6/27/12

கொலவெறி கல கல ஜோக்ஸ்-1

கோபாலு : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?
ஆசிரியர் : தரமாட்டேன். ஏன்?
கோபாலு : நான் home work செய்யலை சார் அதான் கேட்டேன்

நெஞ்சில் பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்"
"உங்களை யார் ஓரடி மேலே தள்ளிப்படுக்கச் சொன்னாங்க?

ஊர்ல நாலு பேர் சிரிக்கிற மாதிரி, எந்தக் காரியத்தையும் என் பையன் பண்ணவே மாட்டான்.
பையன் அப்படி என்ன பண்றான்?
டி.வி. மெகா சீரியல் டைரக்டரா இருக்கான்

டாக்டர் டாக்டர். நாய் கடிச்சிடுச்சு டாக்டர்!
எங்கப்பா கடிச்சுச்சு?
சைதாப்பேட்டையிலே டாக்டர்!
இதுதான் மனிதாபிமானம்

வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?
கடைக்காரர்: ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???
கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு

தலைவர் ஜெயிச்ச உடனே தொகுதியை சுத்தி சுத்தி வர்றாரே,
நன்றி சொல்லவா..?
ஏதாவது பொறம்போக்கு நிலம் இருக்குமா, வளைச்சுப் போடலாமான்னு
பார்க்கிறார்…!

தலைவருக்கு துப்பறியும் திறன் அதிகம்னு எப்படி சொல்றே..?
-
வெறும் தொப்புள் படத்தைக் காட்டினாலே, எது அனுஷ்கா தொப்புள்,
எது தமன்னா தொப்புள்னு கரெக்டா சொல்லிடுவாரு

ஏட்டய்யா, என்னை அடிக்காதீங்க…உண்மையைச்
சொல்லிடறேன்…திருடுனது நான்நான்..!
உண்மையை ஒத்துக்கவா அடிச்சேன்…மாமூல் ஒழுங்கா
குடுத்துடுனு சொல்லித்தானே அடிச்சேன்…!

லாஸ்ட் சம்மர்ல வெயில் தாங்க முடியாம சில எறும்புங்க ஆத்துல போயி நீந்திக்கிட்டு இருந்துச்சி.. அப்போ அங்கே வந்த ஒரு யானை தொபுக்கடீர்னு ஆத்துல குதிச்சிடுச்சி
திடீர்னு யானை குதிச்சதுனாலே எறும்பல்லாம் திக்காலுக்கு ஒண்ணா கரையில போய் விழுந்துச்சி.... ஒரே ஒரு எறும்பு மட்டும் யானையின் தலை மேல போய் உட்காந்துடுச்சு!!
அத பாத்து கரையில இருந்த மத்த எறும்பெல்லாம் கோரஸா கத்திச்சி...இப்படி,
. "மச்சான், அவன அப்பிடியே தண்ணில மூழ்கடிச்சுக் கொல்லுடா...."


சுகர் இல்லாத (TEA) டீயும் .... பிகர் இல்லாத வாழ்க்கையும் கசப்புத்தான் ..
ஆனால்....!!
உடம்புக்கு நல்லது ....அவ்வ்வ்வ்வ்

ஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க.
அப்ப,
பஸ்ல காசில்லைன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?

Teaயில ஒரு பல்லி செத்துக்கிடந்தா பாய்ஸன்!
அதுவே
பிரியாணியில ஒரு கோழியே செத்துக் கிடந்தா ..? பங்ஷன்.!.


6/25/12

பாவமடி நம் காதல்! கவித கவித


சேர்ந்திருந்தால்
இருவருக்கும் சந்தோஷம்
பிரிந்திருந்தால்
ஊருக்கே சந்தோஷம்
பாவமடி
நம் காதல்!


கொலுசை கழற்றி விடு
கொஞ்ச நேரம் சிரிக்காதிரு
பேச்சைக் கட்டுப்படுத்து
இசையில்லாத உலகம்
எப்படி இருக்குமென
தெரிந்து கொள்ள வேண்டும்

6/22/12

இந்த நாய் எனக்கு வாடகைக்கு கிடைக்குமா?'

