7/16/12

டாக்டருக்கும், ஆக்டருக்கும் என்ன சம்பந்தம்..ஜோக்ஸ்!!

"இந்த வீட்டுல இருக்கற எல்லோருக்கும் பதினெட்டு வயசுக்கு மேல ஆகுது தலைவரே...."
"அப்ப இதை "ஓட்டு வீடு"ன்னு சொல்லு..."

"டாஸ்மாக்ல வேலை பார்க்கறதும், டெய்லர் கடையில வேலை பார்க்கறதும் ஒண்ணுதான்...."
"ஏன்னா, ரெண்டு கடையிலயும் வர்றவங்ககிட்ட "ஆஃபா", "ஃபுல்லா"ன்னுதான் முதல்ல கேக்கணும்!"

ஒரு மேதாவி வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று. முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி. அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு மற்றுமொரு மேதாவி வந்தார். விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்..

"கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!"

"என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு..."
"பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..?"
"ம்ஹூம்... ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!"

"கதை எழுதுபவரை விளம்பரம் எழுத சொன்னது தப்பா போச்சு."
"ஏன்?"
"விளம்பரத்துக்கு கீழே அனைத்தும் கற்பனையேன்னு எழுதிட்டாரு."

"தேவைப்பட்டா நீங்க கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்லணும்..."
"தேவைப்படலைன்னா?"
"ஸ்டேஷனுக்கு வந்து மாமூல் தரணும்!"


"டாக்டருக்கும், ஆக்டருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.... எப்படின்னு சொல்லு?"
"ரெண்டுபேருமே தியேட்டருக்கு வரவச்சுதான் கொல்லுவாங்க!"

"பையன் ராஜா மாதிரி இருப்பான்னு தரகர் சொன்னது சரிதான்...."
"ஏன்... என்னாச்சு?"
"பொண்ணைப் பார்த்ததும் புறமுதுகிட்டு ஓடிட்டான்!"

"எங்க அப்பாவுக்கு நான் கதவு மாதிரி..."
"எப்படி...?"
"அதான் அடிக்கடி சாத்து சாத்துன்னு சாத்தறாரே!"

"கண்டக்டருக்கும் டிரைவருக்கும் என்ன வித்தியாசம்?"
"தனி தனியா டிக்கட் கொடுத்தா கண்டக்டர்;
மொத்தமா கொடுத்தா டிரைவர்!"


"தலைவரால சட்டசபையே அதிர்ந்திடுச்சாம்..."
"அடேங்கப்பா ... அப்படி என்ன பேசினாரு?"
"பேசலைய்யா... குறட்டை விட்டாரு!"

3 comments:

அனானிகளானாலும் வரவேற்கப்படுகிறார்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...