கணவன் மனைவி கலாட்டா..!



ஒரு சந்தோஷமான தம்பதியோட அறுபதாவது வருட திருமண நாள் அன்னைக்கு "எப்டி இவளோ ஒற்றுமையா உங்களால குடும்பம் நடத்த முடிஞ்சது?"ன்னு புருஷன் கிட்ட கேட்டாங்க.அவரு தன்னோட நினைவுகள்ள மூழ்க ஆரம்பிச்சார் "அப்ப எங்களுக்கு ஹனி மூன் நாங்க ஊட்டில குதிர சவாரி பண்ணிட்டிருந்தோம், அது அவளோட குதிரை!.ரெண்டு பேரும் குதிரையை கூட்டிட்டு நடந்து போய்ட்டிருந்தோம், குதிரை திடீர்னு முரண்டு பிடிச்சது அவ ஒழுங்கா வான்னு அதட்டுனா, நான் 'ஏன் கோபப்படுற'ன்னு கேட்டேன் அவ எதும் பேசல. திரும்ப முரண்டு பிடிச்சது,திரும்ப ஒழுங்கா வான்னா 'ரெண்டு தடவ தான் சொல்லணும் மூணாவது தடவ எதுத்தா சுட்டுடணும்'னு தனக்கு தானே சொல்லிட்டு துப்பாக்கிய துடைச்சா நான் விளையாட்டுக்கு சொல்றாள்னு விட்டுட்டேன்.திரும்ப குதிரை முரண்டு பிடிச்சது, பொசுக்குன்னு சுட்டுட்டா. நான் கோபமா ஏன் சுட்டேன்னு கேட்டேன்,என்ன ஒரு மாதிரி கோபமா பாத்துட்டே துப்பாக்கிய துடைச்சா...ஹ்ம்ம்ம்...அப்புறம் ஆயிடிச்சு அறுபது வருஷம்"


டியர் ஹஸ்பெண்ட்,
உங்களை விட்டு பிரிகிறேன் என்ற நற்செய்தியை சொல்லவே இக்கடிதம்.
ஒரு நல்ல மனைவியாக உங்களோடு 7 வருடங்கள் குடும்பம் நடத்தியதற்கு எனக்கென்று இப்போது எதுவும் இல்லை
அதிலும் கடைசி இரு வாரங்கள் நரகமாக இருந்தன.உங்கள் பாஸ் எனக்கு போன் பண்ணி நீங்கள் வேலையை விட்டு விட்டதாக சொன்னார்.
நீங்கள் வீட்டுக்கு வந்த போது நான் அழகாக ஹேர் கட் செய்திருந்தேன், உங்களுக்கு பிடித்த உணவு செய்திருந்தேன் மற்றும் புது இரவு உடை அணிந்திருந்தேன்
அன்று இரவு நீங்கள் வந்து சில நொடிகளில் சாப்பிட்டு விட்டு ஸ்போர்ட்ஸ் பாத்துட்டு தூங்கப்போய்ட்டீங்க
என்னைக் காதலிக்கிறேன் என்று கூட சொல்லவில்லை என் பக்கம் திரும்பக் கூட இல்லை

நீங்கள் என்னை ஏமாற்றுகிறீர்களோ அல்லது காதலிக்கவில்லையோ என நினைக்கிறேன் அதனால் நான் உங்களைப் பிரிய முடிவெடுத்து விட்டேன்

பின் குறிப்பு: என்னைத் தேட வேண்டாம், நானும் உங்கள் நண்பர் ஜானும் அவர் சொந்த ஊருக்கு செல்கிறோம்
முன்னாள் மனைவி

------------------

அன்புள்ள முன்னால் மனைவிக்கு,
உன் கடிதத்தை விட மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஏதும் இல்லை
நாம் ஏழு வருடங்கள் ஒன்றாக இருந்ததையே பெரிய சாதனையாகக் கருதுகிறேன்
நான் ஸ்போர்ட்ஸ் அதிகமாக பார்க்க காரணமே உன் தொணதொணப்பு தாங்காமல் தான் ஆனால் அது ஒரு போதும் பலனளித்ததில்லை

உன் ஹேர்கட்டை நான் கவனித்தேன் "ஆண் போல இருக்கிறாய்" என சொல்ல நினைத்தேன் ஆனால் நல்லதாக ஏதும் பேச முடியாவிட்டால் ஏதும் பேசாதே என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்கள் அதனால் அமைதியாகி விட்டேன்

