வேட்டை பாடல்கள்- மொத்தமா ருசிக்கலாம்..!

லிங்குசாமியின் இயக்கத்தில், யுவன்சங்கர் ராஜா இசையில், மாதவன், ஆர்யா,சமீரா ரெட்டி,அமலா பால் ஆகியோர் நடித்து வெளிவரயிருக்கும் திரைப்படமே வேட்டையாகும். பொதுவாக லிங்குசாமியின் இயக்கத்தில் வரும் படங்களின் பாடல்கள் சிறப்பாகவே இருக்கும். அது போலவே வேட்டை பாடலும் எதிர்பார்த்தது போலவே, யுவனின் இசையில் எல்லா பாடல்களும் சிறப்பாகவே வந்திருக்கிறது.

# ஏய் பப்ப பப்ப பப்பா பத்திக்கிச்சு பம்பரம்
மென்மையான தனிப்பாடல்களை பாடுவதில் மட்டும் பெயர் போன யுவன்சங்கர் ராஜா. கொஞ்சம் குத்து கலந்த டூயட் பாடலை ரேனுவுடன் பாடியிருக்கிறார். நல்லாத்தான் இருக்கு.

# தம்ம தம்ம தம்மா டும்மா டும்மா டும்மா

ஹரிச்சரன், ஸ்வேதா பாடியுள்ள கொஞ்சம் வேகமான இனிமையான மெலடி பாடல் பாடலில் ஆரம்பத்தில் வரும் ஹம்மிங்கும் இடையில் வரும் இசையும் அருமை. ஹரிச்சரன் குரலில் அதே இனிமை, சுஜாதா விட்டுச்சென்ற தமிழ்திரையிசை இடத்தை ஸ்வேதா அழகாகவே நிரப்புகிறார். மலயாளியை எவ்வளவு திட்டினாலும் மலயாளி இல்லாத தமிழ்சினிமா வருவது இயலாத காரியமாகவே படுகிறதது.

# தம் தம் தம் ஆனந்தம்  தம்..

கார்டத்திக், க்ரிஷ் பாடியுள்ள இப்பாடல் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றாலும் கேட்கலாம். பாடல் ஆரம்ப இசை வேறொரு பாடலை நியாபகபடுத்துகிறது. என்ன பாடலென்று நினைவில் வர மாட்டேங்குது.
தீராத விளையாட்டுப்பிள்ள
தெருவில் வந்தாலே
தேவதங்க தொல்ல..  இதில் வரும் பாடல் வரியொன்று

# தய்ய தக்க தக்கா நீ எங்கிருக்கே மக்கா..

ஹ்ரினி,சைந்தவி பாடியுள்ள ஓர் இனிமையான பாடல்.. அக்கா தங்கை பாடுவது போல் அமைந்துள்ளது. சைந்தவியின் குரலில் ஓர் மயக்கம் இருப்பதை மறுக்க முடியவில்லை. ஹரினியின் குரல் வழமை போல் இனிமைதான்.. மாப்பிள்ள எப்படி இருக்க வேனும்னு பாடுராங்க..
அக்கா கேட்ட மாப்பிள்ள
எங்கிருக்கான் பயபுள்ள.. அடடா பாடல் வரிகள் இது..

# கட்டிப்புடி கட்டிப்புடி நீ எப்போதும் குத்தாத ரோசா செடி..

விஜய் பிரகாஷ், ஸ்வேதா பண்டித் பாடிய இந்தப்பாடல்தான் யுவனின் மாஸ்டர் பீஸ்.. மிக அருமையாக வந்திருக்கிறது. விஜய் பிரகாஷ் எந்த பாடலையும் லாவகமாக பாடக்கூடியவர். நல்ல பாடகர் தெரிவு, அவரின் கம்பீர குரலில் கேட்டுக்கொண்டேயிருக்கலாம் இந்தப்பாடலை. 
கண்னோரமா கண்னோரமா கும்மாளமா
நெஞ்சோரமா நெஞ்சோரம வந்தாளமமா..
அடி ஆவாரம் பூவுக்கு
ஆளில்லா தீவுக்கு
ஆரஞ்சு மழை மேகம் நாந்தானடி...
அடி போகாத ஊருக்கு
பொல்லாத காட்டுக்கு
ரெண்டாளா கைகோர்த்து போவோமடி..
என எல்லா வரிகளுமே அசத்தல்..

இங்கே கேட்கலாம் பாடல்களை..

பதிவு பிடித்திருந்தால் ஒரு போட்டு போடலாமே.. நேரமிருந்தால் ஏதாவது சொல்லலாமே.. உங்க இஷ்டம்.

Post a Comment

2 Comments

  1. ஹிஹி நீங்களும் இன்னிக்கு பாடல்கள் தானா?நானும் தான்!

    ReplyDelete

Drop Anything