பில்லா 2 ..மக்களே உஷார்..!!

இப்பதான் பில்லா 2 படம்பார்த்து முடித்து (UAE) வந்து முதல் வேளையாக இந்த பதிவு..
யாம் பெற்ற துன்பம் இவ்வையகம் பெறக்கூடாதென்ற நல்ல எண்ணத்தில்..

பில்லா முதல் பாகத்தின் அசத்தலுக்காகவும் மங்காத்தாவின் மெகா ஹிட்டையும் தல அஜித்தின் மீதுள்ள நம்பிக்கையில் 25 திர்ஹம் செலவழித்து படம் பார்க்க போனால்.. படம் பார்க்க வருவியா..வருவியா என எட்டி உதைக்கிறார்.. நம்ம தல!

படத்தில் தல அகதியாம்.. ஏன் அகதியானார் எதுக்கு ஆனார் என்பதெல்லாம் இயக்குனருக்கு மட்டும் தெரிந்த ரகசியம்.. அப்புறம் எல்லாரையும் அடிக்கிறார்,உதைக்கிறார்,குத்துகிறார்,வெட்டுகிறார்,துப்பாக்கியால் டுப்பு டுப்பு என சுடுகிறார்..  ஒரு கடத்தல்காரனிடம் சேர்ந்து போதைப்பொருள் கடத்துகிறார்..ஓரே பாட்டில் சர்வதேச கெங்ஸ்டர் டான் ஆகிறார்..ஆயுத கடத்தல் பிசினஸ் பன்னுகிறார்.. மறுபடியும் எல்லாரையும் அடிக்கிறார்,உதைக்கிறார்,குத்துகிறார்,வெட்டுகிறார்,துப்பாக்கியால் டுப்பு டுப்பு என சுடுகிறார்.. கைக்கு சிக்குனவனெல்லாம் போட்டு தள்ளுகிறார்.. கடைசியில் வெளிநாட்டு வில்லனையும் போட்டுதள்ளுகிறார் அப்பப்பா!!

இதுதான் கதை ஆமாங்க இதேதான்.. அவங்க என்ன வெச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றார்ங்க..!! பாவம்! அந்த  இயக்குனரால அவ்வளவுதான் முடிஞ்சிருக்கு.. இதே கதைய ஆயிரம் தடவைக்கு மேலே நாம் பார்த்திருக்கோம் ஆனால் அவங்களுக்கு புது கதை!!

தல எப்பவும் போல ஸ்டைலிஷாகவே இருக்கார்,, ஸ்டைலா நடக்கிறார்,நடிக்கிறார்,, ஆனால் ஒரு படத்தை சிறந்த படம் என சொல்ல அது மட்டும் போதுமா..?  குறைந்தபட்ச சுவாரசியமோ ட்விஸ்டோ வேண்டாமா?

நம்ம மலயாள ஓமனக்குட்டி பார்வதி தலய மாமான்னு சொல்லிட்டு வர்றாங்க இடையில கழுத்த வெட்டி கொண்ணு போட்றாங்க வில்லங்க.. இன்னுமொரு ஆண்ட்டி வர்றாங்க புருனோவாம்! ஜட்டி பிராவோட  இரண்டு மூனிதடவ குளிக்கிறாங்க அப்புறம் கடைசியில அவங்களும் செத்துட்றாங்க.. படத்தில் பங்குபற்றிய மொத்த கலைஞ்சர்களைவிட இதில் அஜித்தின் துப்பாக்கிக்கும் கத்திற்கும் சிக்குப்பட்டு செத்துப்போறவங்கதான் அதிகம்... அவ்வளவு வன்முறை!!


படத்தின் இயக்குனரை பற்றி சொல்லியே ஆகனும்.. படத்தில் வர்ற கெட்டவங் ள்ள நிறைய பேரு முஸ்லிம் பேரோடதான் வர்றாங்க செத்தும்போறாங்க.. மறுபடியும் முஸ்லிம்களை கெட்டவங்களா காட்ட முயற்சித்த இயக்குனர் சக்ரி டோலட்டியை எவ்வளவும் பாராட்டலாம்!!