அண்ணாசாமி ஒரு நாள் ஒரு டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார்.அப்போது சுடுகாட்டிற்கு
2 சடலங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.அவற்றுடன் நாயுடன் ஒருவர் செல்ல அவர் பின்னால் ஒருவர் பின் ஒருவராக
கிட்டத்தட்ட 500பேர் சென்றுக்கொண்டிருந்தனர்.அதைப் பார்த்த அண்ணாசாமிக்கு ஆச்சர்யம்.!
பத்தவச்சிட்டியே பரட்ட!!

டீக்கடைக்காரரிடம்
நான் எவ்வளவோ பிண ஊர்வலங்களைப் பார்த்திருக்கிறேன்..ஆனால் இவ்வளவு ஒழுங்காக ஒருவர் பின் ஒருவராக
சென்று பார்த்ததில்லை..ஆமாம் ..யாருடைய ஊர்வலம் இது? என்றார்.

அவர் நாயுடன் செல்பவரை சுட்டிக்காட்டி 'அவரைக் கேளுங்கள்' என்றார்.
நாயுடன் செல்பவர் சொன்னார்'முதலில் சென்றது என் மனைவி..'

'ஆமாம் ..அவருக்கு என்னவாயிற்று?'

என் நாய் அவளைக்கடித்து விட்டது.இரண்டாவது பிணம் என் மாமியார்..என் மனைவியைக் காப்பாற்ற சென்றவரை
என் நாய் கடித்து விட்டது.

உடனே ஆவலுடன் அண்ணாசாமி' இந்த நாய் எனக்கு வாடகைக்கு கிடைக்குமா?' என்றார்.

வரிசையில் போய் நில்லுங்கள் என்றார்...நாயுடன் சென்றவர்.
அண்ணாசாமி 501வது ஆளாக வரிசையில் நின்றார். ஒரு கனவன் போன வேலை பாதியிலேயே கேன்சல் ஆயிட்டதால திரும்பி வீட்டுக்கு வந்தான், மனைவிக்கு தகவல் சொல்லாமலே.கதவ ரொம்ப நேரமா தட்டி அப்புறந்தான் திறந்தாள் மனைவி.


இவ்வளவு நேரம் என்ன பண்ணின? 
அதுவந்து குளிச்சிட்டு இருந்தேன்... 


வரவர நீ சரியில்ல ஹே.. இதென்ன களிமண் சிலை!!!
அது... நேத்து ஸ்மித் வீட்டுல இதே மாதிரி சிலை பாத்தேன் அதான் ஒண்ணு ஆர்டர் பண்ணிட்டேன்.. 


ஹ்ம்ம் வெட்டி செலவு! 


அதுக்கப்புறம் அவன் கண்டுக்கல, நைட் ரெண்டு மணி மனைவி தூங்கிட்டாளான்னு பாத்துட்டு ப்ரெட், தண்ணி கொண்டு போயி சிலை கிட்ட சாப்பிடுன்னான்.சிலையா நடிச்சவனுக்கு ரொம்ப ஆச்சர்யம்!!


ரொம்ப நன்றி சார் எப்படி கண்டு பிடிச்சீங்க? 


ஹ்ம்ம் ஸ்மித் வீட்ல சிலையா நின்னது நாந்தான், மூணு நாள் பயபுள்ளங்க பச்சத்தண்ணி கூட எவனும் தரலை!!


6/14/12

சே குவேரா என்னும் புரட்சிக்காரன்!!

''உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம்/அநீதி தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் சூடேறினால் நீ என் தோழன்” - சே குவேராஇடதுசாரிக் கொள்கைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்த சே, சிறு வயதில் இருந்தே அநீதி கண்டு ஆத்திரம்கொள்பவராக இருந்தார். பணக்காரக் குடும்பத்தில் பிறந்து, ஏழைகளின் நண்பராக வளர்ந்தார்.

இளம் வயதில் தென் அமெரிக்கா முழுவதும் மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் பயணம் சே'வின் வாழ்க்கையைத் திசை மாற்றியது. முதலாளித்துவம் மக்களை எவ்வளவு கொடூரமாகப் பிழிந்தெடுக்கிறது என்பதைக் கண்கூடாகப் பார்த்தார். இனி புரட்சி மட்டும்தான் ஒரே வழி என முடிவெடுத்தார். ஃபிடல் காஸ்ட்ரோவுடனான அறிமுகம் இதைச் சாத்தியப்படுத்தியது.

