ஏன்யா அழறன்னுகேட்டான்,இவரு,எனக்குதம்பியே இல்லைப்பா,இவ்ளோ முட்டாளா இருக்கேனேன்னு திரும்ப குதிச்சார்.ஆனா காயத்தோடதப்பிச்சிட்டார்திரும்ப 'ன்னு அழ  ஆரம்பிச்சார்.
இப்ப ஏன்யா அழற
நான் பூட்டாசிங்கேஇல்லைப்பா


நம்ம சர்தார்ஜி வேலைக்குஅப்ளிகேஷன் போட ஃபார்ம் எழுதிட்டிருக்கார்.பேருஊரு,முகவரி எல்லாமே எழுதிட்டார்நடுவில "Salary Expected" அப்டின்னு வந்திருக்கு , ரொம்ப நேரம்யோசிச்சு தயங்கி தயங்கி கடைசியா எழுதினார் "Yes".

சந்தா-சிங் மருதுவமனையில் அனுமதிக்கப்பட்டு சாவுக்கு போராடிக்கொன்டிருந்தார். அவர் கட்டில் அருகில் அவர் குடும்பத்தார்கள் நின்றிருந்தார்கள். அவர் நிலைமை மோசமாகிக்கொண்டிருந்தது. அவர் கூடவே அவர் நண்பர் பன்டா-சிங் நின்றிருந்தார். சந்தா இறக்கும் தருவாயில் ஒரு பேனாவும் கடதாசியும் கேட்டார். கொடுத்தார்கள். எழுதி முடிந்த கையோடு இறத்து விட்டார். 
பன்டா யோசித்தார்.....இது சந்தா இறக்கும் தறுவாயில் எழுதியது. இதில் எதாவது முக்கிய விசயம் இருக்கும். எனவே இது சாகவாசமாக பார்க்கவேண்டிய விடயம் எனவே தனது சட்டைப் பையில் வைத்து விட்டார்.
எல்லா கிரிகைகளும் முடிந்து மூன்றாம் நாள், பன்டா தனது நண்பர் வீட்டிற்கு போனார். பேசிக்கொன்டிருக்கும் போதுதான், சந்தா இறக்கும் போது இந்த சட்டை போட்டிருந்தேன் என்ற ஞாபகம் வந்தது. சந்தா குடும்பத்தார் அனைவரையும் கூப்பிட்டார். "இது ஒரு முக்கிய கடிதம். சந்தா இறக்கும் போது எழுதி என்னிடம் கொடுத்து விட்டு போனது" என்று சொல்லிவிட்டு பிரித்து வாசிக்க ஆரம்பித்து விட்டார். " பன்டா, மடையா, நீ என் ஒ..க்..க்..க்..க் ........................... ohmy.gif " அவரால் மீதி வாசிக்க முடியவில்லை. விழி பிதுங்கியது. எனவே மற்றவர்கள் அதை பறித்து வாசித்தார்கள். அதில் எழுதப்பட்டிருந்தது.
"பன்டா, மடையா,  நீ என் ஒக்சிசன் குழாய் மீது நிக்கிறாய், கொஞ்சம் விலகு 48_48.gif "

எல்லாம் இணையத்தில் படித்தது.

8/14/13

கணவன் மனைவி கலாட்டா..!ஒரு சந்தோஷமான தம்பதியோட அறுபதாவது வருட திருமண நாள் அன்னைக்கு "எப்டி இவளோ ஒற்றுமையா உங்களால குடும்பம் நடத்த முடிஞ்சது?"ன்னு புருஷன் கிட்ட கேட்டாங்க.அவரு தன்னோட நினைவுகள்ள மூழ்க ஆரம்பிச்சார் "அப்ப எங்களுக்கு ஹனி மூன் நாங்க ஊட்டில குதிர சவாரி பண்ணிட்டிருந்தோம், அது அவளோட குதிரை!.ரெண்டு பேரும் குதிரையை கூட்டிட்டு நடந்து போய்ட்டிருந்தோம், குதிரை திடீர்னு முரண்டு பிடிச்சது அவ ஒழுங்கா வான்னு அதட்டுனா, நான் 'ஏன் கோபப்படுற'ன்னு கேட்டேன் அவ எதும் பேசல. திரும்ப முரண்டு பிடிச்சது,திரும்ப ஒழுங்கா வான்னா 'ரெண்டு தடவ தான் சொல்லணும் மூணாவது தடவ எதுத்தா சுட்டுடணும்'னு தனக்கு தானே சொல்லிட்டு துப்பாக்கிய துடைச்சா நான் விளையாட்டுக்கு சொல்றாள்னு விட்டுட்டேன்.திரும்ப குதிரை முரண்டு பிடிச்சது, பொசுக்குன்னு சுட்டுட்டா. நான் கோபமா ஏன் சுட்டேன்னு கேட்டேன்,என்ன ஒரு மாதிரி கோபமா பாத்துட்டே துப்பாக்கிய துடைச்சா...ஹ்ம்ம்ம்...அப்புறம் ஆயிடிச்சு அறுபது வருஷம்"


டியர் ஹஸ்பெண்ட்,
உங்களை விட்டு பிரிகிறேன் என்ற நற்செய்தியை சொல்லவே இக்கடிதம்.
ஒரு நல்ல மனைவியாக உங்களோடு 7 வருடங்கள் குடும்பம் நடத்தியதற்கு எனக்கென்று இப்போது எதுவும் இல்லை
அதிலும் கடைசி இரு வாரங்கள் நரகமாக இருந்தன.உங்கள் பாஸ் எனக்கு போன் பண்ணி நீங்கள் வேலையை விட்டு விட்டதாக சொன்னார்.
நீங்கள் வீட்டுக்கு வந்த போது நான் அழகாக ஹேர் கட் செய்திருந்தேன், உங்களுக்கு பிடித்த உணவு செய்திருந்தேன் மற்றும் புது இரவு உடை அணிந்திருந்தேன்
அன்று இரவு நீங்கள் வந்து சில நொடிகளில் சாப்பிட்டு விட்டு ஸ்போர்ட்ஸ் பாத்துட்டு தூங்கப்போய்ட்டீங்க
என்னைக் காதலிக்கிறேன் என்று கூட சொல்லவில்லை என் பக்கம் திரும்பக் கூட இல்லை

நீங்கள் என்னை ஏமாற்றுகிறீர்களோ அல்லது காதலிக்கவில்லையோ என நினைக்கிறேன் அதனால் நான் உங்களைப் பிரிய முடிவெடுத்து விட்டேன்

பின் குறிப்பு: என்னைத் தேட வேண்டாம், நானும் உங்கள் நண்பர் ஜானும் அவர் சொந்த ஊருக்கு செல்கிறோம்
முன்னாள் மனைவி