படத்தில் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி வில்லுப்படத்தின் விஜய்க்கு போட்டியா ஹெலிகப்டர்ல பறந்து பறந்து அடிக்கிறார்.. இதன் மூலம் தளபதிக்கு ஒரு விதத்துலயும் சளைத்தவன் அல்ல தல எனபதை நிறுபிச்சிட்டார்..
அந்த சண்டையும் அதற்கு முன் வரும் காட்சியும் எதற்கு வந்தது என்று நானும் பக்கத்து சீட்டு நண்பனும் தலைய பிச்சிக்கிட்டோம்.. பில்லா முதல் பாகமும் மங்காத்தாவும் இதைவிட நூறுமடங்கு பெட்டர்..

இன்னுமொரு விடயம்,, காலம் மாறிக்கிட்டு இருக்கு அதனால மனிசனும் மாறனும்..  அதுக்கு போதைப்பொருள் கடத்தலாம்,ஆயுதம் கடத்தலாம்,மனிசன கொல்லலாம் அதெல்லாம் தப்பேயில்லங்கிற மாதிரி வாதங்கள் படத்தில் இருக்கு..இதைப்பார்க்கும் இளைஞர் சமூகத்தின் மனதில் இதுமாதிரியான நச்சுக்கருத்துக்கள் விதைக்கப்படலாம்..கவனம்!!! தல வில்லத்தனமான கேரக்டர் பண்ணுகிறேன் என கிளம்பி வில்லனைவிட மோஷமான கேரேக்டரே பண்ணுகிறார்..

படத்தில் கதை,திரைக்கதை.. அப்பிடின்னா.. என்ன என்று இயக்குனர் நம்மை பார்த்து கேட்கிறார்,, யுவனின் இசையும் சொல்லிக்கொள்லும்படி இல்லை.. சில இடங்களில் ஒளிப்பதிவு ஓக்கே..

மக்களே உஷார்..!! பார்த்துதான் தீருவேன்னு சொன்னா உங்க இஷடம்.. ஆனால் தவறியும் உங்க குழந்தைகளை அழைத்துச்செல்லாதீர்கள்.. அத்தனை வன்முறை!!!

மொத்தத்தில் பார்க்கவே தேவையில்லாத சினிமா இது! தல ரசிகர்கல் மன்னிச்சு!!!

Post a Comment

45 Comments

  1. அப்படியா நண்பா ? தோஹா கத்தார் - ரில் கூட்டம், தள்ளுமுள்ளு பிரச்சனை காரணமாக ஷோ - வை ரத்து செய்துவிட்டார்கள்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நீங்க சொல்லுற அளவுக்கு மோசம் இல்லை.. ஏற்கனவே வந்த பில்லால டான் செத்துட்டான்.. அதனால தைரியமா அவன் செய்த கொடூர கொலைகளை காட்டலாம் தப்பில்லை.. (வயதுவந்தோருக்கு மட்டும்). கதையை குறை சொல்ல முடியாது. இது நாயகன் படத்தோட கதைகருதான். ஆனால் இன்னும் கொஞ்சம் விவரமாய் பண்ணனும்னா அது கிட்டதட்ட நாயகனாவே மாறிடும்.. அதனால ஒரு சாதரணமான ஆள் எப்படி பெரியா டானா மாறுரானு சும்மா மேற்போக்காக சொல்லி இருக்காங்க..

      My Review : பில்லா2 - கிரேட் எஸ்கேப் திரைவிமர்சனம்

      http://www.kuwaitsaba.com/2012/07/2.html

      Delete
    3. நாயகன் படத்தோட கதை வேற பாஸ்,, அது காப்பியா இருந்தாலும் மனிரத்னம் மேக்கிங் சூப்பர்.. ஆனா இது?

      Delete
    4. அப்பிடியா.. நல்லவேளை தப்பிச்சிட்டிங்க..

