இப்பதான் பில்லா 2 படம்பார்த்து முடித்து (UAE) வந்து முதல் வேளையாக இந்த பதிவு..
யாம் பெற்ற துன்பம் இவ்வையகம் பெறக்கூடாதென்ற நல்ல எண்ணத்தில்..

பில்லா முதல் பாகத்தின் அசத்தலுக்காகவும் மங்காத்தாவின் மெகா ஹிட்டையும் தல அஜித்தின் மீதுள்ள நம்பிக்கையில் 25 திர்ஹம் செலவழித்து படம் பார்க்க போனால்.. படம் பார்க்க வருவியா..வருவியா என எட்டி உதைக்கிறார்.. நம்ம தல!

படத்தில் தல அகதியாம்.. ஏன் அகதியானார் எதுக்கு ஆனார் என்பதெல்லாம் இயக்குனருக்கு மட்டும் தெரிந்த ரகசியம்.. அப்புறம் எல்லாரையும் அடிக்கிறார்,உதைக்கிறார்,குத்துகிறார்,வெட்டுகிறார்,துப்பாக்கியால் டுப்பு டுப்பு என சுடுகிறார்..  ஒரு கடத்தல்காரனிடம் சேர்ந்து போதைப்பொருள் கடத்துகிறார்..ஓரே பாட்டில் சர்வதேச கெங்ஸ்டர் டான் ஆகிறார்..ஆயுத கடத்தல் பிசினஸ் பன்னுகிறார்.. மறுபடியும் எல்லாரையும் அடிக்கிறார்,உதைக்கிறார்,குத்துகிறார்,வெட்டுகிறார்,துப்பாக்கியால் டுப்பு டுப்பு என சுடுகிறார்.. கைக்கு சிக்குனவனெல்லாம் போட்டு தள்ளுகிறார்.. கடைசியில் வெளிநாட்டு வில்லனையும் போட்டுதள்ளுகிறார் அப்பப்பா!!

இதுதான் கதை ஆமாங்க இதேதான்.. அவங்க என்ன வெச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றார்ங்க..!! பாவம்! அந்த  இயக்குனரால அவ்வளவுதான் முடிஞ்சிருக்கு.. இதே கதைய ஆயிரம் தடவைக்கு மேலே நாம் பார்த்திருக்கோம் ஆனால் அவங்களுக்கு புது கதை!!

தல எப்பவும் போல ஸ்டைலிஷாகவே இருக்கார்,, ஸ்டைலா நடக்கிறார்,நடிக்கிறார்,, ஆனால் ஒரு படத்தை சிறந்த படம் என சொல்ல அது மட்டும் போதுமா..?  குறைந்தபட்ச சுவாரசியமோ ட்விஸ்டோ வேண்டாமா?

நம்ம மலயாள ஓமனக்குட்டி பார்வதி தலய மாமான்னு சொல்லிட்டு வர்றாங்க இடையில கழுத்த வெட்டி கொண்ணு போட்றாங்க வில்லங்க.. இன்னுமொரு ஆண்ட்டி வர்றாங்க புருனோவாம்! ஜட்டி பிராவோட  இரண்டு மூனிதடவ குளிக்கிறாங்க அப்புறம் கடைசியில அவங்களும் செத்துட்றாங்க.. படத்தில் பங்குபற்றிய மொத்த கலைஞ்சர்களைவிட இதில் அஜித்தின் துப்பாக்கிக்கும் கத்திற்கும் சிக்குப்பட்டு செத்துப்போறவங்கதான் அதிகம்... அவ்வளவு வன்முறை!!


படத்தின் இயக்குனரை பற்றி சொல்லியே ஆகனும்.. படத்தில் வர்ற கெட்டவங் ள்ள நிறைய பேரு முஸ்லிம் பேரோடதான் வர்றாங்க செத்தும்போறாங்க.. மறுபடியும் முஸ்லிம்களை கெட்டவங்களா காட்ட முயற்சித்த இயக்குனர் சக்ரி டோலட்டியை எவ்வளவும் பாராட்டலாம்!!

படத்தில் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி வில்லுப்படத்தின் விஜய்க்கு போட்டியா ஹெலிகப்டர்ல பறந்து பறந்து அடிக்கிறார்.. இதன் மூலம் தளபதிக்கு ஒரு விதத்துலயும் சளைத்தவன் அல்ல தல எனபதை நிறுபிச்சிட்டார்..
அந்த சண்டையும் அதற்கு முன் வரும் காட்சியும் எதற்கு வந்தது என்று நானும் பக்கத்து சீட்டு நண்பனும் தலைய பிச்சிக்கிட்டோம்.. பில்லா முதல் பாகமும் மங்காத்தாவும் இதைவிட நூறுமடங்கு பெட்டர்..

இன்னுமொரு விடயம்,, காலம் மாறிக்கிட்டு இருக்கு அதனால மனிசனும் மாறனும்..  அதுக்கு போதைப்பொருள் கடத்தலாம்,ஆயுதம் கடத்தலாம்,மனிசன கொல்லலாம் அதெல்லாம் தப்பேயில்லங்கிற மாதிரி வாதங்கள் படத்தில் இருக்கு..இதைப்பார்க்கும் இளைஞர் சமூகத்தின் மனதில் இதுமாதிரியான நச்சுக்கருத்துக்கள் விதைக்கப்படலாம்..கவனம்!!! தல வில்லத்தனமான கேரக்டர் பண்ணுகிறேன் என கிளம்பி வில்லனைவிட மோஷமான கேரேக்டரே பண்ணுகிறார்..

படத்தில் கதை,திரைக்கதை.. அப்பிடின்னா.. என்ன என்று இயக்குனர் நம்மை பார்த்து கேட்கிறார்,, யுவனின் இசையும் சொல்லிக்கொள்லும்படி இல்லை.. சில இடங்களில் ஒளிப்பதிவு ஓக்கே..

மக்களே உஷார்..!! பார்த்துதான் தீருவேன்னு சொன்னா உங்க இஷடம்.. ஆனால் தவறியும் உங்க குழந்தைகளை அழைத்துச்செல்லாதீர்கள்.. அத்தனை வன்முறை!!!

மொத்தத்தில் பார்க்கவே தேவையில்லாத சினிமா இது! தல ரசிகர்கல் மன்னிச்சு!!!