------------------

அன்புள்ள முன்னால் மனைவிக்கு,
உன் கடிதத்தை விட மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஏதும் இல்லை
நாம் ஏழு வருடங்கள் ஒன்றாக இருந்ததையே பெரிய சாதனையாகக் கருதுகிறேன்
நான் ஸ்போர்ட்ஸ் அதிகமாக பார்க்க காரணமே உன் தொணதொணப்பு தாங்காமல் தான் ஆனால் அது ஒரு போதும் பலனளித்ததில்லை

உன் ஹேர்கட்டை நான் கவனித்தேன் "ஆண் போல இருக்கிறாய்" என சொல்ல நினைத்தேன் ஆனால் நல்லதாக ஏதும் பேச முடியாவிட்டால் ஏதும் பேசாதே என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்கள் அதனால் அமைதியாகி விட்டேன்

நீ எனக்கு பிடித்தமான உணவு செய்ததாகக் கூறினாய் அனேகமாக நீ ஜானையும் என்னையும் குழப்பிக்கொண்டாய் என நினைக்கிறேன் நான் 5 வருடங்களுக்கு முன்பே கோழிக்கறி சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன்

உன் இரவு உடையையும் பார்த்தேன் அதில் விலை tag கூட இருந்தது அன்று தான் என்னிடம் ஜான் 500 ரூபா வாங்கியிருந்தான் அந்த உடை விலை 499 ரூபா இது தற்செயலானது என நம்புகிறேன்

இவை எல்லாவற்றுக்கும் அப்புறமும் நாம் பேசி சரி செய்ய முடியுமென நம்பினேன்

அதனால் தான் எனக்கு லாட்டரியில் 10 மில்லியன் டாலர் விழுந்த போது வேலையை ரிசைன் செய்து விட்டு நம் இருவருக்கும் ஜமைக்காவுக்கு டிக்கட் வாங்கினேன்

வீட்டுக்கு வந்து பார்த்தால் உன் கடிதம் தான் இருந்தது

எல்லாவற்றுக்குமே ஒரு காரணம் இருக்குமென நம்புகிறேன், முழு திருப்தி தரும் வாழ்க்கை உனக்கு கிடைக்குமென நம்புகிறேன்

உன் கடிதம் கிடைத்ததால் ஜீவனாம்சமாக சல்லிக்காசு கூட தரத் தேவையில்லை என வக்கீல் சொன்னார்
டேக் கேர்

பின் குறிப்பு: இதற்கு முன் சொன்னதாக நினைவில்லை ஜான் ஒரு ஆப்பரேஷனுக்கு முன்பு மேரியாக இருந்தவன் அது உங்கள் வாழ்க்கைக்கு பெரும் பிரச்னையாக இருக்காது என நம்புகிறேன்

விடுதலை மகிழ்ச்சியோடு முன்னால் கனவன்


ஒரு கனவன் போன வேலை பாதியிலேயே கேன்சல் ஆயிட்டதால திரும்பி வீட்டுக்கு வந்தான், மனைவிக்கு தகவல் சொல்லாமலே.கதவ ரொம்ப நேரமா தட்டி அப்புறந்தான் திறந்தா மனைவி.

இவ்வளவு நேரம் என்ன பண்ணின?
அது குளிச்சிட்டு இருந்தேன்
வரவர நீ சரியில்ல ஹே இதென்ன களிமண் சிலை...
அது... நேத்து ஸ்மித் வீட்டுல இதே மாதிரி சிலை பாத்தேன் அதான் ஒண்ணு ஆர்டர் பண்ணிட்டேன்
ஹ்ம்ம் வெட்டி செலவு

அதுக்கப்புறம் அவன் கண்டுக்கல, நைட் ரெண்டு மணி மனைவி தூங்கிட்டாளான்னு பாத்துட்டு ப்ரெட், தண்ணி கொண்டு போயி சிலை கிட்ட சாப்பிடுன்னான்.சிலையா நடிச்சவனுக்கு ரொம்ப ஆச்சர்யம்,

ரொம்ப நன்றி சார் எப்படி கண்டு பிடிச்சீங்க?
ஹ்ம்ம் ஸ்மித் வீட்ல சிலையா நின்னது நாந்தான், மூணு நாள் பச்சத்தண்ணி கூட எவனும் தரலை
அண்ணாசாமி ஒரு நாள் ஒரு டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார்.அப்போது சுடுகாட்டிற்கு
2 சடலங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.அவற்றுடன் நாயுடன் ஒருவர் செல்ல அவர் பின்னால் ஒருவர் பின் ஒருவராக
கிட்டத்தட்ட 500பேர் சென்றுக்கொண்டிருந்தனர்.அதைப் பார்த்த அண்ணாசாமிக்கு ஆச்சர்யம்.டீக்கடைக்காரரிடம்
நான் எவ்வளவோ பிண ஊர்வலங்களைப் பார்த்திருக்கிறேன்..ஆனால் இவ்வளவு ஒழுங்காக ஒருவர் பின் ஒருவராக
சென்று பார்த்ததில்லை..ஆமாம் ..யாருடைய ஊர்வலம் இது? என்றார்.
அவர் நாயுடன் செல்பவரை சுட்டிக்காட்டி 'அவரைக் கேளுங்கள்' என்றார்.
நாயுடன் செல்பவர் சொன்னார்'முதலில் சென்றது என் மனைவி..'
'ஆமாம் ..அவருக்கு என்னவாயிற்று?'
என் நாய் அவளைக்கடித்து விட்டது.இரண்டாவது பினம் என் மாமியார்..என் மனைவியைக் காப்பாற்ற சென்றவரை
என் நாய் கடித்து விட்டது.
உடனே ஆவலுடன் அண்ணாசாமி'இந்த நாய் எனக்கு வாடகைக்கு கிடைக்குமா?'என்றார்.
வரிசையில் போய் நில்லுங்கள் என்றார்...நாயுடன் சென்றவர்.
அண்ணாசாமி 501வது ஆளாக வரிசையில் நின்றார். 
நல்லா மூச்சு முட்ட குடிச்சதால ஹேங் அவுட் ஆன புருஷன் லேட்டா எழுந்து ரூம விட்டு வெளிய வந்து பாத்தான்.டைனிங் டேபிள்ல லெட்டர்,"அன்பே ஹாட் பேக்கில் சப்பாத்தி இருக்கிறது நீங்கள் களைப்பாக இருப்பீர்கள் என்று உங்கள் பாஸ்க்கு போன் பண்ணி லீவ் சொல்லிவிட்டேன் மாலை சந்திப்போம்".அவனுக்கு ஒண்ணும் புரியல , குழந்தைங்க கிட்ட,"என்னடா நடந்தது நைட்"னான்.
அது," நீங்க ரொம்ப குடிச்சிட்டு க்லாஸ் எல்லாம் உடைச்சிட்டு வாந்தி எடுத்தீங்க"
"ஆனா எல்லாம் நீட்டா இருக்கு சரி மேல சொல்லு"
"அப்புறம் அம்மா உங்கள படுக்க வைக்க ஷர்ட்,பேன்ட்லாம் கழட்டுனாங்க, நீங்க 'கையை எடு கேடு கெட்டவளே எனக்கு கல்யாணம் ஆயிடிச்சி'ன்னீங்க" 
ஒரு வெள்ளிக்கிழமை, இளைஞன் நகைக்கடைக்குள்ள ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்தான்.அங்கிருந்த ஆளை கூப்பிட்டு "என் காதலிக்கு ஒரு வைர நகை எடுக்கணும்" அப்டின்னான், அந்தப் பொண்ணை பார்த்துக்கிட்டே.