      Delete
  2. ம்ம் என்னமோ சொல்றீங்க போங்க

    ReplyDelete
  3. நண்பரே...
    500 ரூவா செலவு பண்ணி டிக்கெட் புக் பண்ணி இருக்கேன்....என்னங்க இப்படி சொல்லிடேங்க.....ரொம்ப கஷ்டமா இருக்கு பாஸ்...
    சரி விடுங்க அடுத்து படத்துல பார்த்துக்கலாம்..

    ReplyDelete
    Replies
    1. ivan solrahte kettu ninge yen varutha paduringe...poi enjay pannunge boss..

      Delete
    2. ராஜ், புக பண்ணினா என்ன பண்ன போய் பாருங்க,, அப்போ உங்களுக்கு புரியும்..

      Delete
  4. Anonymous12.7.12

    nasamapochu

    ReplyDelete
  5. Anonymous12.7.12

    Vada poche

    ReplyDelete
  6. Anonymous12.7.12

    Padam super a iruku, ivanuku rasikka theriyala

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் பாஸ்.. எப்பிடி ரசிக்கிறதுன்னு சொல்லி குடுங்களே..

      Delete
  7. // படத்தின் இயக்குனரை பற்றி சொல்லியே ஆகனும்.. படத்தில் வர்ற கெட்டவங் ள்ள நிறைய பேரு முஸ்லிம் பேரோடதான் வர்றாங்க செத்தும்போறாங்க.. மறுபடியும் முஸ்லிம்களை கெட்டவங்களா காட்ட முயற்சித்த இயக்குனர் சக்ரி டோலட்டியை எவ்வளவும் பாராட்டலாம்!! //

    உங்களுக்கு ஏன் படம் பிடிக்கலை'ன்னு புரியுது... உங்க கோபம் நியாயமானது தான்... தன் இனத்தை குற்றம் சாட்டும்போது யாருக்குமே கோபம் வரத்தான் செய்யும்...

    அதற்காக படமே மோசம்'ன்னு சொல்வது ஏற்புடையதாக இல்லை... உணர்ச்சிவசப்படாமல் யோசித்தால் உங்களுக்கே புரியும்...

    ReplyDelete
    Replies
    1. அப்பிடியில்ல பிரபா.. அந்தக்காரணதுக்காக மட்டுமில்ல!! படத்தில் மைனஸ் நிறையவே இருக்கு..ரசிப்பதுக்கு ஒன்னுமில்லை,, பில்லா முதல் பாகம் எவ்வளவு விறுவிறுப்பா இருக்கும்..

      தலன்னாலும் தளபதின்னாலும் ஏன் சூப்பர் ஸ்டார் ஆனாலும் படம் சரியில்லண்டா சரியில்லண்ணுதான் சொல்ல முடியும்..

      Delete
  8. Problem for you abt the film that the villain characters are muslim ;so u r creating wrong review against the film

    ReplyDelete
    Replies
    1. அப்பிடியில்ல தவறான புரிதல்.

      Delete
  9. படம் முழுக்க வன்முறை உள்ளது அதற்காக பார்கவே கூடாது என்றால் என்ன...உங்களுக்கு கோவம் அதான் இப்படி சொல்லுரிங்க....

    ReplyDelete
    Replies
    1. chinna pasanka paakaatheenga...athuku thaan A certificate,,,chinna malai thambi ,,,nee pooi kadala mittai vaanki saapidu

      Delete
    2. சரி போய் பாருங்க தம்பி..

      Delete
    3. அண்ணா படம் பார்த்தேன் நீங்க சொன்ன மாதிரியே செம்ம கடுப்பு ஆகிவிட்டது...ஏண்டா வந்தோம் என ஆகி விட்டது...நீங்க rebly தரிங்க சரி யார் அந்த முட்டா பைய shaji அவன் ஏன் தேவை இல்லாமல் rebly தர்றான்........படம் பார்கமலே இருந்து இருக்கலாம் அண்ணா...உங்க பேச்சை கேட்டு இருக்கனும்...

