10/16/12

சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி அப்படின்னா என்னங்க..!


கள்ள நோட்டு அடிச்சு, நீ எப்படி போலீஸ்ல மாட்டினே? 
ரிசர்வ் பேங்க், கவர்கனர் கையெழுத்து போடுற இடத்துல, குப்பு சாமின்னு என் கையெழுத்தை போட்டுட்டேன்...!


மனைவி : " என்னங்க! இதுவரைக்கும் ரெண்டு பேரா இருந்து வந்த நாம, இனிமே மூணு பேரா ஆகப் போறோம்"
கணவன் : " அடி கள்ளி… எங்கிட்ட சொல்லவே இல்லையே….
எத்தனை மாசம் ?"
மனைவி : " அதில்லைங்க எங்கம்மாவும் நம்ம கூடவே வந்து செட்டில் ஆகப் போறாங்க"

மகேஷ் : " பிரபல கடத்தல் மன்னன் வளர்த்த நாய் செத்துப்போச்சாமே? எப்படி?"
தினேஷ் : "பின்னே… நாய்க்கு, தங்க பிஸ்கெட்டை போட்டு சாப்பிட வச்சிருக்கான்"


பொண்ணு - என்னோட மொபைல் எப்பவுமே என்னோட அம்மா கையில்தான் இருக்கும்.
பையன் - அய்யோ, நான் போன் பண்றப்ப என்னோட பெயர் வருமே...கண்டுபிடிச்சுட்டா...?
பொண்ணு -உன்னோட பெயரை நான் 'பேட்டரி லோ' அப்படின்னு ஸ்டோர் பண்ணி வச்சிருக்கேன். உன்னோட போன் வந்தா அம்மா போனை என்கிட்ட கொடுத்து சார்ஜ் போட சொல்வாங்க. நான் ரூமுக்குள்ள போய் உன்கிட்ட பேசுவேன்..எப்பூடி...!


மனைவி: என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவருதான் என்னை பொண்ணு பார்க்க வந்தாரு. நான் பிடிக்கலைன்னு சொன்னதுனால அதை நினைச்சே தண்ணியடிக்க ஆரம்பிச்சுட்டாரு.
கணவன்: அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடுறான்..


மனைவி : ஏங்க சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி அப்படின்னா என்னங்க..
நம்மாள் : நீ ஊருக்குப்போனா அது சனிப்பெயர்ச்சி..
போயிட்டு அப்படியே உன்தங்கையையும் கூட்டிக்கிட்டு வந்தா அதான்
குருப்பெயர்ச்சி..

ஐய‌ர் : மாப்பிள்ளை சீக்கிர‌ம், ந‌ல்ல‌ நேர‌ம் முடிய‌ற‌துக்குள்ள‌ தாலிய‌ க‌ட்டுங்க‌.
மாப்பிள்ளை : தாலி க‌ட்டிட்டாலே ந‌ல்ல‌ நேர‌ம் முடிஞ்ச‌ மாதிரிதானே.

தந்தை: எப்பவும் உன்னை முட்டாள்னு சொல்ற உங்க மிஸ், நான் கணக்கு போட்டு கொடுத்தப்புறம் என்ன சொல்றாங்க?
மகன்: இப்ப முட்டா பய மகனேன்னு திட்ட்ரங்க டாடி.
தந்தை: ?!?!?!


2 comments:

  1. கடைசி ஜோக் சூப்பர்.

    ReplyDelete
  2. எல்லா ஜோக்ஸும் புதுசாயிருக்கே? சூப்பர்!!

    ReplyDelete

அனானிகளானாலும் வரவேற்கப்படுகிறார்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...