கடைக்காரரும் ஒரு நகையை காட்டி 50000 ரூபா ஆகும்னாரு.அவன் சலிச்சுக்கிட்டே,"இல்ல பாஸ் என் காதலிக்கு தர்ற நகை...யுனிக்...அப்டியே அவ்ளோ அழகா இருக்கனும்"

கடைக்காரர் ரொம்ப இம்ப்ரஸ் ஆகி ஒரு லட்ச ரூபா நகை ஒண்ணு காமிச்சார், அந்தப்பொண்ணுக்கு கண் கொள்ளல, அவன் "ஓகே ஓகே இதை பேக் பண்ணுங்க நான் செக் தர்றேன்" அப்டின்னான்.

"ஸாரி சார் செக் ஏத்துக்கறதில்ல"

"ஓகே இப்ப செக் வாங்கிக்கங்க திங்கக்கிழம பேங்க்ல பணம் இருக்கான்னு கேட்டுட்டு சொல்லுங்க அப்புறம் வாங்கிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்கள்.

திங்கட்கிழமை கடைக்காரர் கோபமாக போனில் பேசினார்,"யேய் பேங்க்ல உன் அக்கவுண்ட்ல ஒரு பைசா இல்ல எதுக்குடா வந்து ஆர்டர் பண்ணின?"

"மன்னிச்சுக்கங்க சார் ஆனா இந்த வீக் எண்ட் எப்டி போச்சு தெரியுமா?"
ரெண்டு நண்பர்கள் பேசிக்கிட்டாங்களாம்
நேத்து எனக்கும் என் வைஃப் புக்கும் பயங்கர சண்டை நான் பீச் போலாம்கறேன்
அவ சினிமா போலாம்னா
சரி கடைசில என்ன படத்துக்கு போனீங்க?

8/13/13

பிரண்ட்ஷிப் கவிதைகள்."எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! "
என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
நண்பனுடன் பேசுகையில்
பயமாய் இருக்கிறது
"எம் பேரு ஞாபகமிருக்கா"
என கேட்டு விடுவானோ ?
அப்பப்போ
போன் பண்ணுடா…
எனும் சம்பிரதாய விசாரிப்புக்கு
"கண்டிப்பா"
என நகர்வான்,
நான் கொடுக்காத நம்பரை
அவன்
எழுதிக் கொள்ளாமலேயே.
பொய்கள் தான்
உண்மையாகவே
நட்பைக் காப்பாற்றுகின்றன.
"நேற்று கூட பேச நினைத்தேன்"
என
யாரோ பேசிக் கடக்கிறார்கள்
செல்போனில்
அவளா இது ?
மீன் வாங்கிச் செல்லும்
பெண்ணிடம்
கொஞ்சமும் மிச்சமில்லை
கால் நூற்றாண்டுக்கு முன்
கண்களில் சிரித்த வசீகரம்.
நட்பு இருப்பதாய்
சொல்லிக் கொள்ளவேனும்
அடிக்கடி
தேவைப்படுகின்றன
வெள்ளிக்கிழமை பார்கள்.
கிராமத்து மௌன வீட்டின்
கம்பி அளியின் ஊடாக
நண்பனின்
புன்னகை முகம் தெரிகிறது.
இறந்து
வெகு நாட்களான பின்னும்.
"ஏழாயிரம் சம்பளம் டா மச்சி"
என
குதூகலித்துச் சொல்லும் நண்பனிடம்
சொன்னதில்லை
பல மடங்கு வாங்கும் நான்.
அவனிடம் மிகுந்திருக்கிறது நட்பு.
யாரை ரொம்பப் பிடிக்கும் ?
எதிர்பார்ப்புடன்
மகளைக் கொஞ்சுகையில்,
தோழியின் பெயரைச் சொல்லி
நட்பைப் பெருமைப்படுத்துகிறது
நர்சரி !

நன்றி எழுதியவர் http://xavi.wordpress.com

7/23/13

மசாலா படமாச்சே... அதான்!

 "குடிக்காம தெளிவா இருக்கும் போதுதான் இவர் தப்பே செய்யறார்..."
"எப்படி..?"
"குடிக்கணும்னு அப்பதானே முடிவெடுக்கறார்!"

"போலீஸ் செலக்சன் முடிஞ்சப்புறம் எதுக்கு வந்தே...?"
"எல்லாம் முடிஞ்சப்புறம் வந்தாதானே சார் போலீஸ்...!"

 "நமது மன்னர் போரிலிருந்து வருவதற்கும், பாரிலிருந்து வருவதற்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்!"
"என்ன அது?"
"போரிலிருந்து வரும் போது அலறிக்கொண்டு வருவார்; பாரிலிருந்து வரும் போது உளறிக்கொண்டு வருவார்!"

"அந்த ஆள் எப்பவும் மத்தவங்க கையைத் தான் எதிர்பார்ப்பாரு..."
"ஏன்...?"
"அவருதான் கைரேகை ஜோசியம் பார்க்கறவராச்சே...!"

நோயாளி: ஆபரேஷன் பண்ணினா பிழைக்க முடியுமா டாக்டர்?!
டாக்டர்: ஆபரேஷன் பண்ணித்தானே நான் பிழைக்கிறேன்

"சாமியார் கதையை சினிமாவா எடுக்கிறீங்களே.... என்ன டைட்டில்?"
"பெண்ணைத் தாண்டி வருவாயா!"

"படம் போட்டதும் எல்லாரும் தும்முறாங்களே... ஏன்?" "மசாலா படமாச்சே... அதான்!"

ஆசிரியர்: கிணத்துல கல்லைப் போட்டா கல்லு மூழ்கிடும் ஏன்? 
மாணவன்: ஏன்னா, அதுக்கு நீச்சல் தெரியாது சார்!

ஒருவர்: கல்யாணம் செய்துக்க சம்மதமான்னு உங்க பொண்ணை வைத்து சீட்டு எடுக்கச் சொல்றீங்களே...? மற்றொருவர்: பின்ன...! என் பெண்ணைக் கிளி மாதிரில்ல வளர்த்திருக்கேன்.

