1/8/13

ஞானோதயம் பெறுவது எப்படி?

"வக்கீல் சார்... வர்ற இருபதாம் தேதி உங்க ராசியைச் சனி பிடிக்குது." 
"ஒரு ஆறு மாசம் வாய்தா வாங்க முடியாதா ஜோசியரே?" 

இப்ப வரும் தர்மா மீட்டர்ல சிலது தப்பு தப்பா ஜுரம் காட்டுதாமே டாக்டர்?" 
"ஆமாம். 'அதர்மா' மீட்டரா இருக்கு!" 

"என்ன சார். பாதி ராத்திரியில் வீடேறி வந்து எழுப்பி எதுக்காக கோணிப் பை இருக்கான்னு கேட்கறீங்க?" 
"எங்க வீட்டுக்கு வந்திருக்கிற திருடன்தான் கேட்கச் சொன்னான். திருடின பொருளை மூட்டை கட்ட வேணுமாம்!

"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்." 
"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?" 

"இருக்கற வீட்டை உயில்ல எழுதி வைக்கப் போறீங்களா! யார் பேருக்கு?" 
"வீட்டு சொந்தக்காரன் பேருக்குத்தான். என் மறைவுக்குப் பிறகு அவனே இதை அனுபவிக்க வேண்டியதுன்னு உயில் எழுதிடப் போறேன்!" 

"ஆபரேஷன் ஆன பிறகுதான் மயக்கம் தருவீங்களா! ஏன் நர்சம்மா இப்பட சொல்றீங்கி?"
"மயக்கம் கொடுக்கிற டாக்டர் ரெண்டு மணி நேரம் லேட்டாகத்தான் வருவாராம். அதுக்குள்ளே ஆப்ரேஷன் பண்ற டாக்டர் அவசரப்படறார்.. வேற ஒரு ஆபரேஷனுக்கு போகணுமாம்..!

"பேய்னா அது சாதாரணமா பாழடைஞ்ச பங்களாலதானே இருக்கும்? இந்தப் பேய் மட்டும் ஏன் பாழடைஞ்ச குடிசையில இருக்கு?"
"இது ஏழைப் பேயாம்!"

நீங்க சமயத்துல செஞ்ச உதவிக்கு என் தோலை செருப்பா தைச்சுப் போடணும் சார்....
வெரிகுட்! என் செருப்பு அளவு எட்டு. மறந்து பெரிசா தைச்சுடாதீங்க....

மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.
பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!

குருவைச் சந்தித்து ஞானோதயம் பெறுவது எப்படி என்ற தம் சந்தேகத்தைக் கேட்டார் அறிஞர் ஒருவர்.
"மழை பெய்யும் போது இரு கைகளையும் உயரத் தூக்கியவாறு நில்லுங்கள்; ஞானோதயம் கிடைக்கும்," என்றார் குரு.
"குருஜி! நீங்கள் சொன்னவாறே நேற்று மழையில் நின்றேன்.  தண்ணீர் என் கழுத்து வழியாக கீழே இறங்கி ஓடிய போது, நான் ஒரு முட்டாளைப் போல உணர்ந்தேன்" என்றார் அந்த நபர்.
"முதல் நாள் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஞானோதயம் அது தான்," என்றார் குரு.  

கலைக்கூடமொன்றில் தன் ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருந்தாள் ஓவியர் ஒருவர்.
அந்தக் கலைக்கூடத்தின் உரிமையாளரிடம்,
"இன்று யாராவது என் ஓவியங்களை வாங்குவதில் ஆர்வம் செலுத்தினார்களா?" என்று கேட்டார் ஓவியர். 
. "உங்களிடம் தெரிவிப்பதற்கு நல்ல சேதி ஒன்றும், கெட்ட சேதி ஒன்றும் உள்ளது."
அப்படியா? முதலில் நல்ல சேதியைச் சொல்லுங்கள்" 
"உங்களது ஓவியங்களைப் பார்வையிட்ட ஒருவர், நீங்கள் இறந்த பிறகு இந்த ஓவியங்களுக்கு மதிப்பு கூடுமா எனக் கேட்டார்.  ஆம். கூடும் என்று  நான் சொன்னவுடன், 15 ஓவியங்களையும் அவரே வாங்கி விட்டார்."
"அப்படியா? மிகவும் நல்லது.  சரி. அந்த கெட்ட சேதி?"
"அந்த ஆள் வேறு யாருமில்லை.  உங்கள் குடும்ப டாக்டர் தாம்."


கணவனும் மனைவியும் பல் டாக்டரிடம் சென்றார்கள்.  
"டாக்டர், அவசரமாக நான் போக வேண்டியிருப்பதால், மயக்க மருந்தெல்லாம் கொடுத்துப் பல்லைப் பிடுங்க வேண்டிய அவசியமில்லை. எவ்வளவு சீக்கிரம் பிடுங்குகிறீர்களோ, அவ்வளவுக்கு நல்லது," என்றாள் அந்தப் பெண்.

பெண் சொன்னதைக் கேட்டு மிகவும் வியந்த டாக்டர்,

"நீங்க உண்மையிலேயே மிகவும் தைரியசாலி தான்.  எந்தப் பல்?" என்றார்.

"ஏங்க, உங்கப் பல்லைக் காட்டுங்க," என்றாள் அவள், தன் கணவர் பக்கம் திரும்பி.

3 comments:

 1. அனைத்து நகைச் சுவைத் துணுக்குகளும்
  மிகவும் அருமை.ரசித்து மகிழ்ந்தோம்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ஏழை பேய் ஜோக் அருமை.
  சிரித்து மகிழ்ந்தேன்.

  ReplyDelete

அனானிகளானாலும் வரவேற்கப்படுகிறார்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...