2/15/12

"தெரு நாயை தீவிரவாதி தாக்கினான்"

ஒரு தெருவில் நாயொன்று படு வேகமாக ஒரு பெண்ணை துரத்திக்கொண்டு வந்தது. அந்தப்பெண்னோ மிகப்பயந்தவளாக நாய் கடித்துவிடாமல் இருக்க தன்னை பாதுகாத்துகொள்ளும் நோக்கோடு மிக வேகமாக ஓடி வந்துகொண்டிருந்தால். நாய் அவளை நெருங்கிகடித்து விடும் நிலையில் அவளை காப்பாற்ற யாரும் முன்வராத நிலையில் அந்த நொடி ஒரு மனிதன் சடாரென பாய்ந்து நாயை வேகமாக ஒரு உதை விட்டு அந்த பெண்ணை காப்பாற்றினான்.பிறகு காப்பாற்றியவருக்கு நன்றியோடு விடைபெற்று அவ்விடத்தை நிம்மதியாக நடந்தாள்


அதை ஒரு பத்திரிக்கை நிருபர் நேரடியாக பார்த்து தனது கேமராவில் பதிவு செய்து கொண்டார். பின் அந்த மனிதனின் செயலை பாராட்டி "கண்டிப்பாக இதை நாளை பத்திரிக்கையில் பிரசுரிக்கிறேன் தலைப்பு செய்தியே இது தான்,'லோக்கல் ஹீரோ வெறி நாயிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றினார்.'"

அந்த மனிதன்,"நன்றி, ஆனால் நான் உள்ளூர் இல்லை" என்றான்.உடனே நிருபர்,"ஓ அப்படியா, சரி இந்த செய்தி எப்படி? 'அமெரிக்கர் வெறி நாயிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றினார்'"

திரும்பவும் அந்த மனிதன்,"இல்லை நான் அமெரிக்கனில்லை, பாகிஸ்தானி" என்றார்.

மறு நாள் வந்த செய்தியின் தலைப்பு இப்படியிருந்தது..

"தெரு நாயை தீவிரவாதி தாக்கினான்"

1 comment:

அனானிகளானாலும் வரவேற்கப்படுகிறார்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...