10/17/12

ஜன்னலோர விமான சீட்டுக்கு அடம்பிடித்த பிரபல பதிவர்!

கண்ணன் சிங்கப்பூரில் வசிக்கும் பிரபல தமிழ் பதிவர்! ஒரு முறை இந்தியா வந்து மீள திரும்பும்போது சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் ஏறுகிறார்.. மூன்று சீட் உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் இருந்த சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜன்னலோரம் இருந்த சீட்டில் உட்கார்ந்து கொண்டார். அது ஒரு வயதான பெண்மணிக்கு ஒதுக்கப்பட்டிருக்க, அந்தப் பெண்மணி தன்னுடைய சீட்டை தனக்கு விட்டுத்தருமாறு கேட்கிறார்.


கண்ணன் : அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். நான் ஒரு பிரபல பதிவர்! வேடிக்கை பார்த்தவற்றையெல்லாம் நாளை பதிவாக எழுதி பரபரப்பான தலைப்பிட்டு தமிழ்மணத்தில் சூடான இடுகையில் இடம்பிடிக்கவேண்டும் ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது எல்லாம் முடியும்.!

பெண்மணி : (விமான பணிப்பெண்ணிடம்) எனக்கு என் சீட்டை ஒதுக்கிக் கொடுங்க. இந்த ஆள் டார்ச்சர் பண்றான்.என்னென்னமோ உளர்றான்..
பணிப்பெண் : சார் தயவுசெய்து இவுங்களுக்கு அந்த சீட்டைக் கொடுத்து உங்க சீட்டுல உட்காருங்க.
கண்ணன் : அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். நான் ஒரு பிரபல பதிவர்! வேடிக்கை பார்த்தவற்றையெல்லாம் நாளை பதிவாக எழுதி பரபரப்பான தலைப்பிட்டு தமிழ்மணத்தில் சூடான இடுகையில் இடம்பிடிக்கவேண்டும் ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது எல்லாம் முடியும்!.

அங்கே நடந்த கலவரத்தைப்பார்த்து விமான துனைக்கேப்டனும் அங்கே வருகிறார்..
விமான துணை கேப்டன் : சார் தயவுசெஞ்சி சீட்ட விட்டுக்கொடுங்க சார். கெஞ்சிக் கேக்கிறேன் சார். அடம்பிடிக்காம அந்த அம்மாவுக்கு சீட்ட கொடுத்துட்டு உங்க சீட்ல உட்காருங்க!
கண்ணன் : அதெல்லாம் முடியாதுய்யா. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். நான் ஒரு பிரபல பதிவர்! வேடிக்கை பார்த்தவற்றையெல்லாம் நாளை பதிவாக எழுதி பரபரப்பான தலைப்பிட்டு தமிழ்மணத்தில் சூடான இடுகையில் இடம்பிடிக்கவேண்டும் நிறைய ஹிட்ஸ் வாங்க வேண்டும் நிறைய கமெண்ட் வாங்க வேண்டும்..! ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது எல்லாம் முடியும்!.

கேப்டன்( விஜயகாந்த் அல்ல விமானக்கேப்டன்) வருகிறார். நடந்த விபரங்களைக் கேட்கிறார். கண்ணன் காதில் மெதுவாக எதையோ கூறுகிறார். அதிர்ந்துபோன கண்ணன், தன்னுடைய சீட்டுக்கு மாறிக்கொள்கிறார்.

ஆச்சரியமடைந்த மற்றவர்கள் கேப்டனிடம் தனியே சென்று என்ன சொன்னீர்கள் எனக் கேட்க, அவர் பதிலளிக்கிறார். ஒன்னுமில்லை ஜெண்டில்மென்… நடுவுல இருக்கற சீட் மட்டும்தான் சிங்கப்பூர் போகும். மற்ற சீட்கள் எல்லாம் சவுதி அரேபியா போகும்னு சொன்னேன். அவ்வளவுதான்.!!

6 comments:

 1. கேபிள் சங்கரை ஒட்டற மாதிரி இருக்கு??

  ReplyDelete
  Replies
  1. இல்ல.. பதிவுலகிற்கு நீங்க புதுசு போல!

   Delete
 2. கோவி கண்ணன்!! Anyway அருமை ஹா......ஹா............ஹா............

  ReplyDelete
  Replies
  1. நீங்களாக நினைத்துக்கொண்டால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல! :-)

   Delete
 3. ஏங்க அவரை சீண்டுறிங்க , இப்போதான் நல்ல பிள்ளையாய் சதுப்பு நில காடுகளுக்கு டூர் போய் வந்து இருக்கிறார், இருந்தாலும் உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி.

  ReplyDelete
 4. யாரையோ கலாய்க்கிறீங்கண்ணு தெரியுது...நடத்துங்க நடத்துங்க :)

  ReplyDelete

அனானிகளானாலும் வரவேற்கப்படுகிறார்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...