அனுஷ்கா ஆறடி அழகுச்சிலை!

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் யாரோ வருவார் யாரோ போவார் போவதும் வருவதும் தெரியாதே. இந்த பாடல் வரிகள் போல, நாம் ரசிக்கும் சினிமாவிலும் நடிகைகள் என்ற பெயரில் எத்தனையோ எத்தனையோ அழகு பதுமைகள் நாள்தோறும் அணிவகுப்பாளர்கள். ஆனாலும்,அவர்களில் ஒரு சிலரே மனிதில் இடம்பிடித்து தங்கிச்செல்வார்கள். அந்த வகையில் இந்த மங்களூரில் பிறந்த மல்கோவா அனுஷ்காவும் ஒருவர். இவரின் இயற்பெயர் ஸ்வீட்டியாம். எப்படி பொருத்தம் பார்த்திங்களா?

அசாதாரன ஆறடி உயரம், அழகு முகம், மஞ்சல் தேகம், சின்ன சிவந்த உதடு, சில்லென்ற புன்னகை. சிறிய இடை, அழகான நடை இதுதான் இந்த தேவதையின் பயோகிராபி. இவர் ஒரு யோகா டீச்சராம். அழகை ஆராதிக்கும் ஆந்திர தெலுங்கு சினிமா இவரையும் ஆட்டத்துக்கு சேர்த்துக்கொண்டது 2005 யில் பூரி ஜெகன்னாத்தின் Super என்ற படத்தில் நாகர்ஜீனாவுக்கு ஜோடியாக. அதே வருடத்தில் வெற்றிப்பட இயக்குனர் ராஜமௌலியின் விக்ரமாகுடுவில் தெலுங்கின் இன்னுமொரு மாஸ் நடிகர் ரவிதேஜாவுடன் நடிக்கும் வாய்ப்பு. அப்படம் ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றி பெற இவரின் புகழும் வாய்ப்புகளும் பல்கிப்பெருகியது.

சாதாரன நடிகைகளையே தெலுங்குவாலாக்கள் புரட்டி எடுத்து விடுவார்கள். அழகுப்பதுமை அனுஷ்காவை விடுவார்களா அவருக்கும் அதே நிலைதான். தெலுங்கு படங்களில் ஒரு பாடலிலாவது நாயகியை கடலிலோ ஏரியிலோ குளிக்கவைத்து, நனையவைத்து, குத்தாட்டம் போட வைத்து என்ன என்ன சில்மிஷங்கள் பண்ணமுடியுமோ அத்தனையும் செய்து துவைத்து எடுப்பார்கள் அந்த விளையாட்டுக்களிலிருந்து அனுஷ்காவும் தப்பவில்லை! இப்படியான விளையாட்டுக்களை தெலுங்கு இயக்குனர்களும் நடிகர்களும் தொடர்ச்சியாகவே செய்பவர்கள். இதில் ஓரிருவரை தவிர வேறு யாரும் விதிவிலக்கல்ல அதுவும் புதிய நாயகிகள் ரவிதேஜா போன்ற பொம்பளை பொறுக்கிகள் கைகளில் கிடைத்தால் அவ்வளவுதான். இவற்றை மறுப்பதால் வாய்ப்புகள் பறிபோய்விடும் என்ற பயத்தாலும் பணத்தாசையாலும் இவற்றுக்கெல்லாம் ஒத்துக்கொள்கிறார்கள்.

தமிழில் இவரை முதலில் பயன்படுத்தியது சுந்தர் சி தான். ரெண்டு படம் மூலம். அப்போது பெரிதாக தமிழ் இயக்குனர்கள் ரசிகர்கள் கண்களில் இவர் படவில்லை. தமிழனுக்கு குண்டான கொழுக்மொழுக் நடிகைகளையும் மலயாள கப்பக்கிழங்குகளையும் பிடிக்கும் அளவிற்கு இவ்வாரனவர்களை பிடிப்பதில்லை என்பது உண்மைதான்.என்ன கேவலமான ரசனை! ஆனாலும் அண்மைய ஆண்டுகளிலிருந்து தமிழ் இயக்குனர்கள் அனுஷ்கா பக்கம் நாடியிருப்பது அவருக்கான தமிழ்ப்பட வாய்ப்புகளிலிரிந்து தெரிய வருகிறது. வேடைக்காரன், சிங்கம், தெய்வத்திருமகள், வானம், தாண்டவம், இரண்டாம் உல்கம் என அந்த தேவதை தமிழனுக்கும் கருனை காட்ட தொடங்கிவிட்டார். வாழ்த்துக்கள் அனுஷ்கா.



Post a Comment

0 Comments