1928 ஜூன்அர்ஜென்டினாவில் பிறந்த சே, அடிப்படையில் ஒருசோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி.. கியூபாவின் விடுதலைக்காகப் போராடக் களம் இறங்கி. அமெரிக்காவை அலற வைத்தவர்.

கியூபா புரட்சி வெற்றி பெற்ற தும் கொஞ்ச காலம் காஸ்ட்ரோ அமைச்ச ரவையில் பங்கேற்றவர், மந்திரி பதவியைத் துறந்து காங்கோவின் விடுதலைக்குப் போராட ஆப்பிரிக்காவுக்குக் கிளம்பினார். அங்கிருந்து பொலிவியா மக்களை விடுதலை செய்ய அங்கு போனார்.

சே வை விடாமல் துரத்திய அமெரிக்காவின் சி.ஐ.ஏ. 50 கெரில்லா வீரர்களுடன் பொலிவியக் காட்டுக்குள் போராடிக் கொண்டு இருந்த சே வைச் 1967 ஒக்டோபர் 9 அன்று ஏகாதிபத்திய அமெரிக்க அரசின் ஆனையோடு சுட்டுக் கொன்றது.

எந்த அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் போராடினாரோ, அதே அமெரிக்காவில் இப்போது அதிகம் விற்பனையாவது சே குவேராவின் உருவம் பதித்த டி-ஷர்ட்கள்தான்.

நேற்று இந்த புரட்சிக்காரனின் பிறந்த தினமாகும்! அவரின் போராட்டம் பற்றி ஒரு பதிவில் சொல்லிவிடுவது கடினம்.. இது வெறும் நினைவேந்தல்தான்!!

இன்றையநிலையில், ஆனவம் பிடித்து அநீதியாலும், அராஜகத்தாலும், அடக்குமுறைகளாலும் அப்பாவி மக்களை கொன்று குவித்து சர்வாதிகார ஆட்சி நடத்தும் அமெரிக்க ராட்சசனை அழிக்க இன்னும் பல சே குவேராக்கள் நம் சமூகத்தில் பிறக்க வேண்டும்!!!

6/12/12

தபூ சங்கரின் காதல் ஈர்ப்பு விசை..!!சற்றுமுன் நீ நடந்து போன
தடயம் எதுவுமின்றி
அமைதியாய் கிடக்கிறது வீதி.

எனினும்
அதிவேக ரயிலொன்று
கடந்து போன தண்டவாளம் போல
இன்னும் அதிர்கிறது
என் இதயம்.


சூரியன் வந்த பிறகுதான்
நீ வருகிறாய் என்றாலும்
நீ வரும் போதுதான்
விழிக்கிறது இந்த வீதி.

எனது அறையின் தினசரி காலண்டர்கூட
கேலி பேசுகிறது என்னை.
முதல் நாள் உன்னை பாஎத்திருந்தால்
அந்த தேதியை மிக மெதுவாக கிழிக்கிறேனாம்
பார்க்கவில்லை யெனில்
பிய்த்து கசக்கி எறிகிறேனாம்.நீயோ
சூரிய வெளிச்சம் முகத்தில் படாமலிருக்க
புத்தகத்தால் உன் முகத்தை
மறைத்துக்கொள்கிறாய்
சூரியனோ
உன்னை பார்க்க முடியாத கோபத்தில்
எல்லோரையும் சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது.


உன்னை ஏன்
இப்படி காதலித்துத் தொலைக்கிறேன்
அடிக்கிற அம்மாவின்
கால்களையே கட்டிக்கொண்டு
அழுகிற குழந்தை மாதிரி.தபூசங்கரின் விழியீர்ப்பு விசை கவிதை நூலில் சுட்டது!!

6/7/12

ஐய்யய்யோ என் இடுப்ப எவனோ கிள்ளிட்டான்!

# மிருகக்காட்சி சாலையில் ஒரு புலி ஒருத்தர சாவடிச்சிடுச்சி.
பக்கத்து கூண்டிலிருந்த குரங்கு ஏன் அவர அநியாயமா சாவடிச்சே?
அதுக்கு புலி சொல்லிச்சி: அந்த லூசு 3 மணி நேரமா என்ன உத்து பார்த்துட்டு சொல்றான்!!
இவ்வளவு பெரிய பூனையா?

