12/11/12

இப்பொழுது சந்தையில் ஆண்ட்ரியா போன்!

அப்பா, எனக்கு கப் ஐஸ் வாங்கி தாப்பா!
அதெல்லாம் விலை அதிகம்! சம்பளம் வரட்டும் வாங்கித்தரேன்!
அப்ப இடைக்கால நிவாரணமா ஒரு குச்சி ஐஸாவது வாங்கித்தாப்பா!


நடுக்கடல்ல ஒரு சின்ன தீவு.. அங்கே ஒரு ஆம்பளை, ரெண்டு லேடீஸ் மட்டும் இருக்காங்க.. இருந்தாலும் அவன் மனசுல ஒரு மகிழ்ச்சியே இல்லே! ஏன்?
அந்த ரெண்டு லேடீஸ்ல ஒருத்தி மனைவி, இன்னொருத்தி அம்மாவாயிருக்கும்!

நான் பிறந்த ஊர் "ரை" என் மனைவி ஊர் "ராந்தகம்"
கேள்விப்படாத ஊருங்களா இருக்கே?
டாக்டர் என்னை "மது" உபயோகப்படுத்த கூடாதுன்னு சொல்லியிருக்காரே!

போன வருஷ தீபாவளிக்கு உங்க கடையில வாங்கின ஸ்வீட் எல்லாம் நல்லா இருந்துச்சுங்க!
அது அப்படியேத்தான் இருக்குதுங்க! ஒரு ரெண்டு கிலோ கொடுக்கட்டுமா

வேளாவேளைக்கு சாப்பிடுங்க! வாரம் ஒரு தடவை எண்ணெய் தேய்ச்சு குளிங்க! வீட்டை பத்திரமா பாத்துக்குங்கன்னு சொல்லிட்டு உங்க மனைவி எங்க போறாங்க! ஊருக்கா?
  இல்லே! ஜவுளி கடைக்கு

கண் முன்னால சின்ன சின்னதா பூச்சி பறந்தது.. கண் டாக்டரை பார்த்து கண்ணாடி போட்டுகிட்டேன்!
 இப்ப எப்படி இருக்குது!
பூச்சி பெருசு பெருசா இருக்குது!


ஆஸ்பத்திரி வாசல்ல குடை ராட்டினம் நிறுத்தி வைச்சிருக்கீங்களே! எதுக்கு டாக்டர்?
திடீர்னு மயக்க மருந்து தீர்ந்துட்டா பேஷண்டை அதுல உட்கார வைச்சு சுத்திவிடத்தான்!

என்ன மாடல் ஜாக்கெட் தைக்கனும்? ஜன்னல் வெச்சா? கதவு வெச்சா?
 என்னம்மோ "புல்லட் புருப்" ஜாக்கெட்னு சொல்றாங்களே அந்த மாடல்ல தைச்சுக்கொடுங்க!

இந்த ஊழலில் உங்கள் பங்கு என்ன?
இன்னும் பிரிக்கவில்லை யுவர் ஆனர்!

திறந்து வைக்க கூட்டிட்டு போனவங்களை தலைவர் கண்டபடியா திட்டிட்டு வர்றாரே ஏன்?
 பீர் பாட்டிலை கொடுத்து திறக்கச் சொல்லிட்டாங்களாம்!

நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்தால் ஓவ்வொருவருக்கும்
ஆண்ட்ரியா போன் இலவசமாக வழங்கப்படும்!
 தலைவரே அது ஆண்ட்ராய்டு போன்!

2 comments:

  1. நான் சுட்ட பழத்தையே சுட்டூட்டீங்களே பாஸ்!

    ReplyDelete

அனானிகளானாலும் வரவேற்கப்படுகிறார்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...