இந்த நாய் எனக்கு வாடகைக்கு கிடைக்குமா?'

அண்ணாசாமி ஒரு நாள் ஒரு டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார்.அப்போது சுடுகாட்டிற்கு
2 சடலங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.அவற்றுடன் நாயுடன் ஒருவர் செல்ல அவர் பின்னால் ஒருவர் பின் ஒருவராக
கிட்டத்தட்ட 500பேர் சென்றுக்கொண்டிருந்தனர்.அதைப் பார்த்த அண்ணாசாமிக்கு ஆச்சர்யம்.!
பத்தவச்சிட்டியே பரட்ட!!

டீக்கடைக்காரரிடம்
நான் எவ்வளவோ பிண ஊர்வலங்களைப் பார்த்திருக்கிறேன்..ஆனால் இவ்வளவு ஒழுங்காக ஒருவர் பின் ஒருவராக
சென்று பார்த்ததில்லை..ஆமாம் ..யாருடைய ஊர்வலம் இது? என்றார்.

அவர் நாயுடன் செல்பவரை சுட்டிக்காட்டி 'அவரைக் கேளுங்கள்' என்றார்.
நாயுடன் செல்பவர் சொன்னார்'முதலில் சென்றது என் மனைவி..'

'ஆமாம் ..அவருக்கு என்னவாயிற்று?'

என் நாய் அவளைக்கடித்து விட்டது.இரண்டாவது பிணம் என் மாமியார்..என் மனைவியைக் காப்பாற்ற சென்றவரை
என் நாய் கடித்து விட்டது.

உடனே ஆவலுடன் அண்ணாசாமி' இந்த நாய் எனக்கு வாடகைக்கு கிடைக்குமா?' என்றார்.

வரிசையில் போய் நில்லுங்கள் என்றார்...நாயுடன் சென்றவர்.
அண்ணாசாமி 501வது ஆளாக வரிசையில் நின்றார். 



ஒரு கனவன் போன வேலை பாதியிலேயே கேன்சல் ஆயிட்டதால திரும்பி வீட்டுக்கு வந்தான், மனைவிக்கு தகவல் சொல்லாமலே.கதவ ரொம்ப நேரமா தட்டி அப்புறந்தான் திறந்தாள் மனைவி.


இவ்வளவு நேரம் என்ன பண்ணின? 
அதுவந்து குளிச்சிட்டு இருந்தேன்... 


வரவர நீ சரியில்ல ஹே.. இதென்ன களிமண் சிலை!!!
அது... நேத்து ஸ்மித் வீட்டுல இதே மாதிரி சிலை பாத்தேன் அதான் ஒண்ணு ஆர்டர் பண்ணிட்டேன்.. 


ஹ்ம்ம் வெட்டி செலவு! 


அதுக்கப்புறம் அவன் கண்டுக்கல, நைட் ரெண்டு மணி மனைவி தூங்கிட்டாளான்னு பாத்துட்டு ப்ரெட், தண்ணி கொண்டு போயி சிலை கிட்ட சாப்பிடுன்னான்.சிலையா நடிச்சவனுக்கு ரொம்ப ஆச்சர்யம்!!


ரொம்ப நன்றி சார் எப்படி கண்டு பிடிச்சீங்க? 


ஹ்ம்ம் ஸ்மித் வீட்ல சிலையா நின்னது நாந்தான், மூணு நாள் பயபுள்ளங்க பச்சத்தண்ணி கூட எவனும் தரலை!!


Post a Comment

4 Comments

  1. என்னய்யா இப்படி அக்கிரமம் பண்ணறீங்க? உங்களைக் கேட்பார் யாரும் கிடையாதா? :)

    ReplyDelete
  2. நல்ல நகைச் சுவை!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  3. நானும் வரிசையில் நின்றுவிட்டேன்
    அருமையான நகைச்சுவை பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

Drop Anything