# சுவாமி...இந்த பூமி ஏன் சுற்றுகிறது
மகனே கேள்..ஓரு குவார்ட்டர் தண்ணி அடிச்ச நீயே
தலைகிழா நடக்கும் போது...3 குவார்ட்டர் தண்ணியை தன்னகத்தே
கொண்டுள்ள இந்த பூமி தினமும் சுற்றுவதில் என்ன அதிசயம் மகனே?
சுவாமி: குவாட்டாரானந்தா

# ஏதாவது கல்யாணத்துக்கு போனா என் பாட்டிங்க, அத்தைங் யெல்லாம் கிண்டல் பண்ணுவாங்க "அடுத்து உனக்குதான்" அப்படின்னு. பயங்கரமா கேலி பண்ணுவாங்க. ஆனால் ஒரு நாள் அப்படி செய்யறது நிறுத்திட்டாங்க. ஏன்னா நானும் அதையே அவங்ககிட்ட திருப்பி சொன்னேன் ஒரு சாவு வீட்ல.
# கணவன் : நான் நெனைக்கிறேன் நம்ம பொண்ணு காதல்ல விழுந்துட்டான்னு.
மனைவி : எத வெச்சு சொல்லறீங்க ?
கணவன் : இப்ப எல்லாம் அவ (pocket money) கேக்குறதே இல்ல!!!.

#அந்த ராப்பிச்சை உங்க்களுக்கு ஏன் பணம் கொடுட்துட்டுப் போறான்?
மாசக்கடைசி கைச் செலவுக்கு பணம் இல்லைன்னு சொன்னேன்..வட்டிக்கு பணம்
கொடுத்துட்டு போறான்.

#அம்மா எப்போது ஐயா ஊர்ல இருந்து வருவாரு?
ஏன் ராப்பிச்சை இதை தினமும் கேட்குறே?

அவர் சமையல் சாப்பிட்டு பழக்கமாயிடுச்சே.

#எவ்வளவு வேணாலும் திருடிட்டு போங்க ஆனா போகும் போது இவரை மட்டும் அவுத்து விட்ருங்க.
ஏன் வீட்டுக்காரர் வெளியூர் போயிருக்கார். இவர் பக்கத்து வீட்டுக்காரருங்க.

# நீதிபதி- (குற்றவாளியிடம்)இந்த திருட்டு குற்றத்திற்கு உனக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்..,கட்டத் தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை
குற்றவாளி-என்னை ஒரு மணி நேரம் வெளியே விடுங்க..அபராதத்தை கொண்டு வந்து கட்டிடறேன்.

# நேத்துதான் பிளாக் பெல்ட் வாங்கினேன்.
அப்படியா...? நீங்க கராத்தே வீரர்னு சொல்லவே இல்லியே

அட போங்க சார்... பேண்ட் லூசா இருந்துச்சேன்னு பெல்ட் வாங்கினேன்.

# மெகா சீரியலோட டைரக்டர் கல்யாணத்திற்கு போனது தப்பாயிடுச்சு
ஏன்?
கல்யாணப் பத்திரிகைல போட்டிருந்த பொண்ணு காயத்ரிக்கு பதிலா சாவித்ரின்னு மணப்பெண்ணை மாத்திட்டார்

# புன்னகை என்பது எதிரியை
கூட நண்பனாக்கும்...ஆனால் brush பண்ணாம
சிரிச்சால் நண்பனைக் கூட எதிரியாக்கிவிடும்
எனவே....சிரிங்க...நல்லா சிரிங்க
ஆனால்..பல்லை துலக்கிட்டு சிரிங்க...
சுவாமி:பல்லானந்தா

# அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?....

டிஸ்கி - இந்த தலைப்புக்கும் நம்ம குஷ்பூ அக்கா இடுப்பு மேட்டருக்கும் எந்த சம்பந்தமுமில்லை

6/3/12

ரசித்த உலகசினிமா- The Blue Lagoon..!!

