சர்தார் புனேயிலிருந்து சண்டிகர் செல்லும்விமானத்தில் ஏறுகிறார்.மூன்று சீட் உள்ள வரிசையில்அவருக்கு நடுவில் இருந்த சீட் ஒதுக்கப்பட்டிருந்தது.ஆனால் ஜன்னலோரம் இருந்த சீட்டில் உட்கார்ந்துகொண்டார். அது ஒருவயதான பெண்மணிக்கு ஒதுக்கப்பட்டிருக்க, அந்தப்பெண்மணி தன்னுடையசீட்டை தனக்குவிட்டுத்தருமாறு கேட்கிறார்.
சர்தார் : அதெல்லாம்முடியாது. நான் வெளியேவேடிக்கை பாத்துக்கிட்டுதான்வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அதுமுடியும்.
பெண்மணி:பணிப்பெண்ணிடம், எனக்கு என் சீட்டை ஒதுக்கிக்கொடுங்க.இந்த ஆள் டார்ச்சர் பண்றான்.
பணிப்பெண்:சார் தயவுசெய்து இவுங்களுக்குஅந்த சீட்டைக் கொடுத்து உங்க சீட்டுல
உட்காருங்க.
சர்தார் : அதெல்லாம்முடியாது. நான் வெளியேவேடிக்கை பாத்துக்கிட்டுதான்வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அதுமுடியும்.
விமான துணை கேப்டன் :சார் தயவுசெஞ்சி சீட்டவிட்டுக்கொடுங்க சார்.கெஞ்சிக்
கேக்கிறேன் சார்.
சர்தார் : அதெல்லாம்முடியாது. நான் வெளியேவேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அதுமுடியும்.
கேப்டன் வருகிறார். நடந்தவிபரங்களைக் கேட்கிறார்.சர்தார்ஜியின் காதில்மெதுவாக எதையோகூறுகிறார். அதிர்ந்துபோன சர்தார் தன்னுடைய சீட்டுக்குமாறிக்கொள்கிறார்.
ஆச்சரியமடைந்த மற்றவர்கள் கேப்டனிடம் தனியே சென்று என்னசொன்னீர்கள் எனக் கேட்க,அவர் பதிலளிக்கிறார்.ஒன்னுமில்லை ஜெண்டில்மென்… நடுவுல இருக்கற சீட் மட்டும்தான்சண்டிகர் போகும். மற்றசீட்கள் எல்லாம் குஜராத்போகும்னு சொன்னேன்.அவ்வளவுதான்.
ஒரு சர்தார்ஜி பால்கனில வேடிக்கை பார்த்துட்டு இருந்தப்போ ஒருத்தன் ஓடிவந்து
பூட்டாசிங் உன் தம்பிஆக்ஸிடன்ட்ல பூட்டான்ன்னான்.
தம்பியே செத்துட்டான் இனி எனக்கென்ன? ன்னுபொசுக்குன்னு மாடில இருந்து குதிச்சிட்டார்.பாதி வழில ஒருபைப்பை புடிச்சுக்கிட்டு'ஓ'ன்னு அழ ஆரம்பிச்சார்.மாடில தகவல்சொன்னவன் ஏன்யா அழறன்னுகேட்டான்,இவரு,எனக்குதம்பியே இல்லைப்பா,இவ்ளோ முட்டாளா இருக்கேனேன்னு திரும்ப குதிச்சார்.ஆனா காயத்தோடதப்பிச்சிட்டார், திரும்ப 'ஓ' ன்னு அழ ஆரம்பிச்சார்.
இப்ப ஏன்யா அழற?
நான் பூட்டாசிங்கேஇல்லைப்பா
நம்ம சர்தார்ஜி வேலைக்குஅப்ளிகேஷன் போட ஃபார்ம் எழுதிட்டிருக்கார்.பேரு, ஊரு,முகவரி எல்லாமே எழுதிட்டார். நடுவில "Salary Expected" அப்டின்னு வந்திருக்கு , ரொம்ப நேரம்யோசிச்சு தயங்கி தயங்கி கடைசியா எழுதினார் "Yes".
சந்தா-சிங் மருதுவமனையில் அனுமதிக்கப்பட்டு சாவுக்கு போராடிக்கொன்டிருந்தார். அவர் கட்டில் அருகில் அவர் குடும்பத்தார்கள் நின்றிருந்தார்கள். அவர் நிலைமை மோசமாகிக்கொண்டிருந்தது. அவர் கூடவே அவர் நண்பர் பன்டா-சிங் நின்றிருந்தார். சந்தா இறக்கும் தருவாயில் ஒரு பேனாவும் கடதாசியும் கேட்டார். கொடுத்தார்கள். எழுதி முடிந்த கையோடு இறத்து விட்டார்.
பன்டா யோசித்தார்.....இது சந்தா இறக்கும் தறுவாயில் எழுதியது. இதில் எதாவது முக்கிய விசயம் இருக்கும். எனவே இது சாகவாசமாக பார்க்கவேண்டிய விடயம் எனவே தனது சட்டைப் பையில் வைத்து விட்டார்.
எல்லா கிரிகைகளும் முடிந்து மூன்றாம் நாள், பன்டா தனது நண்பர் வீட்டிற்கு போனார். பேசிக்கொன்டிருக்கும் போதுதான், சந்தா இறக்கும் போது இந்த சட்டை போட்டிருந்தேன் என்ற ஞாபகம் வந்தது. சந்தா குடும்பத்தார் அனைவரையும் கூப்பிட்டார். "இது ஒரு முக்கிய கடிதம். சந்தா இறக்கும் போது எழுதி என்னிடம் கொடுத்து விட்டு போனது" என்று சொல்லிவிட்டு பிரித்து வாசிக்க ஆரம்பித்து விட்டார். " பன்டா, மடையா, நீ என் ஒ..க்..க்..க்..க் ........................... " அவரால் மீதி வாசிக்க முடியவில்லை. விழி பிதுங்கியது. எனவே மற்றவர்கள் அதை பறித்து வாசித்தார்கள். அதில் எழுதப்பட்டிருந்தது.
"பன்டா, மடையா, நீ என் ஒக்சிசன் குழாய் மீது நிக்கிறாய், கொஞ்சம் விலகு "
எல்லாம் இணையத்தில் படித்தது.
1 Comments
ஹா... ஹா... ஓஹோஹோ... ஹா... ஹா...
ReplyDeleteDrop Anything