1/3/13

பொழுது போகாதவர்களுக்கு மட்டும்!

டேய்! உங்க அம்மாவைப் போட்டு உங்க அப்பா அடி அடின்னு அடிக்கிறார்டா..!
போடா… தெரியாம சொல்றே…! அது எங்க வீடா இருக்காது!

என்னாங்க…இப்ப புறப்பட்டு போன பம்பாய் செல்லும் விமானத்திலிலிருந்து ஒருவர் பாராசூட்டில் இறங்கிக் கொண்டிருக்கிறாரே! விமானத்தில் ஏதாவது கோளாறா..?
இல்லீங்க…திருவனந்தபுரம் செல்ல வேண்டியவர், அந்த விமானத்தில் தவறுதலா ஏறிவிட்டாராம்…அதான வழியிலே இறக்கி விட்டுட்டாங்க..!

தலைவர் வீட்ல ஆயிரக்கணக்குல செருப்புகள் இருந்ததுக்கு, அதிகாரிகள் கணக்கு கேட்டாங்களாமே… தலைவர் என்ன சொன்னார் ?
வாங்கினா கணக்கு காட்டலாம். மேடைல வந்து விழுந்ததுக்கெல்லாம் எப்படி கணக்கு காட்டறதுன்னாராம்..!

உன் மூணாவது பையனுக்குப் பெண் பார்க்கறீயாமே, மருமகள் எப்படி இருக்கணும் ?
என்னோட கூட்டணி அமைச்சு, என் மூத்த மருமகள்களை ஓரங்கட்டணும்.!

பையன்: உங்க குடும்ப நன்மையை உத்தேசித்து இந்தக் கேள்வி, எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க ?
பெண் : செருப்பாலடிப்பேன், அதைக் கேட்க நீ யாரு ?
பையன்: உங்க தங்கையோட லவ்வர் தான்.!

கண்ணே உனக்காக இமயமலையையும் தாண்டுவேன் ,,,,,,
அதுக்காக ஏன் ஒரு காலை நொண்டறீங்க ?
உங்க வீட்டு கேட்டை தாண்டும் போது தடுக்கி விழுந்துட்டேன்.

அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு
சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான்
கவனிக்கலப்பா!!

"ஏங்க, அதான் நர்ஸ் சொன்னாங்கல்ல, இது ஒரு
சின்ன ஆபரேஷன் தான், பயப்பட வேண்டாம்னு,
அப்புறம் ஏன் இப்படி நடுங்கறீங்க."
"அடி அசடு, நர்ஸ் சொன்னது நம்மகிட்ட இல்லடி,
டாக்டர்கிட்ட!"

எதிர்த்த வீட்டு ஆன்டிக்கு முத்தம் கொடுத்தியே…
என்ன சொன்னாங்க?
அப்படியே உங்கப்பன் புத்தின்னு சொன்னாங்க மம்மி..!


கீழே இருக்கிறது கொஞ்ச்ம ஏடாகூடமான ஜோக்ஸ்.. யோக்கியமானவங்க எல்லாம் ஓடிப்போயிருங்க. படிச்சிட்டு திட்டக்கூடாது!


ஆள் அரவம் அற்ற பாலைவனம். 

பல நாள் காஞ்சி கிடந்த அந்த ராணுவ வீரனுக்கு சுயேச்சையா நின்னு... நின்னு... போரடித்துவிட்டது. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் யாரையும் காணாத அவனுக்கு ஓட்டகம்தான் கண்ணில்  தென்பட்டது.

அதை பிடித்து இழுத்து வந்த அவனுக்கு  ஒட்டகத்தின் உயரம் பெரும்பாடாய் இருந்தது. 

அதனால்,  ஒட்டகத்தின் பின் பக்கம் மணலை குமித்து வைத்து,  ஏறி நிற்கும் போது  ஒட்டகம் நகர ஆரம்பித்தது. 

மீண்டும் மீண்டும் அதே மாதிரி முயற்சி செய்யும் போது, ஒட்டகம்  நகர்ந்துக் கொண்டே இருந்தது. 

அப்போது... 

தூரத்தில் ஒரு பெண் இவனைப் பார்த்து " காப்பாத்துங்க...காப்பாத்துங்க...." என்று   அலறிக் கொண்டு ஓடி வந்தாள்.  மூன்று பேர் அவளை  கற்பழிக்க துரத்திக் கொண்டு வந்தனர்.  

இவன் அந்த மூன்று ரவுடிகளையும் சண்டைபோட்டுஅடித்து விரட்டிவிட்டு,  அவளை அவர்களிடமிருந்து காப்பாற்றினான். 

அந்த பெண், இவனிடம் கண்ணீர் மல்க " என்னை அந்த கயவர்களிடம் இருந்து காப்பாற்றிவிட்டீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என்னை காப்பாத்துனதுக்கு பிரதிஉபகாரமா நீங்க என்னை என்ன வேண்டுமானாலும் செஞ்சிக்கிங்க.   என் உடல் பொருள் எல்லாதையும் தர்ரேன் என்றாள்" 

அதற்கு அந்த ராணுவ வீரன். 

"மேடம், ஒரு சின்ன ஹெல்ப். 
இந்த ஒட்டகத்த கொஞ்சம் ஆடாம பிடிச்சுக்குங்க?!" என்றான் கெஞ்சலாக!. 


ஜிம்மியும் ஜானியும் சொர்க்க வாசல் கதவருகே நின்று கொண்டிருந்தார்கள்.

ஜிம்மி:-  "நீ எப்படி இங்கு வந்தே?"

ஜானி:-  "அளவுக்கதிகமான குளிர் தாக்கி இறந்துட்டேன்.    நீ?"

ஜிம்மி:-  "என் மனைவி எனக்குத் துரோகம் செஞ்சான்னு எனக்கு நிச்சயமாய்த் தெரியும்.  அவளோட கள்ளக்காதலனைப் பிடிக்க, ஒரு நாள் வழக்கத்துக்கு முன்னாடி வீட்டுக்கு வந்தேன்.   அவளைக் கண்டபடி திட்டிட்டு அவனை வீடு பூராத் தேடினேன்.  ஆனால் எங்குத் தேடியும் அவனைக் கண்டுபிடிக்க முடியாததால  ஆத்திரம் அதிகமாகி எனக்கு மாரடைப்பு வந்துட்டுது".

ஜானி:-  "அடடா!  நீ அந்தப் பெரிய பிரீஸருக்குள் தேடியிருந்தேன்னா,  நாம ரெண்டு பேருமே  இன்னிக்கு  உயிரோடு இருந்திருக்கலாம்".

1 comment:

  1. சைவ ஜோக்ஸ் அருமை! அசைவம் தவிர்க்கலாமே!

    ReplyDelete

அனானிகளானாலும் வரவேற்கப்படுகிறார்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...