ஒருவர்: நம்ம குப்புசாமி திருமணம் செய்துக்கற பொண்ணு பேரு அதிர்ஷ்டமாம்... 
மற்றொருவர்: அப்ப குப்புசாமியை அதிர்ஷ்டம் அடிக்கப் போகுதுன்னு சொல்லு...!

"பெண்ணோட அப்பா ரொம்பப் பசையுள்ளவருன்னு எப்படிச் சொல்றே?" 
"கோந்து கம்பெனி வச்சிருக்காரே!"

7/8/13

ஒருவருடைய உருவத்தை வைத்து அவர் குணத்தை அறிய முடியுமா?.

ஒரு வயதான பெண்மணி விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்து கொண்டு இருந்தார்.விமானம் வர தாமதமாகும் என்ற அறிவிப்பை கேட்டவுடன் கடைக்கு சென்று படிக்க புத்தகமும், சாப்பிட பிஸ்கட்டும் வாங்கி வர சென்றார்.

ஒரு இருக்கையில் அமர்ந்து தான் வங்கி வந்த புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தார்.அவருக்கு அருகில் ஒரு வாட்ட சாட்டமான ஒருவர் உட்கார்ந்து இருந்தார்.

சிறிது நேரத்தில் அந்த நபர் குட் டே பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து ஒரு பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு காலியாக இருந்த சேரின் மீது வைத்தார்.

அந்த பெண்மணி அவரை பார்த்து முறைத்து விட்டு ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
அந்த நபர் மறுபடியும் ஒரு பிஸ்கெட் எடுத்து சாப்பிட்டார்.

அந்த பெண்மணிக்கு கோபம் வந்து விட்டது. இருந்தாலும் அந்த நபரின் உருவத்தை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் இவரும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.

அந்த முரட்டு மனிதன் மறுபடியும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.

ச்சே, பிஸ்கட்டை திருடி திண்கிறானே, இவனுக்கு கொஞ்சம்
கூட வெட்கம்,மானம் இல்லையா என்று நினைத்து கொண்டே, அந்த பெண்மணி தானும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.

இப்படியே இருவரும் மாறி, மாறி பிஸ்கட் சாப்பிட்டு கொண்டே இருந்தனர்.கடைசியாக ஒரே ஒரு பிஸ்கட் இருந்தது.

இருவரும் அந்த பிஸ்கட்டை பார்த்தனர்.சிறிது நேரம் அமைதியாக இருந்தனர்.

அந்த முரட்டு மனிதன் அந்த பிஸ்கட்டை இரண்டாக புட்டு பாதியை அவர் சாப்பிட்டு விட்டு மீதியை அந்த இருக்கையில் வைத்தார்.

அந்த பெண்மணி மீதி பாதி பிஸ்கட்டை சாப்பிட்டு விட்டு விமானம் ஏற கிளம்பி விட்டார்.

விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன், என்ன மோசமான மனிதன் பிஸ்கெட் வேண்டும் என்றால் கேட்டு வாங்கி சாப்பிட வேண்டியது தானே.

இப்படியா திருடி திண்பது,உலகத்தில் இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்று நினைத்துக் கொண்டே தண்ணீர் குடிப்பதற்கு பையில் கையை விட்டார்.

அவருக்கு ஒரே ஆச்சரியம்,இவர் கடையில் வாங்கிய பிஸ்கட் பாக்கெட் பையில் அப்படியே இருந்தது.

அப்படின்னா நான் இவ்வளவு நேரம் அங்கு சாப்பிட்ட பிஸ்கட் அந்த முரட்டு மனிதனுடையதா…

நான் தான் பிஸ்கெட் திருடி சாப்பிட்டேனா…என்று சொல்லிக்கொண்டே தன் செயலுக்காக வருந்தினார்.

இந்தக் கற்பனைக் கதை நமக்கு உணர்த்துவது,

”எப்பவுமே ஒருவருடைய உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது.

அவர் நல்லவராகவும் இருக்கலாம்,மோசமானவராகவும் இருக்கலாம்.

ஏன் அவர் நம்மைக் காட்டிலும்,

எல்லாவற்றிலும் ஒழுக்க சீலராகவும்,

உயர்ந்த பண்புடையவராகவும் கூட இருக்கலாம். 

அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை, 

பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பது தான்.

என்ன கொஞ்சம் வித்தியாசமாக, மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்! 

நம்மிடம் இருக்கும் குறை பெரிதாக, தீமை இல்லாததாகத் தெரிவது, அடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!

எனவே,

அடுத்தவர்கள் மேல் குறை காணும் முன் நாம் அதற்கு முற்றிலும் தகுதியானவரா என்று ஒரு கனம் நினைக்க வேண்டும்.

படித்ததில் பிடித்தது!

2/16/13

‘விஸ்வரூபம்’ - காயத்தை ரத்தத்தால் கழுவும் கதை!


