6/14/12

சே குவேரா என்னும் புரட்சிக்காரன்!!

''உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம்/அநீதி தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் சூடேறினால் நீ என் தோழன்” - சே குவேராஇடதுசாரிக் கொள்கைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்த சே, சிறு வயதில் இருந்தே அநீதி கண்டு ஆத்திரம்கொள்பவராக இருந்தார். பணக்காரக் குடும்பத்தில் பிறந்து, ஏழைகளின் நண்பராக வளர்ந்தார்.

இளம் வயதில் தென் அமெரிக்கா முழுவதும் மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் பயணம் சே'வின் வாழ்க்கையைத் திசை மாற்றியது. முதலாளித்துவம் மக்களை எவ்வளவு கொடூரமாகப் பிழிந்தெடுக்கிறது என்பதைக் கண்கூடாகப் பார்த்தார். இனி புரட்சி மட்டும்தான் ஒரே வழி என முடிவெடுத்தார். ஃபிடல் காஸ்ட்ரோவுடனான அறிமுகம் இதைச் சாத்தியப்படுத்தியது.

1928 ஜூன்அர்ஜென்டினாவில் பிறந்த சே, அடிப்படையில் ஒருசோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி.. கியூபாவின் விடுதலைக்காகப் போராடக் களம் இறங்கி. அமெரிக்காவை அலற வைத்தவர்.

கியூபா புரட்சி வெற்றி பெற்ற தும் கொஞ்ச காலம் காஸ்ட்ரோ அமைச்ச ரவையில் பங்கேற்றவர், மந்திரி பதவியைத் துறந்து காங்கோவின் விடுதலைக்குப் போராட ஆப்பிரிக்காவுக்குக் கிளம்பினார். அங்கிருந்து பொலிவியா மக்களை விடுதலை செய்ய அங்கு போனார்.

சே வை விடாமல் துரத்திய அமெரிக்காவின் சி.ஐ.ஏ. 50 கெரில்லா வீரர்களுடன் பொலிவியக் காட்டுக்குள் போராடிக் கொண்டு இருந்த சே வைச் 1967 ஒக்டோபர் 9 அன்று ஏகாதிபத்திய அமெரிக்க அரசின் ஆனையோடு சுட்டுக் கொன்றது.

எந்த அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் போராடினாரோ, அதே அமெரிக்காவில் இப்போது அதிகம் விற்பனையாவது சே குவேராவின் உருவம் பதித்த டி-ஷர்ட்கள்தான்.

நேற்று இந்த புரட்சிக்காரனின் பிறந்த தினமாகும்! அவரின் போராட்டம் பற்றி ஒரு பதிவில் சொல்லிவிடுவது கடினம்.. இது வெறும் நினைவேந்தல்தான்!!

இன்றையநிலையில், ஆனவம் பிடித்து அநீதியாலும், அராஜகத்தாலும், அடக்குமுறைகளாலும் அப்பாவி மக்களை கொன்று குவித்து சர்வாதிகார ஆட்சி நடத்தும் அமெரிக்க ராட்சசனை அழிக்க இன்னும் பல சே குவேராக்கள் நம் சமூகத்தில் பிறக்க வேண்டும்!!!

4 comments:

  1. சே குவாராவை நினைவு கூரும் அருமையான பதிவு

    ReplyDelete
  2. மிக அருமையான பதிவு

    ReplyDelete

அனானிகளானாலும் வரவேற்கப்படுகிறார்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...