சொர்க்கத்திற்கு மூன்று பேர் போனார்கள், கடவுள் அவர்களிடம், "சொர்க்கத்தில் இப்போது இடமில்லை உங்கள் மூவரில் பரிதாபமான சாவு யாருக்கு நேர்ந்ததோ அவரை சொர்க்கத்தில் சேர்த்துக் கொள்கிறேன்" என்றாராம்.
முதல் ஆள் தன் கதையை சொல்ல ஆரம்பித்தார், "எனக்கு நீண்ட நாட்களாகவே என் மனைவி நடத்தை மீது சந்தேகம் இன்று சீக்கிரமாக போய் கண்டுபிடித்து விட வேண்டும் என்று சாயங்காலமே அப்பார்ட்மெண்ட்டிற்கு போனேன் என் அப்பார்ட்மெண்ட் 25 ஆவது மாடியில் இருக்கிறது நான் பார்த்தபோது வீட்டில் மனைவி மட்டுமே இருந்தாள் ஆனால் எனக்கு சந்தேகம் விடவில்லை வீடு முழுக்க தேடினேன் யாருமில்லை பால்கனி போய் தேடினேன் யாருமில்லை ஒரு சந்தேகத்தில் பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்தேன் ஒரு ஆள் என் வீட்டு ஜன்னலில் தொங்கிக்கொண்டிருந்தான் எத்தனையோ அடித்தும் அவன் அங்கிருந்து விழவில்லை சுத்தியல் எடுத்து கைகளில் அடித்தேன் அங்கிருந்து விழுந்து விட்டான் ஆனால் ஒரு புதரில் விழுந்து உயிர் பிழைத்து விட்டான் என் கோபம் தலைக்கேறி குளிர்சாதனப் பெட்டியை அவன் மேல் தள்ளி விட்டேன் அதே நேரம் குற்ற உணர்ச்சி அந்த ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டேன்"
கடவுள்,"பரிதாபம்"
இரண்டாம் ஆள், "என் அறை 26 ஆம் மாடி மாலையில் நான் உடற்பயிற்சி செய்ய பால்கனி போயிருந்தேன் தவறி விழுந்து விட்தேன் ஆனாலும் அங்கிருந்த ஒரு ஜன்னலில் பிடித்தேன் அப்போது இந்தாள் வந்தார் காப்பாற்றுவார் என்று பார்த்தால் அடிக்க ஆரம்பிக்க நான் விழ அப்போதும் உயிர் தப்பி விட்டேன் அதற்காக சந்தோஷப்பட்ட போதே ஒரு ப்ரிட்ஜ் வந்தது அவ்வளவே"
கடவுள்,"அய்யோ பரிதாபம்"
மூன்றாவது ஆள்,"அவசரப்படாதீர்கள், நான்தான் அந்த ப்ரிட்ஜ்க்குள் இருந்தேன்" பரிதாபமான முறையில் இறந்தது நாந்தான் என்றாராம்.
Smile Please
Love,lough To Be Happy
14 Comments
நல்ல நகைச்சுவை ...சிரிப்பாய் வந்தது. வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
நல்ல நகைச்சுவை ...சிரிப்பாய் வந்தது. வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
ஹி...ஹி.. 3வது ஆளு ரொம்ப பரிதாபமாத்தான் உயிரிரந்திருக்காரு...
ReplyDeleteஅடடா மனுசன் இப்படியெல்லாமா வதைபடுகிறான்...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு
ஹா..ஹா...
ReplyDeleteநல்லா இருக்கு சார்!
ReplyDeleteஅருமை நண்பரே.....
ReplyDeleteதயவு செய்து மின்னஞ்சலில் அனுப்ப வேண்டாம்......
haa...haa...haa...
ReplyDeleteசொர்க்கம் என்பது மனதில்தான்உள்ளது
ReplyDeleteவேறேங்கும் இல்லை
உங்கள் எண்ணங்களை பொறுத்தே எந்த நிகழ்வும் சொர்க்கம் அல்லது நரகமாக தோன்றுகிறது
.
நிகழ்காலத்தை நரகமாக ஆகுவதும்சொர்க்கமாக ஆக்கிகொள்வதும் அவரவர் கையில்தான் உள்ளது
இந்த உண்மையை அறிந்துகொண்டவர்கள்/புரிந்துகொண்டவர்கள்
எல்லா நேரங்களிலும்,எல்லா இடத்திலும், எந்த சூழ்நிலையிலேயும் தானும் மகிழ்ச்சியாக இருப்பதோடு மற்றவர்களையும் மகிழ்சியாக வைத்திருப்பார்கள்
அத்தகைய மனிதர்களைதான் இந்த உலகம் விரும்புகிறது
நகைச்சுவை கலந்த பதிவு..வாழ்த்துகள்..
ReplyDeleteTN 10-7
அன்போடு அழைக்கிறேன்..
அழுகை அழ ஆரம்பிக்கிறது
நகைச் சுவையாகசுவையில் இருந்தது. ஆனால் எனக்கு சொர்க்கம் நரகம் என்பதில் எல்லாம் துளிகூட நம்பிக்கை இல்லை. ஆனால் மனிதனில் சந்தேகம் எங்கு பொய் முடிகிறது என்பதுதான் இந் நகைச் சுவையில் கொண்டுவந்த சிறப்பான விடயம் வாழ்த்துகள்
ReplyDeleteநல்ல நகைச்சுவை
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ..,
ஹா ஹா ஹா. காமெடி கதை.
ReplyDeleteஅன்பின் ரிஸி - நகைச்சுவை அருமை - ரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteDrop Anything