      Delete
  10. Anonymous12.7.12

    Ore paatil Thamizh cinemavil kattatathu enna?? ok padam pathutteennga na .. intereval Block scene sollu ?? :P Ommmaalle :P padammmeepakkam padam ottariya ?? :P Krr thu :|

    ReplyDelete
  11. what r u saying man......still nw ticket demands fr next week....afternoon full result will be known

    ReplyDelete
  12. All the terrorists are Muslims then what is ur problem?

    ReplyDelete
  13. You are not a right person to review this movie.
    You know anything about thala or even cinema?

    The film has gore then the viewers will bear it....

    If u r in taminadu then am sure u are not at all able to watch dis movie atleast for a week

    control emotions and better luck next time

    ReplyDelete
    Replies
    1. தலய பத்தியும் தமிழ் சினிமா பத்தியும் எனக்கும் கொஞ்சம் தெரியும் பாஸ்..

      Delete
  14. Dear Reviewer,

    I believe the story is about a gangster who is wanted by international terrorist. i dont think one should expect a romantic scene in the movie.. its a prequel and it will has to be shown as to how an international terrorist is on the rise. First get to know as to what is the story of the movie and then review.. just cos u expect dance, love/romantic scene it cannot be put inside.


    Neutral lover of Tamil cinema

    ReplyDelete
  15. to all vijay fans ....ivvalavu naal vaankana bannu patthatha,,,,,vera velaye illa unkaluku....gangster moviela fights thaan adhikama irukkum,athukku thaan A certificate,,,,inthamaathiri thappana review kuduthu marupadiyum maanamkettavanunkal aayiteenkaley,,,,,soo bad,,pooti irukalaam,,poraama irukka koodathu

    ReplyDelete
  16. சரியான விமர்சனம் ..தயவு செய்து தியேட்டர் பக்கம் கூட போய்டாதீங்க ..மொக்க படம்

    ReplyDelete
  17. Anonymous12.7.12

    athan intha pacha paya review laam keta ipdi thaan , fans paam sema thala ovoru seen-um thool , "ivan yartayo kaasu vaangirukaan "

    this the reviw

    Totally The Movie is a big blast !

    plus points
    1. asusual thala
    2. chakri toleti direction & Screen play
    3. Yuvan Music
    4. R.D.Rajasekar epic camera'la pinni pedaleduthu irukar
    5. stunts
    6. dialogs
    7. Editng [rocket speed]

    Minus points
    1. some adult stuff [but over ah illa konjama than for few mins]
    2. some songs r nt in the right time

    ReplyDelete
    Replies
    1. Anonymous13.7.12

      your overview sounds good.. nantri paarkka book pannitten.. :)

      Delete
    2. தல ஸ்டைல் எப்பவும் அசத்தல்தான்.. ஆனா படத்துக்கு அது மட்டும் போதுமா.. கதை,திரைக்கதை அப்பிடி அயிட்டம் எல்லாம் வேணாமா..

      Delete
  18. Anonymous13.7.12

    avanavan kodikanakka selavu seithu padam eduthhaa........
    ivan pesara paicha paaru

    ReplyDelete
  19. ivan oru muttal pole...hollywood level padam eduthurukange... athe rasikke teriyame...kundu sattiyil kutirai otturiye??...

    ReplyDelete
  20. பாஸ் டான்னாலே அடிக்கணும் உதைக்கணும் குத்தனும்..அது இல்லாம குல்பி ஐஸ்சா சாப்புடுவாய்ங்க..
    shwara.blogspot.com

    ReplyDelete
  21. gangster movie na ippadi thaan irrukum, movie is good i enjoyed

    ReplyDelete
  22. ஏறக்குறைய எல்லா தமிழ் ஆக்சன் மூவிகளும் இப்படித்தான் இருக்கும்! என்ன செய்வது தமிழனுக்கு பொழுது போக வேண்டுமே!

    ReplyDelete
  23. Anonymous13.7.12

    nee ellam rasanaye illatha jadam poya poi welaya paru lusu payale

    ReplyDelete
  24. Anonymous13.7.12

    billa is best film in the world

    ReplyDelete
  25. Anonymous13.7.12

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  26. Anonymous13.7.12

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  27. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  28. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Drop Anything