நாங்களும் ஒலகப்படம் பார்ப்பம்ல! ஒலகப்படங்களை ரசிப்பதற்கு மொழி ஒரு முக்கிய தடையாய் இருப்பதால், பக்கம் பக்கமா வசனம் பேசுற படங்கள் நம்மளுக்கு புரியாது.. ஆக்ஷன் படங்கள், கிராபிக்ஸ் வித்தை காட்டும் படங்கள் புடிக்காது. காட்சிகளால் நகர்த்தப்படும் படங்களே என்னைக்கவர்ந்தவை. இதிலே வசனங்களைவிட காட்சிகள்தான் அதிகம் கதைபேசும்.. இவ்வாறான படங்களுக்கு மொழி தெரிய வேண்டிய அவசியமில்லை காட்சிகளின் மூலமே புரிந்துகொள்ளலாம். நான் பார்த்த வரையில் தமிழில் சில படங்களே இவ்வாறு உருபவாக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இவ்வாறான நிறைய படங்கள் வருவதுண்டு. மற்றும் சில ஈரான் படங்களும் இந்த வகையை சார்ந்ததுதான்.. 

The Blue Lagoon திரைப்படமும் இவ்வாறு காட்சிகளால் நகரும் படமே.. இது அழகான தீவைக்குறிக்கும் பெயராகும். ஓரு சிறிய கப்பலொன்றில் ஒரு 10 பேர் அளவிலான கூட்டத்தினர் பயணம் செய்கின்றனர்.இதில் 5,6 வயதுக்குட்பட்ட ஒரு பையனும் பொண்ணும் அடக்கம், நடுக்கடலில் கப்பல் ஒரு விபத்தில் சிக்கவே, அக்கப்பலில் இருந்த இரு படகுகளில் ஒரு படகை எடுத்துக்கொண்டு கப்பலின் சமையற்கார கிழவன் அந்த இரு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு படகில் ஏறிக்கொள்கிறான். மற்றவர்கள் அடுத்த படகில் ஏறிக்கொள்கிறார்கள். இப்போது கப்பல் வெடித்துச்சிதறவே இரு படகுகளும் இரு பக்கமாக அலை அடித்துசென்று இரு குழுவினரும் ஒருவரையொருவர் கானமுடியாதபடி மறைந்துவிடுகின்றனர்.

இவ்வாறு சென்றவர்களில் அந்த சமையற்காரனும் இரு குழந்தைகளும் ஒரு அழகான தீவில் கரையொதுங்குகின்றனர். அதன் பிறகு வேறெங்கும் செல்ல வசதியோ தகவல்கொடுக்க எந்த சாதனங்களோ இல்லாததால் அங்கேயே தங்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. அங்கே உண்பதற்கு காட்டில் பழங்கள் கிடைக்கின்றன,கடலில் மீன்பிடித்து சாப்பிடுகிறார்கள். அந்த தீவில் மனித மாமிசம் உண்ணும் காட்டுவாசிகள் நடமாட்டத்தையும் அவதானிக்கிறான் கிழவன்.. இப்படி கொஞ்ச காலம் சென்றபின் அந்த சமையற்கார கிழவன் இறந்துவிடுகிறான். அதன்பின் அவ்விருவரும் தனிமையாகிவிடுகின்றனர்.. இவ்வாறு காலம் செல்ல செல்ல இருவரும் பருவ வயதை அடைந்துவிடுகின்றனர். அவர்களுக்கென்றொரு அழகான வீட்டை அமைத்துக்கொள்கின்றனர்.

நாட்கள் செல்ல செல்ல இருவரும் பருவ வயதை அடைந்ததுன் அதன்பிறகு அவர்களுக்குள் உணர்வு மாற்றங்கள் ஏற்படுகிறது காதல்,காமம் என்ற உணர்வுகள் அவர்களை அறியாமலே அவர்களுக்குள் உருவாகிறது.. இதனால் அவர்களுக்குள் ஓர் ஈர்ப்பு ஏற்படுகிறது.. ஆரம்பத்தில் அந்தப்பெண் மறுத்தாலும் பிறகு இருவரும் உறவு கொள்கிறார்கள். அதன் காரணமாக அவள் கர்ப்பமாகிறாள் பின் ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுக்கிறாள்.

