சற்றுமுன் நீ நடந்து போன
தடயம் எதுவுமின்றி
அமைதியாய் கிடக்கிறது வீதி.
எனினும்
அதிவேக ரயிலொன்று
கடந்து போன தண்டவாளம் போல
இன்னும் அதிர்கிறது
என் இதயம்.
சூரியன் வந்த பிறகுதான்
நீ வருகிறாய் என்றாலும்
நீ வரும் போதுதான்
விழிக்கிறது இந்த வீதி.
எனது அறையின் தினசரி காலண்டர்கூட
கேலி பேசுகிறது என்னை.
முதல் நாள் உன்னை பாஎத்திருந்தால்
அந்த தேதியை மிக மெதுவாக கிழிக்கிறேனாம்
பார்க்கவில்லை யெனில்
பிய்த்து கசக்கி எறிகிறேனாம்.
நீயோ
சூரிய வெளிச்சம் முகத்தில் படாமலிருக்க
புத்தகத்தால் உன் முகத்தை
மறைத்துக்கொள்கிறாய்
சூரியனோ
உன்னை பார்க்க முடியாத கோபத்தில்
எல்லோரையும் சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது.
உன்னை ஏன்
இப்படி காதலித்துத் தொலைக்கிறேன்
அடிக்கிற அம்மாவின்
கால்களையே கட்டிக்கொண்டு
அழுகிற குழந்தை மாதிரி.
இப்படி காதலித்துத் தொலைக்கிறேன்
அடிக்கிற அம்மாவின்
கால்களையே கட்டிக்கொண்டு
அழுகிற குழந்தை மாதிரி.
தபூசங்கரின் விழியீர்ப்பு விசை கவிதை நூலில் சுட்டது!!
4 Comments
காதலின் வேதம்...
ReplyDeleteதபு சங்கர் காதல் கவிதைகளுக்கு என்று படைக்கப்பட்டவர்..
பகிர்வுக்கு நன்றி
Tabu's poem always superb.
ReplyDeletenagu
www.tngovernmentjobs.in
www.nagaindian.blogspot.com
அருமை ... பகிர்வுக்கு நன்றி !
ReplyDeleteதபூ சங்கர் Alwayz rockzz..
ReplyDeleteDrop Anything