ரசித்த உலகசினிமா- The Blue Lagoon..!!

நாங்களும் ஒலகப்படம் பார்ப்பம்ல! ஒலகப்படங்களை ரசிப்பதற்கு மொழி ஒரு முக்கிய தடையாய் இருப்பதால், பக்கம் பக்கமா வசனம் பேசுற படங்கள் நம்மளுக்கு புரியாது.. ஆக்ஷன் படங்கள், கிராபிக்ஸ் வித்தை காட்டும் படங்கள் புடிக்காது. காட்சிகளால் நகர்த்தப்படும் படங்களே என்னைக்கவர்ந்தவை. இதிலே வசனங்களைவிட காட்சிகள்தான் அதிகம் கதைபேசும்.. இவ்வாறான படங்களுக்கு மொழி தெரிய வேண்டிய அவசியமில்லை காட்சிகளின் மூலமே புரிந்துகொள்ளலாம். நான் பார்த்த வரையில் தமிழில் சில படங்களே இவ்வாறு உருபவாக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இவ்வாறான நிறைய படங்கள் வருவதுண்டு. மற்றும் சில ஈரான் படங்களும் இந்த வகையை சார்ந்ததுதான்.. 

The Blue Lagoon திரைப்படமும் இவ்வாறு காட்சிகளால் நகரும் படமே.. இது அழகான தீவைக்குறிக்கும் பெயராகும். ஓரு சிறிய கப்பலொன்றில் ஒரு 10 பேர் அளவிலான கூட்டத்தினர் பயணம் செய்கின்றனர்.இதில் 5,6 வயதுக்குட்பட்ட ஒரு பையனும் பொண்ணும் அடக்கம், நடுக்கடலில் கப்பல் ஒரு விபத்தில் சிக்கவே, அக்கப்பலில் இருந்த இரு படகுகளில் ஒரு படகை எடுத்துக்கொண்டு கப்பலின் சமையற்கார கிழவன் அந்த இரு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு படகில் ஏறிக்கொள்கிறான். மற்றவர்கள் அடுத்த படகில் ஏறிக்கொள்கிறார்கள். இப்போது கப்பல் வெடித்துச்சிதறவே இரு படகுகளும் இரு பக்கமாக அலை அடித்துசென்று இரு குழுவினரும் ஒருவரையொருவர் கானமுடியாதபடி மறைந்துவிடுகின்றனர்.

இவ்வாறு சென்றவர்களில் அந்த சமையற்காரனும் இரு குழந்தைகளும் ஒரு அழகான தீவில் கரையொதுங்குகின்றனர். அதன் பிறகு வேறெங்கும் செல்ல வசதியோ தகவல்கொடுக்க எந்த சாதனங்களோ இல்லாததால் அங்கேயே தங்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. அங்கே உண்பதற்கு காட்டில் பழங்கள் கிடைக்கின்றன,கடலில் மீன்பிடித்து சாப்பிடுகிறார்கள். அந்த தீவில் மனித மாமிசம் உண்ணும் காட்டுவாசிகள் நடமாட்டத்தையும் அவதானிக்கிறான் கிழவன்.. இப்படி கொஞ்ச காலம் சென்றபின் அந்த சமையற்கார கிழவன் இறந்துவிடுகிறான். அதன்பின் அவ்விருவரும் தனிமையாகிவிடுகின்றனர்.. இவ்வாறு காலம் செல்ல செல்ல இருவரும் பருவ வயதை அடைந்துவிடுகின்றனர். அவர்களுக்கென்றொரு அழகான வீட்டை அமைத்துக்கொள்கின்றனர்.

நாட்கள் செல்ல செல்ல இருவரும் பருவ வயதை அடைந்ததுன் அதன்பிறகு அவர்களுக்குள் உணர்வு மாற்றங்கள் ஏற்படுகிறது காதல்,காமம் என்ற உணர்வுகள் அவர்களை அறியாமலே அவர்களுக்குள் உருவாகிறது.. இதனால் அவர்களுக்குள் ஓர் ஈர்ப்பு ஏற்படுகிறது.. ஆரம்பத்தில் அந்தப்பெண் மறுத்தாலும் பிறகு இருவரும் உறவு கொள்கிறார்கள். அதன் காரணமாக அவள் கர்ப்பமாகிறாள் பின் ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுக்கிறாள்.

குழந்தை பிறந்ததும் பசியினால் அழவே உண்ண எதைக்கொடுப்பது என தடுமாறுகின்றனர்.. இளநீர் பழங்கள் எல்லாவற்றையும் கொடுத்து பார்க்கின்றனர்.. அது அழுது கொண்டேயிருக்கிறது.. எதேச்சையாக அவளின் மார்புக் காம்புக்கருகில குழந்தையை கொண்டுவரவும் அதுவாக தாய்ப்பால் அருந்த தொடங்குகிறதுபின் இதை இருவரும் வேடிக்கையாக பார்த்து மகிழ்கின்றனர்.. என்னதான் வெளியுலக தொடர்பு இல்லாதவர்களாகயிருந்தாலும் இந்த விடயம்கூடவா அவர்களுக்கு தெரியாது என்ற கேள்வி எழாமல் இல்லை? லாஜிக்கெல்லாம் பார்த்தா சினிமாவே பார்க்க முடியாதுல்ல!!

