1/6/13

காலமெல்லாம் காமெடி வாழ்க!


நான் டாக்டருக்குப் படிக்க ரொம்ப சிரமப்பட்டு இருக்கேன்!
அதுக்கு என்ன டாக்டர்?
நிறைய சந்தேகங்களை கேட்டு என் பொறுமையை
சோதிக்காதீங்க..!

தமிழ்லதான் கையெழுத்து போடணும்னு சொன்னதும் தலைவர் குழம்பி போயிட்டாரு!
  எதுக்கு?
கைரேகையை எப்படி தமிழ்ல வைக்கிறதுன்னுதான்!

உங்க படத்தில் டைரக்டர் 'டச்'னு எதைச்
சொல்றீங்க?
ஷூட்டிங் முடிஞ்சப்ப ஹீரோயின் மூணூ மாசம்
கர்ப்பமா இருந்ததைத்தான்!

கணவன் : எப்படி நீ அழகாவும் இருக்க, முட்டாளாவும் இருக்க?
மனைவி : நான் அழகாயிருக்கறதுனால உங்களுக்கு என்ன பிடிச்சுருக்கு, நான் முட்டாளாயிருக்கறதுனால எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு.

துவரம் பருப்பைப் பார்த்து மத்த பருப்பெல்லாம்
என்ன சொல்லுது?
உண்மையிலேயே நீ பெரிய பருப்புத்தான்னு!

கணவனுக்கும் மனைவிக்குமிடையே சிறு மன வேறுபாடு. அடுத்த நாள் அதிகாலை 6 மணிக்கு ரயில் நிலையத்துக்குச் செல்ல வேண்டிருந்தது. ஆனால் முதலில் பேச விரும்பாத கணவன், காலை 5 மணிக்கு எழுப்பவும் என்று ஒரு காகிதத்தில் எழுதி மனைவி அருகில் வைத்தான். மறுநாள் 9 மணிக்கு, கணவன் மிகவும் கோபமாக எழுந்தான். அப்போது மணி 5 ஆகிவிட்டது என்று ஒரு காகிதத்தில் எழுதியிருந்தது.

தலைவர் சின்ன வயசுல நல்ல மாதிரியா
வளரணும்னு ரொம்ப ஆசைப்பாட்டாராம்!
அப்புறம்?
மொள்ளமாரி ஆயிட்டாரு!

நபர் : என்னுடைய மனைவியை ரொம்ப நேரமாத் தேடிக்கிட்டுயிருக்கேன். என்கூட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்க முடியுமா?
பெண் : அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
நபர் : நான் வேறு பெண்கள்கிட்ட பேசினாலே என் மனைவி எங்கயிருந்தாலும் வந்துடுவா.

கண்ணிருந்தும் குருடாய் இருந்துட்டேன்னு தலைவர்
வருத்தப்படுகிறாரே, ஏன்?
ஆசிரமத்துக்குப் போனப்பல்லாம் சாமியார்தான்
தெரிஞ்சாராம்…நடிகையை அவர் கவனிக்கவில்லையாம்!

போலீஸ் அதிகாரி: இப்படி மொட்டையா வந்து புகார் கொடுத்தா ஏத்துக்க மாட்டோம்...

புகார் கொடுத்தவர்: என்ன ஸார் அநியாயமா இருக்கு... அப்ப என் தலையில முடி வளர்ற வரைக்கும் நான் புகாரே கொடுக்க முடியாதா?!

ராஜா மாதிரி என் கணவரை வச்சிருக்கேன்!
ம்…உன்னைப் பார்த்ததும் புறமுதுகிட்டு அவர்
ஓடி ஒளிஞ்சு. தலைமறைவானதை வச்சே
தெரிஞ்சுக்கிட்டடேன்!

ஆசிரியர்: இடுக்கண் வருங்கால் நகுக...
மாணவன்: நமக்கு வரும்போதா..? இல்லே மத்தவங்களுக்கு வரும்போதா சார்?

மொக்கை : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..
முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!

மன்னா, எதிரி நாட்டின் இளவரசன் நம்மீது
படையெடுத்து வருகிறானாம்…!
அதனாலென்ன…நம் இளவரசனை போர்க்
களத்திற்கு அனுப்புங்கள. . . அவனும் ஓடிப்
பழகட்டும்!

3 comments:

  1. காலை 5 மணி ஜோக் சூப்பர்.

    ரசித்துச் சிரித்தேன்.

    ReplyDelete
  2. சுவையான நகைச்சுவைகள்....
    ரசித்தேன்...

    ReplyDelete

அனானிகளானாலும் வரவேற்கப்படுகிறார்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...