9/3/12

முகமூடி மொக்கை!

குமார்:  அவங்க பொண்ணைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டதால, அன்னிக்கு நாம் சாப்பிட்ட டிபனுக்கெல்லாம் பில் அனுப்பிருக்காங்கப்பா! 
ராமன்: அதுசரி... அதென்ன கீழே T&B சார்ஜ்னு அஞ்சு ரூபாய் சேர்த்திருக்காங்க...?
ஒருவர்: அவங்க வீட்டு டாய்லெட், பாத்ரூமை யூஸ் பண்ணினதற்காம்.

பாலா : ஏண்டா உன்ன பிரின்சிபல் அடிச்சுட்டு போறாரு
ராம் : பிரின்சிபலோட நாய கானோம்னு பேப்பர்ல விளம்பரம் போடச்சொன்னாரு
பாலா: அதுக்கு?
ராம்: நான் பிரின்சிபல் நாய கானோம்னு போட்டுட்டன்..

மனைவியை அடிப்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை
என்று அறிவித்து விடலாமா அரசே?'
'வேண்டாம் அவ்வளவு தைரியமானவர்களை நம்
படையில் சேர்த்துக்கொள்ளுங்கள்!

மனைவி: அத்தான்... உங்களை கணவராக அடைய நான் நிறைய கொடுத்து வைத்தவள்...
கணவன்: உங்கப்பாகிட்ட வரதட்சணை வாங்கியதை இப்படிக் குத்திக் காட்டிப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்..

அரசியல்வாதியைக் கட்டியிருக்கக்கூடாது !'
'ஏன்?'
'சின்ன பிரச்னை வந்தா கூட வீட்டு வாசல்ல என் கொடும்பாவி
கொளுத்தறார் !' 

"போலீஸ்: உங்க வீட்டில திருட்டு நடந்ததற்கு உங்க பொண்ணும் உடந்தையா இருந்திருக்கிறாங்களே...
வீட்டுக்காரர்: ஆமாங்கய்யா... அவளோட உள்ளத்தையும் திருடன் திருடிட்டுப் போயிட்டான்."

நோயாளி: இதென்ன, பூமாலையை இங்கே ரெடியா வச்சிருக்கீங்க சிஸ்டர்?
நர்ஸ்: பயப்படாதீங்க!...ஆபரேஷன் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா டாக்டர் எடுத்து தன் கழுத்துல போட்டுப்பார்!!
நோயாளி : பெயிலியர் ஆச்சுன்னா...?
நர்ஸ்: உங்க 'பாடி'க்குத்தான் சார்!

"கணவன்: உன் போட்டோவா இது...எனக்கே சந்தேகமா இருக்கு...
மனைவி: என் மேலே இருக்கிற சந்தேகம் எப்பதான் உங்களுக்குத் தீரப் போகுதோ..!!

தலைவருக்கு ரொம்பவும் தான் ஈகோ !'
'என்னவாம்?'
'அவரோட சிலைக்கு கூட தினசரி ஒரு பொன்னாடை போர்த்தச் சொல்றார் !

பிறந்த நாளுக்கு நம்ம தலைவர், கைதிகளுக்கு இனிப்பு
குடுக்க போனப்ப, வார்டனுக்கு ஏதுக்கு ரெண்டு லட்டு அதிகமா குடுத்தாரு?
'தலைவர் பழசை மறக்காதவர்'

"மனைவி: என்னங்க...உங்க சட்டையெல்லாம் எண்ணையா இருக்கு...?
கணவன்: ஆபிஸில தலைவலின்னு டைப்பிஸ்ட் என் மேலே கொஞ்சம் சாய்ந்திருந்தாள்..

"மனைவி: கல்யாணம் ஆகி இந்த இருபது வருசத்தில நான் என்ன சுகத்தைக் கண்டேன்...?
கணவன்: மூணு மாசத்தைக் குறைத்து விட்டாயேடி...?
மனைவி: ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள். அதை ஏன் சேர்க்கறீங்க...


1 comment:

அனானிகளானாலும் வரவேற்கப்படுகிறார்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...