பின் அவர்களின் வாழ்க்கை என்னவானது அங்கேயே வாழ்ந்தார்களா இல்லை நாட்டுக்கு மீண்டார்களா என்பதை டோரண்ட்டுக்கு போய் பாருங்க இல்லாட்டி எங்காவது ஓசி டிவிடி கிடைச்சா வாங்கி பாருங்க.. காசெல்லாம் செலவழிச்சு பார்க்காதீங்க(சமூக அக்கறை)

படத்தின் சில சுவாரசியங்கள்..!
கதைக்காக வேண்டி ஒரு அழகான தீவை தெரிவுசெய்து கண்களுக்கு இயற்கை விருந்தளித்தமை

ஆரம்ப காட்சி இறுதிக்காட்சி தவிர்ந்து படத்தில் இரண்டு கதாபாத்திரத்தை மாத்திரம் உலவவிட்டமை.

படத்தில் அதிக முத்த காட்சிகள்,உடலுறவு காட்சிகள் வைப்பதற்கு வாய்ப்பிருந்தும், ஒரேயொரு உறவுக்காட்சி(அதுவும் ஆபாசமில்லாமல்) யை மட்டும் வைத்தமை

மாமிசம் உண்ணும் (Cannibel) மனிதர்களைக்காட்டி பயமுறுத்திய போதிலும் அவர்களால் நாயகன் நாயகிகு பாதிப்பு வராத மாதிரி காட்டியது..

அந்த பெண் வயசுக்கு வந்த விடயத்தை காட்சிகளால் மட்டும் காட்டிய விதம் எந்தவித ஆபாசமுமில்லாமல்..(நம்ம தமிழ்படத்துலண்டு சொன்னா "பொண்ணு சமஞ்சிட்டான்னு" சொல்லி ஒரு பாட்டு வெச்சிருப்பாங்க:)
கிளைமாக்ஸ் காட்சியை இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம். அதன் பிறகு என்ன நடக்கும் என ஆவலாய் இருந்தேன்.. தமிழ்படங்களில் விலாவாரியாக "5 வருடத்துக்கு பிறகு" என்று போட்டு காட்டுவார்களே அதெல்லாம் பார்த்து பழகிய தமிழ்சினிமா ரசிகன் ஆனபடியால்..
.
படக்குழுவினர் விபரம்..!
தேவைப்பட்டா விக்கிபீடியா ஆத்தாகிட்ட கேளுங்க, அவா சொல்லுவா..

இது பார்த்தேதீரவேண்டிய படம்!.......... அப்பிடியெல்லாம் சொல்லி உங்கள உசுப்பேத்த விரும்பல்ல, விரும்பினாபொழுது போக்குக்கு பாருங்க.. இல்லாட்டி உங்க வேலய பாருங்கப்பு அதுதான் சோறு போடும்..

Post a Comment

14 Comments

  1. //இது பார்த்தேதீரவேண்டிய படம்!.......... அப்பிடியெல்லாம் சொல்லி உங்கள உசுப்பேத்த விரும்பல்ல, விரும்பினாபொழுது போக்குக்கு பாருங்க.. இல்லாட்டி உங்க வேலய பாருங்கப்பு அதுதான் சோறு போடும்..//
    செம டச்...

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி நன்றி..

      Delete
  2. நல்ல ஒலக படம்ங்கோ

    ReplyDelete
  3. அட நம்ம பாணில சொல்லியிருக்கிறிங்க....:)

    இதைவும் ஒருக்கா பார்க்காம விட்டுடுவமா என்ன..

    ReplyDelete
    Replies
    1. பாருங்க பாருங்க :)

      Delete
  4. குழந்தைக்கு எதை எதையோ சாப்பிட கொடுத்து இறுதியில் அதுவாகவே பால் குடிக்கும் காட்சி அற்புதமானது...

    ReplyDelete
    Replies
    1. ஆம் பிரபா..அது ஒரு அழகான காட்சி..

      Delete
  5. இன்னும் பார்க்கல ... அழகா விமர்சனம் எழுதியிருக்கீங்க. அண்மையில் கூட ஏதோ ஒரு மூவி சேனலில் போனதாக ஞாபகம். அடுத்தமுறை போட்டால் நிச்சயம் பார்த்துவிடுகிறேன்.

    போட்டிருக்கிற படமெல்லாம் கிளுகிளுப்பா இருக்கு. ஒரே ஒரு பிட்டு மட்டுமா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தல :)) So Sad!!

      Delete
  6. படத்தைப் பார்ப்பதற்குத் தூண்டி விட்டீர்கள் . உங்கள் எழுத்து ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது . உண்மையில் சில வேற்று மொழிப் படங்களில் அன்பு பாசம் மிக அழகாக உணர்வுபூர்வமாக எடுத்துக்காட்டப்படுகின்றன

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.. நீங்கள் சொல்வது.. சில உணர்வுகளை அழகாக வெளிக்காட்டியிருப்பார்கள்..

      Delete
  7. இன்னும் பார்க்கல.., சீக்கிரம் பார்க்கனும் :)

    ReplyDelete

Drop Anything