ஐய்யய்யோ என் இடுப்ப எவனோ கிள்ளிட்டான்!

# மிருகக்காட்சி சாலையில் ஒரு புலி ஒருத்தர சாவடிச்சிடுச்சி.
பக்கத்து கூண்டிலிருந்த குரங்கு ஏன் அவர அநியாயமா சாவடிச்சே?
அதுக்கு புலி சொல்லிச்சி: அந்த லூசு 3 மணி நேரமா என்ன உத்து பார்த்துட்டு சொல்றான்!!
இவ்வளவு பெரிய பூனையா?

# சுவாமி...இந்த பூமி ஏன் சுற்றுகிறது
மகனே கேள்..ஓரு குவார்ட்டர் தண்ணி அடிச்ச நீயே
தலைகிழா நடக்கும் போது...3 குவார்ட்டர் தண்ணியை தன்னகத்தே
கொண்டுள்ள இந்த பூமி தினமும் சுற்றுவதில் என்ன அதிசயம் மகனே?
சுவாமி: குவாட்டாரானந்தா

# ஏதாவது கல்யாணத்துக்கு போனா என் பாட்டிங்க, அத்தைங் யெல்லாம் கிண்டல் பண்ணுவாங்க "அடுத்து உனக்குதான்" அப்படின்னு. பயங்கரமா கேலி பண்ணுவாங்க. ஆனால் ஒரு நாள் அப்படி செய்யறது நிறுத்திட்டாங்க. ஏன்னா நானும் அதையே அவங்ககிட்ட திருப்பி சொன்னேன் ஒரு சாவு வீட்ல.
# கணவன் : நான் நெனைக்கிறேன் நம்ம பொண்ணு காதல்ல விழுந்துட்டான்னு.
மனைவி : எத வெச்சு சொல்லறீங்க ?
கணவன் : இப்ப எல்லாம் அவ (pocket money) கேக்குறதே இல்ல!!!.

#அந்த ராப்பிச்சை உங்க்களுக்கு ஏன் பணம் கொடுட்துட்டுப் போறான்?
மாசக்கடைசி கைச் செலவுக்கு பணம் இல்லைன்னு சொன்னேன்..வட்டிக்கு பணம்
கொடுத்துட்டு போறான்.

#அம்மா எப்போது ஐயா ஊர்ல இருந்து வருவாரு?
ஏன் ராப்பிச்சை இதை தினமும் கேட்குறே?

அவர் சமையல் சாப்பிட்டு பழக்கமாயிடுச்சே.

#எவ்வளவு வேணாலும் திருடிட்டு போங்க ஆனா போகும் போது இவரை மட்டும் அவுத்து விட்ருங்க.
ஏன் வீட்டுக்காரர் வெளியூர் போயிருக்கார். இவர் பக்கத்து வீட்டுக்காரருங்க.

# நீதிபதி- (குற்றவாளியிடம்)இந்த திருட்டு குற்றத்திற்கு உனக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்..,கட்டத் தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை
குற்றவாளி-என்னை ஒரு மணி நேரம் வெளியே விடுங்க..அபராதத்தை கொண்டு வந்து கட்டிடறேன்.

# நேத்துதான் பிளாக் பெல்ட் வாங்கினேன்.
அப்படியா...? நீங்க கராத்தே வீரர்னு சொல்லவே இல்லியே

அட போங்க சார்... பேண்ட் லூசா இருந்துச்சேன்னு பெல்ட் வாங்கினேன்.

# மெகா சீரியலோட டைரக்டர் கல்யாணத்திற்கு போனது தப்பாயிடுச்சு
ஏன்?
கல்யாணப் பத்திரிகைல போட்டிருந்த பொண்ணு காயத்ரிக்கு பதிலா சாவித்ரின்னு மணப்பெண்ணை மாத்திட்டார்

# புன்னகை என்பது எதிரியை
கூட நண்பனாக்கும்...ஆனால் brush பண்ணாம
சிரிச்சால் நண்பனைக் கூட எதிரியாக்கிவிடும்
எனவே....சிரிங்க...நல்லா சிரிங்க
ஆனால்..பல்லை துலக்கிட்டு சிரிங்க...
சுவாமி:பல்லானந்தா

# அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?....

டிஸ்கி - இந்த தலைப்புக்கும் நம்ம குஷ்பூ அக்கா இடுப்பு மேட்டருக்கும் எந்த சம்பந்தமுமில்லை

Post a Comment

4 Comments

  1. ////இந்த தலைப்புக்கும் நம்ம குஷ்பூ அக்கா இடுப்பு மேட்டருக்கும் எந்த சம்பந்தமுமில்லை//////

    போய்யா யோவ்! போய்யா! நானும் அவதிப்பட்டு ஓட்டியாந்தேன் இப்புடி ஏமாத்திபுட்டீங்ளே!

    ReplyDelete
  2. இடுப்பை கிள்ளுற ஜோக் ஏதாவது போட்டு தலைப்பை நியாயப்படுத்தியிருக்கலாம்!
    நல்ல ஜோக்ஸ்

    ReplyDelete
  3. ஹா... ஹா... நல்ல ஜோக்ஸ் !

    ReplyDelete
  4. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருக்கும்போது வருகை தந்து கருத்தளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    http://blogintamil.blogspot.in/2012/06/7.html

    ReplyDelete

Drop Anything