7/14/12

கழுதைப்படை..!!

பரீட்சை பேப்பர்லே சரஸ்வதி துணைன்னு எழுதாம,
லட்சுமி துணை-ன்னு எழுதியிருக்கியே?
எங்க டீச்சர் பேரு லட்சுமியாச்சே

எதுக்கு எங்கைளை உங்க வீட்டு மாடிக்கு கூப்பிடுறீங்க?
நீங்கதானை சார் சொன்னீங்க! வீட்டு மேலதான் லோன்
கொடுப்பீங்கன்னு..!

டாக்டர்! தினமும் ஏதாவது விளையாடினா உடல் எடை
குறையும்னு சொன்னீங்க..!
மூணு வருஷமா விளையாடி வர்றேன். எடை கூடுதே
தவிற குறைய மாட்டேங்குது…!
என்ன விளையாட்டு விளையாடினே?
வீடியோ கேம்..!


டேய்…ராமு ! இங்கிலீஷ் தெரியலைன்னா உங்க அப்பாகிட்டே
கேட்க வேண்டியதுதானே…?
அவருக்கு தெரியலை சார்..!
நீ என்னடா சொல்றே?
ஆமாம்… அவரு உங்க ஸ்டூடண்டாம்

மன்னா, சிக்கன நடவடிக்கை தேவைதான். அதற்காக,
குதிரை விலை அதிகமென்று கழுதை வாங்கி
கழுதைப்படை அமைத்திருப்பது நல்லாவா இருக்கு..!

தளபதியாரே, கிளப்புங்கள் குதிரையை…மன்னரை
மீட்டு வர வேண்டும!
ஏன்…மன்னரை எதிரிப்படை சுற்றி வளைத்து விட்டதா?
இல்லை…டாஸ்மாக் கடையில மப்பு அதிகமாகி
மல்லாந்து விட்டாராம்!

அசைவம் சாப்பிடாமல் நாக்கு செத்து விட்டது
அமைச்சரே..!
தங்களின் ஏக்கம் புரிகிறது மன்னா….பாழாய்போன
செல்போன் வந்தபிறகு சிற்றரசர்கள் எல்லோரும்
எஸ்.எம்.எஸ்.தானே அனுப்புகிறார்கள்.
எவன் புறாவைத் தூது விடுகிறான்?

மன்னர்,வில்,வாள், கேடயத்தை எடைக்குப் போட்டு
பேரீச்சம்பழம் வாங்கித் தின்று விட்டார்..!
நேற்று 'சிங்கம்போல ஸ்ட்ரெங்த்..எனக்கு'ன்னு
அவர் சொல்லும்போதே நான் டவுட் ஆனேன்யா..!

இந்த அளவுக்கா பொழுது போகாம இருப்பாங்க..?
ஏன் என்னாச்சு?
உங்க நியூஸ் பேப்பரை முழுசா படிச்சும் பொழுது போகலை….வேற ஏதாச்சும் நியூஸ் இருந்தா சொல்லுங்கன்னு போன்போட்டு கேட்கறாங்க…!

நேத்து என் கனவில நமீதா பட்டுப் புடவை கட்டிக்கிட்டு, 
நெற்றி நிறைய குங்குமத்தோடு வந்தாங்க…!
அப்ப பகல் கனவுன்னு சொல்லு…!


3 comments:

 1. ஹ்ஹாஹா அருமை

  ReplyDelete
 2. இரசித்தேன் சிரித்தேன்..

  அருமை..

  ReplyDelete
 3. இனிமையான நகைச்சுவை.!!!

  ReplyDelete

அனானிகளானாலும் வரவேற்கப்படுகிறார்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...