10/22/12

கலாய்த்தலும் காமடியும்..!

மனைவி: என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவருதான் என்னை பொண்ணு பார்க்க வந்தாரு. நான் பிடிக்கலைன்னு சொன்னதுனால அதை நினைச்சே தண்ணியடிக்க ஆரம்பிச்சுட்டாரு.

கணவன்: அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடுறான்

கமலா : என்னடி, எப்ப பார்த்தாலும் ஒரு கழுதை உன் பின்னாடியே வந்துட்டு இருக்கு?

விமலா :  என் எ‌தி‌ர்‌த்த வீட்டு பைய‌ன் குடுத்த லவ் லெட்டரை இதுகிட்ட தா‌ன் தின்ன கொடுத்தேன். அதா‌ன்... அவன மாதிரியே இதுவும் பின்னாடியே வருது

கணவனும் மனைவியும் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தார்கள். அங்கிருந்த குரங்குகளைப் பார்த்து,

கணவன் : உன்னுடைய சொந்தக்காரங்க இங்கே இருக்காங்க!

மனைவி : ஆமாம். என்னுடைய மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்


இக்பால் செல்வன் : என்னுடைய மனைவியை ரொம்ப நேரமாத் தேடிக்கிட்டுயிருக்கேன். என்கூட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்க முடியுமா?

பெண் : அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

இக்பால் செல்வன்: நான் வேறு பெண்கள்கிட்ட பேசினாலே என் மனைவி எங்கயிருந்தாலும் வந்துடுவா.

போலீஸ் அதிகாரி: இப்படி மொட்டையா வந்து புகார் கொடுத்தா ஏத்துக்க மாட்டோம்...

தருமி : என்ன ஸார் அநியாயமா இருக்கு... அப்ப என் தலையில முடி வளர்ற வரைக்கும் நான் புகாரே கொடுக்க முடியாதா?!


அறிஞர் இக்பால் செல்வன் ஒருநாள் லிப்டில் வைத்து.

என்ன சார், இரயில் பிரயாணம் எல்லாம் சௌகர்யமா இருந்ததா?"

"இல்லைங்க, upper Berth குடுத்துட்டாங்க. ரொம்பக் கஷ்டமாப் போச்சு"

"Lower Birth" காரங்க கிட்டே சொல்லி மாத்திக்க வேண்டியதுதானே?""

இந்த ஐடியா எனக்கு வராமப் போயிருக்குமா,

கீழ் பெர்த்திலே யாருமே இல்லை. யாரைக் கேக்கிறது?"

மலேசியா சதுப்புநிலத்தீவில் அறிஞர் கோவி கண்ணன்.

"இந்தாப்பா, கொஞ்சம் சாம்பார் கொண்டா"

"அறிவு இருக்கா… யாரைப் பாத்து சாம்பார் கேக்கறே?"

"சாரி சார். இங்கேதான் இடம் காலியா இருக்கே… உட்காருங்களேன்; ஏன் அங்கே நிக்கறீங்க?"

"நான் உட்கார்ந்துட்டேன்னா "டேபிளை" எல்லாம் எவன்ய்யா துடைப்பான்?"

3 comments:

 1. இதுக்கு முதல் சுவைக்காதவைகள்
  படங்கள் கலக்கல்

  ReplyDelete
 2. போலிஸ் ஜோக், குரங்கு ஜோக்
  இரண்டும் அருமை.
  படங்களும் சூப்பர்!

  ReplyDelete
 3. தலைவரே சூப்பர் , கலக்குறிங்க.

  ReplyDelete

அனானிகளானாலும் வரவேற்கப்படுகிறார்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...