கருத்துச் சுதந்திரம் பாகம் 1
'விஸ்வரூபம்’ என்ற, திரைக்கு வந்து சில நாட்களே ஆன 'திரைக் காவியத்தைக்' காண நேர்ந்தது. சர்ச்சையே அப்படத்திற்கு விளம்பரத்தைத் தேடித் தந்தது. முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரித்தவுடன், நான் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கமல் அறிவித்தார். பிறகு அவர்களிடம் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு வெளியேறும் முடிவை தள்ளிப் போட்டிருக்கிறார். தேசப்பற்று காரணமாக இருக்கலாம்.
விஸ்வரூபம் திரைப்படம், முஸ்லீமாக இருக்கும் கதாநாயகன், விஷ்ணுவின் ரூபம் எடுக்கிற படம். அதாவது நல்லது செய்யும் எந்த முஸ்லீமுக்கும் ஓர் இந்து சாயல் இருக்க வேண்டும்.
kamal_vishwaroopam_600
அவரது ‘விஸ்வரூபம்’ திரைப்படம் புரியவில்லை என்று பலர் கூறுகின்றனர். அதெல்லாம் பொறாமை காரணமாக சொல்கிறார்கள். அது மிக எளிதாக புரியும் படம். ஏதாவது ஒரு ‘கான்’ வில்லனாக வரும் சில அமெரிக்க ஜேம்ஸ்பாண்ட் படங்களின் காட்சிகளையும், பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடித்த சில இந்தி சினிமாக்களின் காட்சிகளையும், இந்திய ‘தேசபக்தி’ பொங்கும் சில தமிழ் சினிமாக்களின் காட்சிகளையும் வெட்டி ஒட்டிவிட்டு, 11வது அவதாரத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் சேர்த்துவிட்டால் அதுதான் இந்த விஸ்வரூபம். ஆனால் கமல்சார் இதற்காக ஏன் சொத்தை அடகுவைத்தார் என்று புரியவில்லை.
இப்படத்தில் கமலின் பெயர் விஸ்வநாதன். புத்திசாலியான அதிகாரியாக ஒருவர் நடித்தால் நாயகன் ஒன்று ‘ராகவனாக’ இருப்பார் அல்லது இந்த படத்தின் பாத்திரம் போல ‘விஸ்வநாதனாக’ இருப்பார். ஏதாவது ஒரு அம்பிமார். கமல் இந்தப் படத்திலும் ஒரு பார்ப்பனர். இதனால் அவர் சாதிப்பற்று கொண்டவர் என்று நீங்கள் தவறாக புரிந்துகொள்ளக் கூடாது அல்லவா! அதனால், அவாள் பாசையில் அச்சுப்பிசகாமல் பேசும் அவரது மனைவி, கோழிக்கறி விரும்பிச் சாப்பிடுவார். இப்படி ஆராய்ச்சி செய்வது சரியா என்று யாராவது என்னைக் கேட்டால் நடிகர் ரஜினிகாந்த், கமலைப் போல அடிக்கடி பார்ப்பன வேடத்தைப் பூணுவதில்லையே, ஏன் என்ற கேள்விக்கு பதில சொல்வீர்களாக.
கமல் சாரின் பார்ப்பன மனைவி ‘அடக் கடவுளே’ என்று சொல்லும்போது கமல் ‘எந்தக் கடவுளே’ என்று கேள்வி கேட்டு, தான் நாத்திகன் என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால் முஸ்லீம்கள் இப்படத்தின் நோக்கத்தைக் கேள்வி கேட்பார்களே என்பதற்காக கமல் உண்மையிலேயே தொழுகை நடத்தக் கூடிய முஸ்லீமாம். மச்சம் மட்டும் வச்சு மாறுவேடம் போடும் நாயகன் மாதிரி, இதுல முஸ்லீம் பாத்திரம் மச்சம் வச்சவரு மாதிரி இருக்கும். விஸ்வநாதன் என்ற தொழிலுக்காக வேடம் போடும் பாத்திரத்துக்கு பார்ப்பன‌ குடும்பமே இருக்கு.. ஒரு பாட்டு இருக்கு.. கமல் பரத நாட்டியம் ஆடுகிறார் மாமிகள் புடை சூழ. ஆனால் படத்தில் நிஜமாக வரும முஸ்லீம் பாத்திரம் அம்புட்டு அநாதை. படத்துல வரும் கமல்பாய் பேரு 'தௌபீக்’கா அல்லது நாசரா என்று என்னால் இதுவரை கண்டே பிடிக்க முடியவில்லை. கவுண்டமணி சொல்ற மாதிரி நல்ல டகால்ட்டி. 

நன்றி- http://www.keetru.com/index.php

2/12/13

அமெரிக்காவை காப்பாற்ற துடிக்கும் கமல்


இது நண்பர் கலையரசனின் பதிவு..அங்கே அவரின் பதிவுக்கு சொன்றும் படிக்கலாம். (இந்த லிங்கின் மூலம்) விஸ்வரூபம் கமல் போதிக்கும்ஒரு பக்கம் சார்ந்த அரசியலையும் அவரது நேர்மையின்மையையும் மிக அருமையாக அலசி விமர்சனம் செய்திருப்பதால் அதை இங்கேயும் பகிர்கிறேன்.  இதில்தான் இந்திய முஸ்லிம்களை பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லையே பிறகெதற்கு இங்குள்ள முஸ்லிம்கள் துள்ளுகிறார்கள் என்போர் நிச்சயம் படிக்கவேண்டிய பதிவு.!!

கமல்ஹாசன் ஒரு தலைசிறந்த நடிகன் மட்டுமல்ல. ஒரு காலத்தில் உலக சினிமாக்களின் முதல் தர  இரசிகனாக இருந்தவர். சிறந்த கலைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற அவா கொண்டிருந்தார். அவரது குணா போன்ற படங்களை சாதாரண இரசிகர்கள் புரிந்து கொள்ள கஷ்டப் பட்டதையும் பார்த்திருக்கிறேன். ஆனால், சொந்தமாக படம் எடுக்க கிளம்பிய பின்னர், தொடர்ந்தும் வணிகப் படங்களாகவே எடுத்துத் தள்ளுகின்றார். தமிழகத்தின் முன்னணி நடிகனாக இருந்த போதும், தான் சேர்த்து வைத்திருந்த கோடிக்கணக்கான பணத்தை வித்தியாசமான கலைப் படங்களில் முதலீடு செய்யாமல், இலாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட வியாபாரி போன்றே செயற்படுகின்றார்.

ஆகவே, அத்தகைய வியாபார நோக்கம் கொண்ட கலைஞனிடம் சமூகப் பொறுப்பு வாய்ந்த திரைப் படங்களை எதிர்பார்க்க  முடியுமா என்பது சந்தேகமே. அமெரிக்க அரசுடன் மோதும் நிலையிலும், தான் சரியென்று நம்பிய கொள்கையை விட்டுக் கொடாத Oliver Stone போன்ற தயாரிப்பாளர்கள் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கின்றனர். கமல்ஹாசன் கலைக்கு சேவை செய்யா விட்டாலும் பரவாயில்லை, இந்திய அரசுக்கு சேவை செய்யாமல் இருந்தாலே போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.  இந்திய அரசின் வெளிவிவகார கொள்கைக்கு அமையவே, தற்பொழுது விஸ்வரூபம் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். 

ஆப்கானிஸ்தானில், தாலிபான் ஆட்சிக் காலத்தில் நடந்த கொடுமைகளை பேசும் திரைப் படங்கள் பல ஏற்கனவே வந்துள்ளன. Osama, The Kite Runner போன்ற சினிமாப் படங்கள், உலக அளவில் சிறந்த கலைப் படைப்புகளாக பேசப் பட்டன. தாலிபான் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த ஆப்கானிய எழுத்தாளர்கள் தமது அனுபவங்களை நூல்களாக வெளியிட்டிருந்ததும், அவையே பின்னர் படமாக்கப் பட்டதும் அறிந்ததே. எல்லா நாடுகளிலும் குறிப்பிட்ட ஒரு அரசியல் இயக்கத்தை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் இருக்கவே செய்வர். அது யதார்த்தம். ஈழத்தில் புலிகளை ஆதரித்த தமிழர்களும், எதிர்த்த தமிழர்களும் இருந்தனர். ஆப்கானிஸ்தானில், தாலிபானை ஆதரித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள், நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் ஊறிய மக்கள் ஆவர். 

