1/13/13

புலி இப்ப பதுங்கியிருக்கு!!

காசில்லாதவர்கள் தாராளமாக சாப்பிட வாருங்கள் என நிறைய ஓட்டலில் போர்டு தொங்குதே என்னய்யா இது... அட .. நீங்க வேற....கரண்ட் இல்லாததனாலே கிரைண்டர் ஒடரதில்ல. .. அதுதான் மாவு ஆட்ட ஆளு வேணுமுல்ல...?? 
 மகன்: நான் கணக்குல புலி…
அப்பா: அப்புறம் ஏண்டா, கணக்குல முட்டை மார்க் வாங்கியிருக்கே..?
மகன்: புலி இப்ப பதுங்கியிருக்கு…!! 
தோட்டக்காரர்: எவண்டா அது தென்னை மரத்துல தேங்கா திருடறது… இறங்குடா உங்கப்பாகிட்ட சொல்றேன் பாரு… 
சிறுவன்: இதோ பக்கத்து மரத்து மேல இருக்கார் எங்கப்பா, 
இன்னும் மூணு மாசத்துக்கு நீங்க என் ட்ரீட்மென்ட்ல இருந்தே ஆகணும்..! 
நீங்க கட்டிக்கிட்டு இருக்கற புதுவீடு முடியற வரைக்குமா டாக்டர்..!
தலைவரைப் பார்த்து 'அதோ பூச்சாண்டி வர்றான். சாப்பிடு சாப்பிடு'னு அந்தஅம்மா குழந்தைகிட்ட சொன்னதுக்கா தலைவர் இப்படி அப்செட் ஆகிப் போய் இருக்கார்..? இல்லை. பதிலுக்கு அந்தக் குழந்தை தலைவரைப் பார்த்து 'அது பூசாண்டி இல்லை. காமெடி பீஸ்'னு சொல்ல்லி சிரிச்சுதாம், அதான்..! 

ஒரு நாய்தானே இருக்கு உங்க விட்டில..எதுக்கு நாய்(கள்) ஜாக்கிரதைன்னு போர்டு வெச்சிருக்கீங்க? ஹி..ஹி..அந்த நாய் முழுகாம இருக்கு..இன்னும் 4, 5 நாள்ல குட்டி போடப்போகுது..! 
எதுக்கு டாக்டர் எக்ஸ்ட்ரா மாத்திரை தர்றீங்க? மீதி தர சில்லறை இல்லையே, அதான்..!
ஏண்டா திலீபன், உங்க அப்பா என்ன செய்யறார்? எங்க அம்மா சொல்ற எல்லா வேலையையும் அவர்தான் செய்வாரு..! 
வீட்டோட மாப்பிள்ளை வேணும்னு கேட்டீங்களே… இவர் வீட்டைவிட்டு வெளியே தலை காட்டவே மாட்டார்..! ஏன்? போலீஸ் தேடிக்கிட்டு இருக்கு..! 
அந்த கைரேகை நிபுணருக்கு ஜோதிடமும் தெரியுமா? ஏன் கேக்கறீங்க? கொலைகாரன் கும்ப ராசி , பூரட்டாதி நட்சத்திம்னு குறிப்பு எழுதி இருக்காரே…!  
என் தாத்தா அவர் காலேஜ் படிக்கும்போதே தன் காதலிக்கு மிஸ்டு கால் கொடுப்பாராம்..! லேண்ட் லைனிலயா? இல்லே..அவங்க வீட்டு 'காலிங் பெல்லை' அடிச்சுட்டு ஓரமா ஒளிஞ்சுப்பாராம்…!
சோம்பேறிகளுக்கான போட்டியில உங்களுக்கு முதல் பரிசு கிடைச்சுதாமே? எப்படி?நான் அந்த போட்டிக்கு பேர் கொடுத்தேன், ஆனா கலந்துக்கவே இல்ல. அதான் முதல் பரிசு.. 
இடம்: குடிவரவுப் பணிமனை, இஸ்லாமபாத் விமானநிலையம் 
ஒரு ஆப்கானிஸ்தான் பயணியிடம் குடிவரவு அதிகாரி நீ ஆப்கானிஸ்த்தானிலில் என்ன வேலை பார்க்கிறீர் என்று கேட்டார். அதற்கு அப்பயணியின் பதில் நான் அங்கு துறைமுகத் துறை அமைச்சராக இருக்கிறேன். அதிர்ச்சியடைந்த குடிவரவு அதிகாரி ஆப்கானிஸ்தானில் துறைமுகமே இல்லை. எப்படி துறைமுகத்துறை மந்திரியாக நீர் இருக்கிறீர்கள். அதற்கு அந்தப் பயணி உங்கள் நாட்டில் சட்டமும் இல்லை நீதியும் இல்லை ஆனால் சட்டத்துறை அமைச்சர் நீதித் துறை அமைச்சர் இருக்கவில்லையா என்றார்.

2 comments:

  1. ஹா ஹா ஹா எல்லாமே நல்ல இருக்குங்க. சிரிச்சுட்டேன். உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Anonymous15.1.13

    not bad

    ReplyDelete

அனானிகளானாலும் வரவேற்கப்படுகிறார்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...