குழந்தை பிறந்ததும் பசியினால் அழவே உண்ண எதைக்கொடுப்பது என தடுமாறுகின்றனர்.. இளநீர் பழங்கள் எல்லாவற்றையும் கொடுத்து பார்க்கின்றனர்.. அது அழுது கொண்டேயிருக்கிறது.. எதேச்சையாக அவளின் மார்புக் காம்புக்கருகில குழந்தையை கொண்டுவரவும் அதுவாக தாய்ப்பால் அருந்த தொடங்குகிறதுபின் இதை இருவரும் வேடிக்கையாக பார்த்து மகிழ்கின்றனர்.. என்னதான் வெளியுலக தொடர்பு இல்லாதவர்களாகயிருந்தாலும் இந்த விடயம்கூடவா அவர்களுக்கு தெரியாது என்ற கேள்வி எழாமல் இல்லை? லாஜிக்கெல்லாம் பார்த்தா சினிமாவே பார்க்க முடியாதுல்ல!!

பின் அவர்களின் வாழ்க்கை என்னவானது அங்கேயே வாழ்ந்தார்களா இல்லை நாட்டுக்கு மீண்டார்களா என்பதை டோரண்ட்டுக்கு போய் பாருங்க இல்லாட்டி எங்காவது ஓசி டிவிடி கிடைச்சா வாங்கி பாருங்க.. காசெல்லாம் செலவழிச்சு பார்க்காதீங்க(சமூக அக்கறை)

படத்தின் சில சுவாரசியங்கள்..!
கதைக்காக வேண்டி ஒரு அழகான தீவை தெரிவுசெய்து கண்களுக்கு இயற்கை விருந்தளித்தமை

ஆரம்ப காட்சி இறுதிக்காட்சி தவிர்ந்து படத்தில் இரண்டு கதாபாத்திரத்தை மாத்திரம் உலவவிட்டமை.

படத்தில் அதிக முத்த காட்சிகள்,உடலுறவு காட்சிகள் வைப்பதற்கு வாய்ப்பிருந்தும், ஒரேயொரு உறவுக்காட்சி(அதுவும் ஆபாசமில்லாமல்) யை மட்டும் வைத்தமை

மாமிசம் உண்ணும் (Cannibel) மனிதர்களைக்காட்டி பயமுறுத்திய போதிலும் அவர்களால் நாயகன் நாயகிகு பாதிப்பு வராத மாதிரி காட்டியது..

அந்த பெண் வயசுக்கு வந்த விடயத்தை காட்சிகளால் மட்டும் காட்டிய விதம் எந்தவித ஆபாசமுமில்லாமல்..(நம்ம தமிழ்படத்துலண்டு சொன்னா "பொண்ணு சமஞ்சிட்டான்னு" சொல்லி ஒரு பாட்டு வெச்சிருப்பாங்க:)
கிளைமாக்ஸ் காட்சியை இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம். அதன் பிறகு என்ன நடக்கும் என ஆவலாய் இருந்தேன்.. தமிழ்படங்களில் விலாவாரியாக "5 வருடத்துக்கு பிறகு" என்று போட்டு காட்டுவார்களே அதெல்லாம் பார்த்து பழகிய தமிழ்சினிமா ரசிகன் ஆனபடியால்..
.
படக்குழுவினர் விபரம்..!
தேவைப்பட்டா விக்கிபீடியா ஆத்தாகிட்ட கேளுங்க, அவா சொல்லுவா..

இது பார்த்தேதீரவேண்டிய படம்!.......... அப்பிடியெல்லாம் சொல்லி உங்கள உசுப்பேத்த விரும்பல்ல, விரும்பினாபொழுது போக்குக்கு பாருங்க.. இல்லாட்டி உங்க வேலய பாருங்கப்பு அதுதான் சோறு போடும்..

6/2/12

மொக்கைகள் ஜாக்கிரதை

''எங்க ஆத்தா ஆடு வளர்த்தா... கோழி வளர்த்தா...
ஆனா நாய் வளர்க்கல...!''
''ஏன்...?''
''அதை அடிச்சுத் தின்ன முடியாதே...?''
------------------------------------------------------------------------------------

ஒரு அம்மா மகனிடம் கேட்டாள், "திப்பு சுல்தான் யாரு தெரியுமா?"
மகன்: "தெரியலை"
அம்மா : "அதுக்குதான் பாடத்தில கவனம் வேணும்னு சொல்றேன்".
மகன்: "உனக்கு ஜோதி ஆண்ட்டி யாருன்னு தெரியுமா?"
அம்மா : "தெரியலையே"
மகன் "அதுக்குதான் அப்பா மேல கவனம் வேணும்னு சொல்றேன்
----------------------------------------------------------------------------------------
டே‌ய் ந‌ம்ம கூ‌ட்ட‌த்‌தில ரௌடியோட பையன சேர்த்தது தப்பா போச்சுடா!
ஏன்டா? எ‌ன்னடா ப‌ண்ணா‌ன்?
ஒழு‌ங்க தலைய சீவிட்டு வாடான்னா யார் தலையன்னு கேக்கறான்.
--------------------------------------------------------------------------------------

