‘‘உன் கல்யாணத்துக்கு நான் கட்டாயம் வரணும்னு நீ சொல்லணுமாடா..? உனக்கு ஒரு துக்கம்னா, அந்தக் கொண்டாட்டத்துல கலந்துக்காம எனக்கு வேறென்ன வேலை?’’
‘‘அஞ்சாப்பு வரைக்கும் இனி எல்லோரும் பாஸாம்டா..! ம்ம்ம்.. அந்தக் காலத்துலேயே இப்படி இருந்திருந்தா நீ எலிமெண்ட்ரி ஸ்கூலையாவது தாண்டியிருப்பே..!’’
காலையில் உன் வீட்டுக்கு வந்தேன்.. மனதுக்கு ஆறுதலாய் இருந்தது. என் அப்பாவை போலவே உன் அப்பாவும் இவ்வளவு கேவலமாக உன்னை திட்டினாரே!’’
பொண்ணு பார்க்கப் போகணும்னு சொல்லிட்டு வேட்பு மனு தாக்கல் பண்ணிட்டு வரீங்களே?"
"வீடு வீடாய் போய் ஓட்டு கேட்ட மாதிரியும் இருக்கும், பொண்ணு பார்த்த மாதிரியும் இருக்கும்."
புது கணவன்: என் மனைவி சமையலறை பக்கமே போயிருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன்!
நண்பன்: எப்படி சொல்கிறாய்?
புது கணவன்: இன்று காலை அவள் முட்டையை சோடா ஓபனரை வைத்து திறக்க முயன்று கொண்டிருந்தாளே!
"ஏய் நீதானடி என் புருஷனின் சின்ன வீடு?"
"ஐயோ, இல்லக்கா! நான் இல்லே!"
"யாருகிட்டடி காது குத்துறே? நீ போட்டிருக்கிற கொண்டையை என் புருஷனைத் தவிர வேற யாராலும் போட முடியாதுடி!"
திருடன புடிக்க திருடன் மாதிரி வேஷம் போட்டீங்களே என்னாச்சு கண்டுபிடுச்சீங்களா இன்ஸ்பெக்டர்?"
"அவன் போலீஸ் வேஷம் போட்டு தப்பிச்சிட்டு போயிட்டான்..."
ஆசிரியர்: இந்தத் திரவத்திலே ஒரு ரூபாய் நாணயத்தைப் போடப் போகிறேன். இது கரையுமா?
மாணவன்: கரையாது சார்.
ஆசிரியர்: எதனால் அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறாய்?
மாணவன்: கரையுமென்றால் நீங்கள் போடமாட்டீங்களே!
"அந்த நடிகையின் அம்மா பயங்கரமான சிக்கனக்காரி"
"எப்படி?"
"நடிகையோட திருமணத்தையும் வளைகாப்பையும் ஒரே நாளில் நடத்திட்டாளே!"
வாங்க பழகலாம்
என்கிட்ட இரண்டு FULL இருக்கு
ஒண்ண ஆங்க வை...
இன்னொண்ண இங்க வை....
நடுவுல இரண்டு கிளாஸ வை....
நல்லா பழகுங்க..
பிடிச்சா வயித்தோட வைச்சிக்கோங்க..
இல்லேன்னா
வாந்தி எடுத்திடுங்க...
ஒக்கேவா..!
Smile Please
Love,lough To Be Happy
3 Comments
வாங்க பழகுவோம்.
ReplyDeleteஅனைத்து நகைச்சுவையும் அருமை...
ReplyDelete//காலையில் உன் வீட்டுக்கு வந்தேன்.. மனதுக்கு ஆறுதலாய் இருந்தது. என் அப்பாவை போலவே உன் அப்பாவும் இவ்வளவு கேவலமாக உன்னை திட்டினாரே!’’//
இது தான் டாப்பு!
அன்பின் ரிஸி - வி.வி.சி - அனைத்துமே நலல் நகைச்சுவை - மின்னஞ்சல் முகவரி தர இயலுமா ? தொடர்பு கொள்ள நினைக்கிறேன் - இயலுமெனில் அனுப்புக : cheenakay@gmail.com என்ற முகவரிக்கு. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteDrop Anything