நீ கஷ்டப்பட்டுக்
கோலம் போடுகிறாய்.
பேசாமல்
வாசலிலேயே
சிறுது நேரம் உட்கார்ந்திரு
போதும்.
நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்.....
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது
உன்னோடுதான்
வாழவேண்டும் என்பதில்லை.
உன் ஒரேஒரு
புன்னகையை வைத்துக்கொண்டு கூட
என்னால் வாழ்ந்துவிட முடியும்.
உப்பைக் கொட்டியவர்கள்கூட
அள்ளிக்கொண்டு போகிறார்கள்
ஆனால் நீயோ உன்
உயர்தரப் புன்னகையைக் கொட்டிவிட்டு
அலட்சியமாய்ப் போகிறாயே
தினந்தோறும்
குழந்தைக்கு ஆடை அணிவித்து
பள்ளிக்கு அனுப்பும் தாயைப்போல
ஒரு நாளாவது
உனக்கு ஆடை அணிவித்து
கல்லூரிக்கு அனுப்பவேண்டும்
நீயும் நீயும்
அடிக்கடி சந்தித்து
அப்படி என்னதான் பேசிக்கொள்வீர்கள்
கண்ணாடி முன்
நன்றி- தபூசங்கர்
5 Comments
நல்ல வரிகள்...
ReplyDeleteமிகவும் பிடித்தவை :
/// உப்பைக் கொட்டியவர்கள்கூட
அள்ளிக்கொண்டு போகிறார்கள்...
ஆனால் நீயோ உன்
உயர்தரப் புன்னகையைக் கொட்டிவிட்டு
அலட்சியமாய்ப் போகிறாயே... ///
உன்னோடுதான்
ReplyDeleteவாழவேண்டும் என்பதில்லை.
உன் ஒரேஒரு
புன்னகையை வைத்துக்கொண்டு கூட
என்னால் வாழ்ந்துவிட முடியும்.
i like it
இனிமையான வரிகள்
ReplyDeleteநல்லதொரு பகிர்வு! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
வாஸ்து பிரச்சனையில் வடிவேலு!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6.html
இளம்பெண் வலைப்பதிவர் சுடப்பட்டமைக்கு இஸ்லாம் காரணமா?
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/2012/10/malala-yousafzai-islam.html
Drop Anything