நீ எனக்கு பிடித்தமான உணவு செய்ததாகக் கூறினாய் அனேகமாக நீ ஜானையும் என்னையும் குழப்பிக்கொண்டாய் என நினைக்கிறேன் நான் 5 வருடங்களுக்கு முன்பே கோழிக்கறி சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன்

உன் இரவு உடையையும் பார்த்தேன் அதில் விலை tag கூட இருந்தது அன்று தான் என்னிடம் ஜான் 500 ரூபா வாங்கியிருந்தான் அந்த உடை விலை 499 ரூபா இது தற்செயலானது என நம்புகிறேன்

இவை எல்லாவற்றுக்கும் அப்புறமும் நாம் பேசி சரி செய்ய முடியுமென நம்பினேன்

அதனால் தான் எனக்கு லாட்டரியில் 10 மில்லியன் டாலர் விழுந்த போது வேலையை ரிசைன் செய்து விட்டு நம் இருவருக்கும் ஜமைக்காவுக்கு டிக்கட் வாங்கினேன்

வீட்டுக்கு வந்து பார்த்தால் உன் கடிதம் தான் இருந்தது

எல்லாவற்றுக்குமே ஒரு காரணம் இருக்குமென நம்புகிறேன், முழு திருப்தி தரும் வாழ்க்கை உனக்கு கிடைக்குமென நம்புகிறேன்

உன் கடிதம் கிடைத்ததால் ஜீவனாம்சமாக சல்லிக்காசு கூட தரத் தேவையில்லை என வக்கீல் சொன்னார்
டேக் கேர்

பின் குறிப்பு: இதற்கு முன் சொன்னதாக நினைவில்லை ஜான் ஒரு ஆப்பரேஷனுக்கு முன்பு மேரியாக இருந்தவன் அது உங்கள் வாழ்க்கைக்கு பெரும் பிரச்னையாக இருக்காது என நம்புகிறேன்

விடுதலை மகிழ்ச்சியோடு முன்னால் கனவன்


ஒரு கனவன் போன வேலை பாதியிலேயே கேன்சல் ஆயிட்டதால திரும்பி வீட்டுக்கு வந்தான், மனைவிக்கு தகவல் சொல்லாமலே.கதவ ரொம்ப நேரமா தட்டி அப்புறந்தான் திறந்தா மனைவி.

இவ்வளவு நேரம் என்ன பண்ணின?
அது குளிச்சிட்டு இருந்தேன்
வரவர நீ சரியில்ல ஹே இதென்ன களிமண் சிலை...
அது... நேத்து ஸ்மித் வீட்டுல இதே மாதிரி சிலை பாத்தேன் அதான் ஒண்ணு ஆர்டர் பண்ணிட்டேன்
ஹ்ம்ம் வெட்டி செலவு

அதுக்கப்புறம் அவன் கண்டுக்கல, நைட் ரெண்டு மணி மனைவி தூங்கிட்டாளான்னு பாத்துட்டு ப்ரெட், தண்ணி கொண்டு போயி சிலை கிட்ட சாப்பிடுன்னான்.சிலையா நடிச்சவனுக்கு ரொம்ப ஆச்சர்யம்,

