உலகில் பொய் பித்தலாட்டாம் போன்றவற்றாலும் தன் வாதத்திறமையாலும் பல குற்றவாளிகளை காப்பாற்றி, நிரபராதிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்து கொண்டிருந்த ஒரு பிரபல வக்கீல் இறந்து பரலோகம் போனாராம்! 

பரலோகத்தில் சொர்க்கத்தை கண்ட வக்கீல் ஆசையோடு சொர்க்கம் பக்கம் நடந்து போனாராம்.வாசலிலேயே ஒரு தேவதை தடுத்து நிறுத்தி "நீங்கள் வக்கீலா?" என்றார்.
அவரும் "ஆமாம்" என்றார்.
தேவதை,"இல்லை சொர்க்கத்திற்குள் வக்கீல்களை நாங்கள் அனுமதிப்பதில்லை!

"ஒரு நிமிஷம் நான் நல்லவன் உண்மையிலேயே"
"அப்படியா...சரி எப்படி ஒப்புக்கொள்வது?"

"ஆஹ்... நான் நிறையப்பேருக்கு உதவி செய்திருக்கிறேன் தர்மம் வழங்கியிருக்கிறேன். இறப்பதற்கு மூன்று நாட்கள் முன்பு பசியில் இருந்த ஒருவருக்கு பத்து ரூபாய் கொடுத்தேன்! 

நேற்று கூட வீடில்லாத ஒருவருக்கு ஐந்து ரூபாய் கொடுத்தேன்,சாவதற்கு ஒரு நிமிடம் முன்பு கூட ஒரு பிச்சைக்காரனுக்கு இரண்டு ரூபாய் கொடுத்தேன்.

"ஓ.. சரி ஒரு நிமிடம் இருங்கள் கடவுளிடம் பேசி விட்டு வருகிறேன்"

கொஞ்ச நேரம் கழித்து வந்த தேவதை."இந்தாருங்கள் உங்கள் 17 ரூபாய்!
கூட சேர்த்து 3 ரூபாயோடு 20 ரூபாயை பிடியுங்கள்.. 

ஜஸ்ட் YOU..GO TO THE HELL...!"