மேற்கத்திய விழுமியங்களுடன் தம்மை அடையாளப்  படுத்திக் கொண்ட புத்திஜீவிகள் மட்டத்தில், தாலிபானுக்கு ஆதரவு இருக்கவில்லை. தாலிபானுக்கும் தம்மை விட அதிகமாகப் படித்தவர்களைக் கண்டால் பிடிக்கவில்லை. தாலிபானின் கற்கால ஆட்சியை சகிக்க முடியாமல் புலம்பெயர்ந்த, ஆப்கான் அறிவுஜீவிகள் எழுதிய நாவல்கள், தாலிபானை காட்டமாக விமர்சித்து வந்தன. அது அவர்களது படைப்புச் சுதந்திரம். கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் கீழ் அவற்றிற்கு மதிப்புக் கொடுக்கப் பட்டது. அந்த நாவல்கள் படமாக்கப் பட்ட போது, அந்தக் கதைகள் உலகம் முழுவதும் பரந்து பட்ட மக்களிடம் போய்ச் சேர்ந்தது. அப்போதெல்லாம், படைப்பின் சுயாதீனம், கலைஞனின் உரிமை, படைப்பு சுதந்திரம், கலைஞனுக்குள்ள சமூகப் பொறுப்பு போன்ற விடயங்களை  அனைவரும் கவனத்தில் எடுத்திருந்தனர். நிச்சயமாக, தாலிபானுக்கும், அதனை ஆதரித்த சலாபி-இஸ்லாமிய கடும்போக்காளர்களுக்கும் அது உவப்பாக இருந்திராது. தாலிபான் எதிர்ப்பாளர்களை, "துரோகிகள்" என்று திட்டித் தீர்ப்பதை தவிர அவர்களுக்கும் வேறு வழி இருக்கவில்லை. 

விஸ்வரூபம் திரைப்படத்தை, ஒரு கருத்துச் சுதந்திர வெளிப்பாடாக கொள்ள முடியாததற்கு, நிறைய காரணங்கள் உள்ளன. முதலில் அது ஒரு கலைப் படைப்பல்ல. வணிக நோக்கில் தயாரிக்கப்பட்ட, பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய, வழக்கமான மசாலா படம். மேலும் அது வெளிப்படையாகவே அமெரிக்க அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கும்  படமாக தன்னை காட்டிக் கொள்கின்றது. சுருக்கமாக அது ஒரு அரசியல் பிரச்சாரப் படம். அமெரிக்கா, சில்வஸ்டர் ஸ்டெலோனை "ரம்போ"வாக நடிக்க வைத்து, வியட்நாமுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் அனுப்பி, தனது வெளியுறவுக் கொள்கைக்கு உலகம் முழுவதும் ஆதரவு திரட்டியது. அதே பாணியில், தற்போது தமிழனான கமலஹாசன், இந்திய அரசு சார்பாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்திருக்கிறார். 

ஒசாமா, தி கைட் ரன்னர் படங்களைப் போன்று, தாலிபான் ஆட்சிக்காலத்தில் நடந்தவற்றைப் பற்றி, விஸ்வரூபம் பேசவில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. விஸ்வரூபம், அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளால் "விடுதலை செய்யப்பட்ட" ஆப்கானிஸ்தானின் நிலைமையை விளக்கிக் கூறுகின்றது. ஒரு நாட்டின் மீதான எந்தவொரு படையெடுப்பும் மனிதப் பேரவலம் இன்றி நிறைவேறவில்லை. இந்து சமுத்திரத்தில் இருந்து ஏவப்பட்ட Tomahawk ஏவுகணைகள், தாலிபானை மட்டும் கொல்லவில்லை. அப்பாவி குடிமக்களும், பெண்களும் குழந்தைகளும் பலியானார்கள். குறைந்தது இருபதாயிரம் பேரை கொன்ற பின்னர் தான், ஆப்கானிஸ்தான் அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆப்கான் போரை எதிர்த்து, ஆயிரக் கணக்கான மக்கள், மேற்கத்திய நாடுகளின் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அப்போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விட்டு, இப்போது தான் எழுந்தவர் போல, மனிதப் பேரவலத்தை திரைப்படம் என்ற போர்வையால் மூடி மறைப்பதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். 

ஒரு நாட்டின் மீது  அல்லது, சுயாட்சி கோரும் சிறுபான்மை இனத்தின் மீது படையெடுக்கும் ஆக்கிரமிப்பு இராணுவம் எத்தகைய நியாயங்களை முன்வைக்கும் என்பது தெரிந்ததே. 2009 ம் ஆண்டு, "புலிப் பயங்கரவாதிகளிடம் இருந்து தமிழ் மக்களை விடுதலை செய்வதற்காக, வன்னி மீது படையெடுத்ததாக..." ஸ்ரீலங்கா இராணுவம் நியாயம் கற்பித்தது. ஆங்கிலத்தில் "déjà vu" என்று சொல்வார்கள். (ஒரு பிரெஞ்சு மொழி சொற்பதம். அதன் அர்த்தம், ஏற்கனவே பார்த்து விட்டோம்.)  2001 ம் ஆண்டு, "தாலிபான் பயங்கரவாதிகளிடம் இருந்து ஆப்கான் மக்களை விடுதலை செய்வதற்காக, அப்கானிஸ்தான் மீது படையெடுத்ததாக..." அமெரிக்க இராணுவம் நியாயம் கற்பித்தது. 

கமல்ஹாசன், இலங்கை இராணுவத் தரப்பு நியாயங்களை மட்டும் காட்டும் திரைப்படம் ஒன்றை எடுத்திருந்தால், அதனை "கலைஞனின் உரிமை, படைப்புச் சுதந்திரம்" என்றெல்லாம் காரணம் கூறி அங்கீகரிக்க நாம் தயாராக இருக்கிறோமா? அதனை தடை செய்ய வேண்டுமென ஆக்ரோஷத்துடன் போராட மாட்டோமா? ஆகவே, விஸ்வரூபம் அமெரிக்க ஆக்கிரமிப்பு இராணுவத்தின் ஒரு பக்க நியாயத்தை மட்டுமே பேசுவதால், இதனை ஒரு அரசியல் பிரச்சாரப் படமாகவே கருத வேண்டியுள்ளது. இரு தசாப்தங்களுக்கு முன்னர், வியட்நாம் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும், ஜேம்ஸ் பாண்ட் படங்களை திரையிட தடை விதித்திருந்தது. அரசியல் காரணங்களுக்காக திரைப்படங்களை தடை செய்வது, வியட்நாம் போன்ற "கம்யூனிச சர்வாதிகார" நாடுகளில் மட்டுமே நடக்கும் விடயமல்ல. மார்க்சியத்தை பரப்பி தொழிலாளர்களை எழுச்சி கொள்ள வைத்து விடும் என்ற காரணத்தை கூறி,  "பொதெம்கின் போர்க் கப்பல்" (The Battleship Potemkin) என்ற சோவியத் திரைப் படம், ஜெர்மனியிலும் (1933), பிரான்சிலும் (1925) தடை செய்யப் பட்டது. 