ரொம்ப நன்றி சார் எப்படி கண்டு பிடிச்சீங்க?
ஹ்ம்ம் ஸ்மித் வீட்ல சிலையா நின்னது நாந்தான், மூணு நாள் பச்சத்தண்ணி கூட எவனும் தரலை
அண்ணாசாமி ஒரு நாள் ஒரு டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார்.அப்போது சுடுகாட்டிற்கு
2 சடலங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.அவற்றுடன் நாயுடன் ஒருவர் செல்ல அவர் பின்னால் ஒருவர் பின் ஒருவராக
கிட்டத்தட்ட 500பேர் சென்றுக்கொண்டிருந்தனர்.அதைப் பார்த்த அண்ணாசாமிக்கு ஆச்சர்யம்.டீக்கடைக்காரரிடம்
நான் எவ்வளவோ பிண ஊர்வலங்களைப் பார்த்திருக்கிறேன்..ஆனால் இவ்வளவு ஒழுங்காக ஒருவர் பின் ஒருவராக
சென்று பார்த்ததில்லை..ஆமாம் ..யாருடைய ஊர்வலம் இது? என்றார்.
அவர் நாயுடன் செல்பவரை சுட்டிக்காட்டி 'அவரைக் கேளுங்கள்' என்றார்.
நாயுடன் செல்பவர் சொன்னார்'முதலில் சென்றது என் மனைவி..'
'ஆமாம் ..அவருக்கு என்னவாயிற்று?'
என் நாய் அவளைக்கடித்து விட்டது.இரண்டாவது பினம் என் மாமியார்..என் மனைவியைக் காப்பாற்ற சென்றவரை
என் நாய் கடித்து விட்டது.
உடனே ஆவலுடன் அண்ணாசாமி'இந்த நாய் எனக்கு வாடகைக்கு கிடைக்குமா?'என்றார்.
வரிசையில் போய் நில்லுங்கள் என்றார்...நாயுடன் சென்றவர்.
அண்ணாசாமி 501வது ஆளாக வரிசையில் நின்றார். 
நல்லா மூச்சு முட்ட குடிச்சதால ஹேங் அவுட் ஆன புருஷன் லேட்டா எழுந்து ரூம விட்டு வெளிய வந்து பாத்தான்.டைனிங் டேபிள்ல லெட்டர்,"அன்பே ஹாட் பேக்கில் சப்பாத்தி இருக்கிறது நீங்கள் களைப்பாக இருப்பீர்கள் என்று உங்கள் பாஸ்க்கு போன் பண்ணி லீவ் சொல்லிவிட்டேன் மாலை சந்திப்போம்".அவனுக்கு ஒண்ணும் புரியல , குழந்தைங்க கிட்ட,"என்னடா நடந்தது நைட்"னான்.
அது," நீங்க ரொம்ப குடிச்சிட்டு க்லாஸ் எல்லாம் உடைச்சிட்டு வாந்தி எடுத்தீங்க"
"ஆனா எல்லாம் நீட்டா இருக்கு சரி மேல சொல்லு"
"அப்புறம் அம்மா உங்கள படுக்க வைக்க ஷர்ட்,பேன்ட்லாம் கழட்டுனாங்க, நீங்க 'கையை எடு கேடு கெட்டவளே எனக்கு கல்யாணம் ஆயிடிச்சி'ன்னீங்க" 
ஒரு வெள்ளிக்கிழமை, இளைஞன் நகைக்கடைக்குள்ள ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்தான்.அங்கிருந்த ஆளை கூப்பிட்டு "என் காதலிக்கு ஒரு வைர நகை எடுக்கணும்" அப்டின்னான், அந்தப் பொண்ணை பார்த்துக்கிட்டே.

கடைக்காரரும் ஒரு நகையை காட்டி 50000 ரூபா ஆகும்னாரு.அவன் சலிச்சுக்கிட்டே,"இல்ல பாஸ் என் காதலிக்கு தர்ற நகை...யுனிக்...அப்டியே அவ்ளோ அழகா இருக்கனும்"

கடைக்காரர் ரொம்ப இம்ப்ரஸ் ஆகி ஒரு லட்ச ரூபா நகை ஒண்ணு காமிச்சார், அந்தப்பொண்ணுக்கு கண் கொள்ளல, அவன் "ஓகே ஓகே இதை பேக் பண்ணுங்க நான் செக் தர்றேன்" அப்டின்னான்.

"ஸாரி சார் செக் ஏத்துக்கறதில்ல"

"ஓகே இப்ப செக் வாங்கிக்கங்க திங்கக்கிழம பேங்க்ல பணம் இருக்கான்னு கேட்டுட்டு சொல்லுங்க அப்புறம் வாங்கிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்கள்.

திங்கட்கிழமை கடைக்காரர் கோபமாக போனில் பேசினார்,"யேய் பேங்க்ல உன் அக்கவுண்ட்ல ஒரு பைசா இல்ல எதுக்குடா வந்து ஆர்டர் பண்ணின?"

"மன்னிச்சுக்கங்க சார் ஆனா இந்த வீக் எண்ட் எப்டி போச்சு தெரியுமா?"




ரெண்டு நண்பர்கள் பேசிக்கிட்டாங்களாம்
நேத்து எனக்கும் என் வைஃப் புக்கும் பயங்கர சண்டை நான் பீச் போலாம்கறேன்
அவ சினிமா போலாம்னா
சரி கடைசில என்ன படத்துக்கு போனீங்க?

Post a Comment

4 Comments

  1. உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டுதா?!

    ReplyDelete
  2. படித்தேன்,ரசித்தேன் ...மௌனதேசத்தில்'ஒ'ன்னு கூச்சல் போட மனம் வரவில்லை !

    ReplyDelete

Drop Anything