12 வருசமா ஒரு பொண்ண லவ் பண்றதா விட
ஒரு வருஷத்துல 12 பொண்ணுங்கள லவ் பண்றது
எவ்ளோவோ மேல்
ஒரு பெண்ணை நம்பி எமந்தோர் சங்கம்
-----------------------------------------------------------------------------------
USA : நாங்கதான் நிலாவுல முதல்ல கால் வைத்தோம்........
RUSSIA : நாங்கதான் வீனஸ் ல முதல்ல கால் பதித்தோம்.........
INDIA : நாங்க இந்திய தான் முதலில் சூரியனில் கால் பதித்தோம்..........
USA : சான்சே இல்ல,,,,, ரொம்ப சூட இருக்கும் முடியவே முடியாது.........
INDIA : கொய்யல நாங்க சூரியனுக்கு ராத்திரில போனோம் டா...........
-----------------------------------------------------------------------------------------
பையன்: இன்னிக்கு ராத்திரி நம்ம ஊரவிட்டு ஓடிப்போயிடலாம்.!
பொண்ணு: எனக்கு தனிய வர்றதுக்கு பயமாயிருக்கு.
பையன்: அப்போ உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா..!
பொண்ணு: ....??
--------------------------------------------------------------------------------------------------

facebook வராமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவருக்கும் comment பண்ணாமல் இருக்க வேண்டாம்

Like பண்ணும் நண்பர்களை மறக்க வேண்டாம்
comment பண்ணாத நண்பர்களோடு சேர வேண்டாம்

காலை எழுந்தவுடன் Face Book -பின்பு
மகிழ்ச்சி கொடுக்கும் நல்ல Wall post

மாலை முழுதும் Chatting -என்று
வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா..
-----------------------------------------------------------------------------------------
want tell u a story
ஒரு சிங்கம் , ஒரு புலி , ஒரு குரங்கு . சிங்கம் engineering படிக்குது . புலி MBBS
படிக்குது .குரங்கு my blog படிக்குதுது எப்புடி!!!!
---------------------------------------------------------------------------------
காதலிக்கும் போது நீங்க காதலிக்கு
ரோஜா பூ, மல்லிகை பூ அப்படின்னு
எந்த பூ வேணும்னாலும் கொடுக்கலாம்
ஆனா.. காதலி உங்களுக்கு கடைசியா
ஒரே ஒரு பூ தான் கொடுப்பாங்க...
அதுதான் ...
....
....
....
....
...
....
....
....
....
ஆப்பூ!!!BEGGER : Sir, Please give Rs.10 for Tea
MAN: Tea!
Its Rs.5
BEGGER : One for My Lover
MAN : Wow! Begger too made a Lover?
BEGGER : No. Sir
'Lover made Me a Beggar'

மகாத்மா காந்தி பெண்களுக்காக..!!

மகாத்மா காந்தி அவர்கள் எழுதிய புத்தகத்தில், பெண்களுக்காகச் சொன்ன பிரபல வாசகம் ஒன்று..
நான் பெண்களுக்கு சொல்வது இதுதான்...

உன்னை ஒருவன் பலாத்காரமாக கற்பழிக் முயலும் பொழுது
உனக்கு நான் அஹிம்சையை போதிகக மாட்டேன்!!

அந்த மனித மிருகத்தை எதிர்த்து 
நீ எந்த ஆயுதத்தையும் பிரயோகிக்கலாம்!!

உன்னிடம் ஆயுதம் எதுவும் இல்லாமலிருந்தால்..
இயற்கை உனக்கு தந்திருக்கும் 
பற்களும் நகங்களும் எங்கே போயின!!?

இந்த நிலமையில் நீ செய்கிற கொலையோ.. 
அது முடியாத போது
நீ செய்து கொள்கிற தற்கொலையோ..
ஒரு போதும் பாவம் ஆகாது!!!!

மகாத்மா காந்தி
Related Posts Plugin for WordPress, Blogger...