பல முஸ்லிம் அமைப்புகளைப் பொறுத்த வரையில், இஸ்லாம் என்பது அவர்களது தேசிய அடையாளமாக இருக்கிறது. "யூத (சர்வ)தேசியவாதம்" உருவாகக் காரணமாக இருந்த அடிப்படை கோட்பாட்டை, "இஸ்லாமிய (சர்வ)தேசியவாதம்" கொண்டுள்ளது. தேசியவாத அரசியல் எப்போதும் மொழி சார்ந்திருக்க வேண்டிய கட்டாயமில்லை. "எங்கேயோ இருக்கும் தாலிபானை பற்றி படம் எடுத்தால், எதற்காக இங்கே துள்ளுகிறார்கள்...?" என்று கேட்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை.

2008 ம் ஆண்டு, விஸ்வரூபம் பாணியில் ஒரு சிங்களத் திரைப்படம் வெளியானது. சிங்கள இனவெறி இராணுவத்திற்கு நன்றி தெரிவித்து தயாரிக்கப்பட்ட, "பிரபாகரன்" என்ற அந்த திரைப்படம், புலிகளை கெட்டவர்களாகவும், ஸ்ரீலங்கா இராணுவவீரர்களை நல்லவர்களாகவும் சித்தரித்திருந்தது. விஸ்வரூபம் திரைப்படத்தில், "அமெரிக்க படைகள் பெண்களையும், குழந்தைகளையும் ஒன்றும் செய்ய மாட்டார்கள்" என்று காட்டுகின்றனர். பிரபாகரன் படத்தில், "ஸ்ரீலங்கா படையினர், பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பவர்கள்" போன்று சித்தரிக்கப் படுகின்றனர்.  இவ்விரண்டு திரைப்படங்களுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? 

சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில், பிரபாகரன் படத்தின் டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருந்த பொழுது, தமிழ் தேசியக் கட்சிகள் அதை தடுத்து ஆர்ப்பாட்டம் செய்தன. பிரபாகரன் படத்தை தமிழில் டப் செய்து தமிழகத் திரையரங்குகளில் ஓட விட வேண்டுமென, தயாரிப்பாளர் துஷாரா பீரிஸ் நினைத்தது நடக்கவில்லை. சென்னையில் வைத்து இயக்குனருக்கு தர்ம அடி விழுந்தது. பிரபாகரன் என்ற சிங்களத் திரைப்படம்,  புலிகள் அல்லது தமிழர்களை தவறாக சித்தரித்து, அவர்கள் மீதான வெறுப்பை சிங்களவர் மனதில் விதைப்பதை குறியாக கொண்டிருந்தது. அதே போன்று, விஸ்வரூபம் என்ற தமிழ்த் திரைப்படம், தாலிபான் மீதும், முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை விதைத்துள்ளது. 

பிரபாகரன் திரைப்படத்திற்கு எதிரான தடையையும், போராட்டத்தையும் உங்களால் புரிந்து கொள்ள முடியுமென்றால், விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிரான முஸ்லிம் அமைப்புகளின் போராட்டத்தையும் புரிந்து கொள்ளலாம். முஸ்லிம் அமைப்புகள் இதனை தமது மத நிந்தனை சம்பந்தமான பிரச்சினையாக காட்டும் பொழுது, மறு தரப்பினர் அதையே முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்த ஏதுவாகின்றது.  அமெரிக்காவின் மேலாதிக்க போர், ஆப்கான் இனப்படுகொலை, அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான தாலிபானின் போராட்டம், இவற்றை விஸ்வரூபம் மூடி மறைக்கும் அயோக்கியத்தனம் போன்றன பேசப் பட வேண்டும். அதற்குப் பதிலாக, இதனை மதம் சம்பந்தமான  பிரச்சினையாக திசை திருப்பியதில், முஸ்லிம் அமைப்புகளுக்கும் பங்குண்டு. அவர்கள் இந்திய/தமிழக அரசுக்களின் மகுடி வாசிப்பிற்கு ஏற்ப ஆடுவதாக எழும் குற்றச் சாட்டுகளையும் மறுப்பதற்கில்லை 

இந்திய மக்களில் பெரும்பகுதியை சினிமா எனும் மாயை கட்டிப் போடுகின்றது. ஆகவே, மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தும் ஊடகமான சினிமாவை குறைத்து மதிப்பிட முடியாது. ஒரு காலத்தில் குடும்பக் கதை சார்ந்த படங்களுக்கு பேர் போன இந்திய சினிமா தொழிற்துறை, தற்பொழுது நிறைய அரசியல் திரைப்படங்களையும் எடுக்கின்றது. வரவேற்கத் தக்கது தான். ஆனால், அந்தப் படங்கள் அமெரிக்க பாணியில், அரசின் பிரச்சாரப் படங்கள் போல எடுக்கப் படுகின்றன. மணிரத்தினம் ரோஜா படம் எடுத்த பின்னர், காஷ்மீர் போராளிகள் "கெட்டவர்கள்" என்று சாமானியனின் பொதுப் புத்தியில் உறைந்து போனது. அதே மாதிரியான, அல்லது அதிலும் பல மடங்கு தாக்கத்தை விஸ்வரூபம் ஏற்படுத்தலாம். விஸ்வரூபம் என்ற திரைப்படத்தை சுற்றி நடக்கும் கருத்துப் பரிமாற்றத்தில் இருந்தே, சமூகம் எந்தளவு பிளவு பட்டுள்ளது என்பது தெரிகின்றது. 

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழி போல, சமூகம் பிளவுபட்டால் பிரித்தாளுவது இலகுவாக இருக்கும். அந்த விடயத்தில் திரைப்படத்தை தயாரித்த கமல்ஹாசனும், தமிழக அரசும் திறமையாக காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். திரைப்படத்தை எதிர்த்து போராடும் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களும் அதற்கு ஒத்துழைக்கலாம். அவர்களுக்கு பின்னணியில் சி.ஐ.ஏ. ஆலோசனை வழங்குகின்றதா என்று கேட்கத் தோன்றுகின்றது.   ஐரோப்பாவில் அது நடந்ததை கண்கூடாகக் கண்டிருக்கிறேன். 

