12/28/11

காதல் எங்கே பிறந்தது தெரியுமா? ஜோக்ஸ்!

மனைவி : ஏங்க நம்ம பையன் பீடி குடிக்கிறானாமே! கேட்டீங்களா?
கணவன் : நான் கேட்டால் தரமாட்டான். நீ கேட்டு ஒண்ணு வாங்கிக் கொடேன்!!

மனைவி : லீவு எடுத்துட்டு நல்லா தூங்கறீங்களே இந்தப் பழக்கம் தானே நீங்க வேலைப் பார்க்கிற இடத்திலும் வரும்
கணவன் : போடீ கழுதை, இந்தப் பழக்கம் வந்ததே அங்கிருந்து தானே

நீதிபதி : ஏற்கனவே கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சு இரண்டாவது கல்யாணம் பண்ணினே.?
குற்றவாளி : கல்யாணம் பண்ண ஆயிரம் பொய் சொல்லலாமுன்னு சொல்வாங்க நான் ஒரு பொய் தானே சொன்னேன்.

டீச்சர்: என்ன ஒற்றுமை இவர்களுக்குள் ஜீசஸ், காந்தி, புத்தர்??
மாணவர்கள்: இவர்கள் எல்லோரும் பிறந்தது விடுமுறை தினத்தில்

அப்பா: ரேங்க கார்ட் எங்கடா?
மகன் : இந்தாங்கப்பா ..
அப்பா: முட்டாள் நீ ஐந்து பாடத்துல பெய்லாயிட்டியே! இனிமேல் என்ன அப்பான்னு கூப்பிடாதே
மகன்: ஓக்கேடா மாப்ள சீனப்போடாம சைனப்போடு.!

தாஜ்மஹால் பார்வை.
காவலாளி:தயவு செய்து அங்க உக்காராதீங்க, அது ஷாஜகானின் கதிரை.
சுற்றிப்பார்க்க வந்தவர்: கவலைப்படாதீங்க, அவரு வந்ததும் நான் எழுந்துடுவேன்.

பிரேம்ஜி : I am Going to Sleep' ,னா என்னடா மீனிங்க்..???
ராம்ஜீ : நான் தூங்க போறேன்.
பிரேம்ஜி :டேய் மீனிங்க சொல்லிட்டு தூங்கப்போடா,pls pls pls...

காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

2 comments:

 1. ஹா...ஹா...

  //பிரேம்ஜி : I am Going to Sleep' ,னா என்னடா மீனிங்க்..???
  ராம்ஜீ : நான் தூங்க போறேன்.
  பிரேம்ஜி :டேய் மீனிங்க சொல்லிட்டு தூங்கப்போடா,pls pls pls...//

  இது தான் டாப்பு!!

  ReplyDelete
 2. கொஞ்சம் பழைய ஜோக்க்குகள்தான் ,ஆனாலும் நல்லாயிருக்கு...

  ReplyDelete

அனானிகளானாலும் வரவேற்கப்படுகிறார்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...