தொழில்னு வந்துட்டா ராத்திரி, பகல்னு பார்க்க முடியுமா.


நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?
யாரோ இங்கே தமிழாசிரியர் யாருன்னு இவரைக் கேட்டதுக்கு அடியேன் அடியேன்னு சொல்லியிருக்காரு.

என்னுடைய அலாரக்கடிகாரம் முதல்முறையாக இன்று என்னை எழுப்பியது.
எப்படி?
என் மனைவி அதைக்கொண்டு என் மண்டையில் ஓங்கி ஓர் அடி கொடுத்தாள்.

வெறும் கையால் மின்சார கம்பிகளை நம்மால் தொட முடியுமா?
ஓ, ஒரே ஒரு முறை தொடமுடியுமே!

நிருபர்: நீங்க சமீபத்திலே நடிச்சு வெளிவந்த பயங்கரப் படத்தைப் பார்த்தேனுங்க.
நடிகை: அது பயங்கரப் படம் இல்லேங்க. நான் மேக்கப் இல்லாம நடிச்ச முதல் படம்



ஒரு ஹெச்.ஆர். எக்ஸிக்யூடிவ் பொண்ணு இறந்து எமலோகம் போனாங்களாம். 
அங்க எமதர்மன் "வாழ்த்துக்கள் நீங்க சொர்க்கம் போக தகுதியானவங்க ஆனா அதுக்கு முன்னாடி ஒரு நாள் சொர்க்கத்திலயும் ஒரு நாள் நரகத்திலயும் தங்கணும் அப்புறம் சொர்க்கமா நரகமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கலாம்"னார்.
அவங்க "இல்ல நான் இப்பவே சொர்க்கமே போறேன் எதுக்கு நேரத்த வேஸ்ட் பண்ணனும்?"னாங்க.
அவர் "இது இங்க ரூல்ஸ் நீங்க ஃபாலோ பண்ணித்தான் தீரனும்"ங்க... அவங்களும் முதல்ல நரகம் போயி ஒரு நாள் தங்க முடிவு பண்ணி போனாங்க.
அது நரகம் மாறியே இல்ல அழகான பூங்கா அங்க இவளோட ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்க நாள் முழுக்க பூமிக்கதை எல்லாம் பேசினாங்க.அப்புறம் சாத்தான் வந்தாரு அவளோட ஃப்ரென்ட்ஸ் அறிமுகப்படுத்தி வைக்க அவரும் நல்லாவே பேசினாரு ஆளு பாக்கவும் ரொம்ப க்யூட். அவளுக்கு நரகத்த விட்டு வரவே மனசில்ல.ஒரு நாள் முடிஞ்சு போக நரகமே இப்படி நல்லா இருக்கே சொர்க்கம் எப்படி இருக்கும்னு போயி பாத்தா யாரும் யாரோடும் பேசவே இல்ல பூ பறிக்கறதும் சாமி கும்பிடறதுமாவே இருந்திருக்காங்க இவளுக்கு பயங்கர போர்.
கடைசியா எமன் " நீங்க எங்க போக முடிவு பண்ணிருக்கிறீங்க "ன்னு கேக்க அவ " நான் நரகத்துக்கே போறேன் சொர்க்கத்த விட அது தான் நல்லா இருக்கு"ன்னா.எமன் " நல்லா யோசிச்சுக்கங்க போனா திரும்பி வரமுடியாது"ங்க அவ பிடிவாதமா இருக்க நரகத்துல விட்டு கதவ சாத்திட்டாங்களாம்.
இப்போ பாத்தா முன்ன இருந்த அழகான பூங்கா மாறி பாலைவனமாகி அவளோட ஃப்ரென்ட்ஸ் எல்லாம் கஷ்டப்பட்டு வேலை செஞ்சிட்டு இருந்தாங்களாம்.சாத்தான் கூட மேக்-அப் இல்லாத நடிகை கணக்கா கர்ண கொடூரமா இளிச்சானாம்.அவ ஒண்ணும் புரியாம "என்ன இது நேத்த விட எல்லாமே மாறி இருக்கு"ன்னு கேக்க அதுக்கு சாத்தான் சொன்னானாம் ,
"நேத்து உங்களுக்கு நடந்தது இன்டர்வியூ இன்னைக்கு நீங்க ஒரு எம்ப்ளாயீ"



தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.
மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.

உங்க பையன் கோவிலுக்குப் போனா அதிகமா பொய் பேசறானே, ஏன்?
கோவிலுக்குள்ளே போனதும் அவன் மெய் மறந்துடுவான்.

நண்பர் 1: என்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க...? 
நண்பர் 2: நான் தான் சொன்னேன்ல... பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு!

நண்பர் 1: எங்க தலைவர் தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்துவாரு...
நண்பர் 2: எங்க தலைவரு 'சிக்கனோட' பயன்படுத்துவாரு.

நண்பர் 1: உங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்? 
நண்பர் 2: அது 'ஈஸி' சேராச்சே!



"என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."
"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"
"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"

நீதிபதி: பட்டப் பகல்ல ஏன் திருடினே?
திருடன்: தொழில்னு வந்துட்டா ராத்திரி, பகல்னு பார்க்க முடியுமா.. எஜமான்!

ஆசிரியர்: உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம் !
அம்மா: அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார் !


என்னமோ மாதிரியிருக்கு. குடிக்க ஏதாவது கொடேன்”
சூடாவா? இல்ல ஜில்லுன்னு வேணுமா?
”தலையை வலிக்கிற மாதிரியிருக்கு. சூடாவே கொடு”.
காபியா? இல்லே டீயா?
ம்.. காபியே கொடு.
பில்டர் காபி வேணுமா? அல்லது புரூ காப்பியா?
பில்டர் காபி தான் எனக்குப் பிடிக்கும். அதையே கொடு.
நரசுஸ் காபித் தூள்ல போடவா? இல்ல காபி டேயா?
நரசுஸ் தூள்லேயே போடு.
ஸ்டிராங்கா வேணுமா? இல்லேன்னா லைட்டா வேணுமா?
ஸ்டிராங்காவே இருக்கட்டும்.
சர்க்கரை போட்டு வேணுமா? இல்லேன்னா போடாமலா?
சர்க்கரை போட்டே கொடு.
கிளாசுலே வேணுமா? இல்ல டம்ளரில தரவா?
”சே! ஒங்கிட்ட போய் காபி கேட்டேன் பாரு, என் புத்தியைச் செருப்பால
அடிக்கணும்”
”ஒன் செருப்பாலயா? இல்ல, என் செருப்பாலயா?”

Post a Comment

7 Comments

  1. ஹா... ஹா... ஹா... கலக்கல்...

    ReplyDelete
  2. அருமையான நகைச்சுவை.. you made my day! thanks.

    ReplyDelete
  3. கலக்கல் ஜோக்ஸ்

    ReplyDelete
  4. தலைப்பை வேறு மாதிரி நினைச்சு பல்பு வாங்கிட்டேன் !

    ReplyDelete
  5. Anonymous11.12.13

    ஒரு சில நகைச்சுவைகள் ஏற்கனவே படித்திருந்தாலும், மீண்டும் நினைவுபடுத்தியமைக்கு நன்றி. அனைத்தும் சுவை.

    ReplyDelete
  6. நகையோ நகை! சுவையோ சுவை! இரசித்தேன்!

    ReplyDelete
  7. கலக்கல் ஜோக்ஸ்!

    ReplyDelete

Drop Anything