7/6/12

நான் களவுத்துறை அவன் உளவுத்துறை!'

கபாலி உன் பையனை துப்பறியும் இலாகாவுல பெரிய
ஆபீசரா ஆக்கிட்டீயாமே?"
"ஆமாங்க ஏட்டையா… நான் களவுத்துறை அவன் உளவுத்துறை!'

பாகவதர் பாடிட்டிருக் கிறப்போ திடீர்னு பவர் கட்டாயிடுச்சு..
உடனே ஆடியன்ஸுங்க கத்த ஆரம்பிச் சிட்டாங்க!"
"அப்படியா!?"
"ஆமாம்! சந்தோஷத்துல!"

டாக்டர்: என்னங்க…எக்ஸ்ரேயில் உங்க வயிற்றில நிறைய சின்னச் சின்ன கரண்டியா இருக்கு?
வந்தவர்: நீங்க தானே டாக்டர் தினம் ரெண்டு ஸ்பூன் சாப்பிடச் சொன்னீங்க

சர்வர்: சார்…என்ன சாப்பிடுறீங்க?
சாப்பிட வந்தவர்: நாலு கிலோ அரிசியும், ஒரு கிலோ உளுந்தும் ஆட்டிக் கொடுத்தால் என்ன டிபன் கொடுப்பியோ அதைக் கொடுப்பா…

டைப்பிஸ்ட்: ஏன் சார்…இரண்டு நாளா உங்க மனைவிதான் சமைக்கிறார்களா..?
மானேஜர்: உனக்கு எப்படிம்மா தெரியும்..?
டைப்பிஸ்ட்: இரண்டு நாளா சாப்பாட்டை கீழே கொட்டி விடுகிறீர்களே…

ஒருவர்: பாதிப்பேர் பந்தியில இருந்து பாதியிலேயே எழுந்து போயிட்டாங்களே..?
மற்றவர்: ஐம்பது ரூபாய் மொய் எழுதினவர்களுக்கு பாயசம் இல்லேன்னு சொல்லிட்டாங்களாம்…

ஒருவன்: உங்கப்பாவிற்கு மணி அடிச்சா சாப்பாடுன்னு சொல்றியே…ஸ்கூல் வாத்தியாரா இருக்காரா..?
மற்றவன்: இல்லடா…வேலூர் ஜெயிலில் இருக்கிறார்..!

பொண்ணுக்கு மாப்பிள்ளையை பிடிக்கலை…கிளம்புங்க..!
பஜ்ஜி பிடிச்சிருக்கு..!
சாபிட்டுட்டுக் கிளம்பறோம்..!

உங்க மகள் நளீனாஸ்ரீக்கு கல்யாணம்னு கிசுகிசு வந்திருக்குதே மேடம்..!
எனக்கே இன்னும் கல்யாணம் ஆகலை….அதுக்குள்ளே அவளுக்கு என்ன அவசரம்..!

எப்படியாவது என்னைக் காப்பாத்திடுங்க டாக்டர்..!
எல்லோரும் இதையே சொன்னா நான் யாருக்குத்தான் ஆபரேஷன் பண்ணறது..!

எல்லாம் படித்ததில் பிடித்தது..

4 comments:

 1. நல்ல நகைச்சுவை பதிவுகள்.......:) செம செம...

  ReplyDelete
 2. அனைத்து நகைச் சுவைத் துணுக்குகளும்
  புதியதாகவும் மனம் விட்டு ரசித்துச்
  சிரிக்கும்படியாகவும் இருந்தது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நல்ல நகைச்சுவை பகிர்வு!

  ReplyDelete

அனானிகளானாலும் வரவேற்கப்படுகிறார்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...