நெதர்லாந்தில் முஸ்லிம் விரோத படம் தயாரித்த தெயொ வன் கோக், கெர்ட் வில்டர்ஸ் ஆகியோரின் நடவடிக்கைகள், நெதர்லாந்து சமூகத்தில் விரிசலை உண்டாக்கின. அதற்கு எதிர்வினையாக வன்முறைக்கு தூண்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் பின்னணியில் புலனாய்வுத்துறையின் கரங்கள் இருந்தமை பின்னர் தெரிய வந்தது. தெயொ வன் கொக்கின் Submission, கெர்ட் வில்டர்சின் Fitna ஆகிய குறும்படங்கள், முஸ்லிம் வெறுப்பை கக்கும் கருத்துக்களை பரப்பி வந்தன. அவை நெதர்லாந்திலும், உலகிலும் ஏற்படுத்திய அதிர்வலைகள் காரணமாக தடை செய்யப் பட்டன. அதே மாதிரியான அதிர்வலைகளை, விஸ்வரூபம் தமிழக சூழலில் ஏற்படுத்த விரும்புகின்றது.  ஊடகங்களால் பரப்பப் பட்ட இஸ்லாம் குறித்த அச்சவுணர்வு, அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பாரிய சமூக மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தது. தற்போது தமிழகமும் அந்த அடிச்சுவட்டை பின்பற்றுகின்றது.  

முன்னர் ஒரு தடவை, காற்றுக்கென்ன வேலி என்ற திரைப் படத்திற்கு,  திரையிடுவதற்கு முன்னரே தணிக்கை சபை அனுமதி வழங்கவில்லை. அதனால் அந்தப் படம் இந்தளவு பிரச்சினையை கிளப்பவில்லை. மேலும் அண்மையில் வெளியான விஸ்வரூபம், துப்பாக்கி போன்று, வேற்றின மக்களை புண்படுத்தும் காட்சிகள் எதுவும் அந்தப் படத்தில் கிடையாது. விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தணிக்கை சபை சான்றிதழ் கொடுத்த பின்னர், திரையரங்குகளில் வெளியிட நாள் குறிக்கப் பட்ட பின்னர் தான் தமிழக அரசு தடை செய்துள்ளது. இந்த நடவடிக்கையானது, "கலைஞனின் உரிமைக்காக" அவனது "இரசிகர்களும்" போராடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளது. அதாவது,  "இந்த தடைக்கு காரணம், இஸ்லாமிய மதவாத அமைப்புகள் என்று பழியை அவர்கள் மேல் போட்டதன் மூலம், இந்து மதவாதிகளை எதிர் அணியில் திரட்டவும் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது.  

ஒரு சராசரி தமிழ் மகன் அதிகமாக ஆர்வம் காட்டாத, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பற்றிய கதையை, எதற்காக கமல் தேர்ந்தெடுத்தார்? பெரும்பாலான மக்களுக்கு தெரிந்த காரணம், இது பொதுவாக முஸ்லிம்களை பற்றியது. புலிகளின் மனித உரிமை மீறல்களை மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்டி, தமிழர்கள் என்றாலே இரக்கமில்லாத கொடியவர்கள் என்று சித்தரித்த பிரபாகரன் படம், புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த காலத்தில் வெளிவந்தது. அது சராசரி சிங்கள மக்கள் மனதில் எத்தகைய தாக்கத்தை உருவாக்கியது? 2009 ம் ஆண்டு, புலிகளுடன், நாற்பதாயிரம் தமிழ் மக்களும் அழிக்கப் பட்ட போரின் வெற்றியை, சாதாரண சிங்கள மக்களும் இனவெறிக் களிப்புடன் கொண்டாட வைத்தது. அது போன்ற நிலைமையை இந்தியாவில் உருவாக்குவதற்கு, விஸ்வரூபம் குறிப்பிட்டளவு பங்களிப்பை வழங்கலாம். விஸ்வரூபம் தயாரிப்பின் பின்னணியில், அமெரிக்க, இந்திய புலனாய்வுத் துறையினரின் பங்கு எந்தளவு உண்மையாக இருக்க முடியும்? இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை, விஸ்வரூபம் படத்தின் ஒவ்வொரு காட்சியும் பிரதிபலிக்கின்றது. 

2014 ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் விலகுவதற்கு நாள் குறிக்கப் பட்டு விட்டது. அமெரிக்கப் படைகள் போனால், அதைத் தொடர்ந்து நேட்டோ படைகளும் விலக்கிக் கொள்ளப் படலாம். அப்போது ஏற்படும் வெற்றிடத்தில், பாகிஸ்தான் நுளைவதற்கு முன்னர், இந்தியா பொறுப்பேற்கத் துடிக்கின்றது. பனிப்போர் காலத்தில், சோவியத் யூனியன் ஆதரித்த நஜிபுல்லாவின் ஆப்கான் அரசை, இந்தியாவும் ஆதரித்தது. அது வீழ்ந்த பின்னர், முஜாஹிதீன் இயக்கங்களும், அவர்களை விரட்டி விட்டு தாலிபானும் ஆட்சியை பிடித்தவுடன், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் செல்வாக்கு உயர்ந்தது. அமெரிக்க படையெடுப்பின் பின்னர் உருவான கர்சாயின் பொம்மை அரசு, பாகிஸ்தானை உதறி விட்டு இந்தியாவுடன் சேர்ந்து கொண்டது. தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபானின் கை ஓங்கி வருகின்றது. அமெரிக்க படைகள் வெளியேற்றப் பட்டால், கர்சாய் அரசை கவிழ்த்து விட்டு, மீண்டும் தாலிபான் ஆட்சி ஏற்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன. அந்த தருணத்தில், இந்தியா விரைந்து செயற்படத் துடிக்கிறது. 

ஒரு காலத்தில், ஈழத்தில் இந்திய அமைதிப் படைகள் இறக்கப் பட்டதைப் போல, ஆப்கானிஸ்தானுக்கு இந்திய அமைதிப் படைகள் சென்றாலும் ஆச்சரியப் பட எதுவுமில்லை. ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் தலையீடு அதிகரிப்பதை, தாலிபானும் உணர்ந்துள்ளது.  2009 ம் ஆண்டு, காபுலில் உள்ள இந்திய தூதரகம் தாலிபானின் தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளானது. ஆப்கானிஸ்தானில் இந்திய இலக்குகள் தாக்கப்பட்டது அதுவே முதல் தடவை அல்ல. அதுவே கடைசித் தடவையாகவும் இருக்கப் போவதில்லை. 2009 ம் ஆண்டு, தனது காலின் கீழ் மிதிபட்ட புலிகளை துடைத்தெறிந்த சந்தோஷத்தில் இந்தியா இருந்த நேரத்தில், காபுல் தூதரக குண்டுவெடிப்பு இடியென இறங்கியது. இந்தியாவின் தலையில் உள்ள ஆப்கானிஸ்தானில், தாலிபான்களின் மீள்வருகை, எதிர்காலத்தில் பெரும் தலையிடியைக் கொடுக்கும் என்பது நிச்சயம். ஆப்கானிஸ்தானில் இந்தியா நேரடியாக தலையிடுவதற்கு முன்னர், மக்களை தயார் படுத்த வேண்டியது அவசியம். அந்தக் கடமையை கமலஹாசனின் விஸ்வரூபம் செவ்வனே செய்யும்.

நன்றி - கலையரசன்.
Related Posts Plugin for WordPress, Blogger...